ஜெயானந்தன் உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே விழுந்த அமிர்த மழை காட்டாறாய் கவிதை பாடி, ஆடிக்கு போட்ட விதை அறுவடைக்கு ஆடின. ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீடு வந்தாச்சு. கோடீஸ்வரன் கோவிலுக்கு பூசைகள் போட கிளம்பியாச்சு தவிலுக்கும்,நாதஸ்வரங்களுக்கும் தூசிதட்டினார் வளையப்பட்டி. ஆடு மேய்க்கும் அன்னத்துக்கும் ஷீட்டி பாவாடை தச்சாச்சு. கரந்தை மூனிஸ்வரனுக்கு படையல் போட்டாள் அன்னக்கிளி.! ஆறு குளம் நிரம்பியாச்சு அயிரை […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. ‘இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு’‘எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது’‘ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா’‘ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்’‘அதான் எதுக்கு னுதான் சொல்லேன்’‘நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்’‘சரி போயிட்டு வாங்க, நானெதுக்கு?’‘யசோதா அவனுக்குப் புரியல, உனக்குதான் பொண்ணு பார்க்கறோம்.’என்று சொல்லிக் கொண்டே மடிப்புக் கலையாத காக்கி உடையில் தொப்பியைக் கையில்எடுத்துக்கொண்டு வந்தார் கோவிந்தன்.‘அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ரெண்டு வருஷம் போகட்டும்’‘நீதான் […]
வளவ. துரையன் இந்தக் குளிர்காற்றுஇன்று வீசிய வெப்பத்திற்குஇதமாகத்தான் இருக்கிறது.இன்னும் கொஞ்சநேரம்சென்றால் இரவும் குளிரும்இன்பமும் திகட்டுமன்றோ?உச்சந்தலையில் உறைக்கும்வெப்பத்தின் சுவடுகள்உள்ளங்கால் வரைஊடுருவிப் பார்க்கின்ற்ன.இதுவே பழகிவிடும்போலிருக்கிறது.துன்பத்திலும் இன்பமா?பகல்முழுதும்எல்லாச் சாலைகளும்பாலையாகித்தலைவனைப்பிரிந்ததலைவியாகத் தவிக்கின்றன.மாலையில் கூட வரும்மஞ்சள் வெளிச்சமும்அச்சமூட்டுகிறது.இன்னும் சற்று நேரத்தில்வௌவாலும் ஆந்தையும்வட்டமிட வந்துவிடும்.
வளவ. துரையன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும் இப்படி இருக்காது. அம்மாவிற்கு வானொலி கேட்பது மிகவும் பிடிக்கும். அது காலை முதல் அலறிக்கொண்டே இருக்கும்.புரிகிறதோ இல்லையோ அம்மாவிற்கு அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.“ஏம்மா இப்படி” எனக் கேட்டால் ”அந்த சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தா வீட்ல யாரோ தொணைக்கு இருக்காங்கன்னுக்கு எனக்கு நெனப்பு” என்று அம்மா சொல்லிவிட்டாள்.அம்மா […]
நா. வெங்கடேசன் [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்மணாளன் தன் அன்பு மனையாளின்ஆசை முகந்தனில்கப்பிய காதலுடன்அப்பிய குங்குமப் பூக்குழம்புபூச்சு போலாச்சே![ஶ்ரீம.பா.10.29.3]குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்தகுமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதியகுங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட கோவிந்தன் குழலூதினாரே!கோகுலத்து கோபியர்கள் […]
அமீதம்மாள் வெட்டுக்கிளிக் கூட்டம்சிட்டுக்குருவியைத்தின்றுவிட்டனநெகிழி ஆப்பிள்கள்அசல் ஆப்பிளைஅழித்துவிட்டதுகற்பூரத்தில்கருவாட்டின் வாசம்பாலையும் இரத்தத்தையும்மென்பொருள்செய்கிறதுசெயற்கை நுண்ணறிவுநெய்த ஆடைநிர்வானம் மூடவில்லைபுணர்தலின்றிபிள்ளை குட்டிகள்ஊடகங்களில்பொய்களுக்கேபூமாலைகடல்களுக்குமேய்ச்சல் நிலமாய்பூமிமண்ணை வெல்லமனிதக் கொலைகள்விவசாய நிலங்களில்வெடிகுண்டு விதைகள்பற்றி எரிகிறதுமொத்தக்காடும்உதிக்கிறது சாம்பலில்புதிய காடுஅமீதாம்மாள்
ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின் வடுவாக. வருட சேமிப்புவாசலில் சிதைந்த கோவத்தில்தொரத்திப் பிடிக்கவியலாத ஆற்றாமையில்விலாசிய கம்புமுதுகில்தோல் தெரித்துஇரத்த கசிவானதுஅறுபதுக்கும்ஆறுக்குமான அணுக்கத்தில். துக்க வீட்டின் துயரத்தைப்போலஅய்யாவும்அக்காக்களும்அன்றைய பொழுதில்அழுததைப்போலபிறகு நடந்தபேரிழப்புகளெதிலும் கண்டதில்லைஅவ்வகச்சேர்மான மெய்யை. வேதனையில்விழிக்கும் பொழுதெல்லாம்விளக்கொளியில்மயிலிறகால்தடவிய படி இருக்கும்காட்சிஎந்த ஜென்மத்திலும்அழியாதுபடிமமாகிவிட்டஅய்யாவின் அன்பின்திளைப்பால். சலிக்காமல்சமன் […]