ஒரு விதை இருந்தது

This entry is part 10 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஆரா 3030 , ஆம் ஆண்டு ,———அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான்  ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ மக்கள் பழக்கப்படுத்தபட்டுவிட்டனர்எண்கள் தான்  பெயர்கள் எண்கள்  ஆண்களுக்குஒற்றைப்படையில் பெண்களுக்கு  இரட்டைப்படையில்(கே  1)   k 1 ( thalaivar president ),பெருந்தலைவர்k 2  )) thalaivi  –  பெருந்தலைவிஇருவருக்கும் சமபொறுப்புகள்கடைசி  ரசாயன  யுத்தத்தில் உலக நாடுகள்பயனற்று சாம்பலாயினஇவர்கள்  செவ்வாயிற்கு வந்து 300 ஆண்டுகள் கடந்து விட்டனதண்ணீரைக்கண்டுபிடிக்க வெகு நாளானது வந்த ஆயிரம்பேரில் எஞ்சியவர்கள்  100பேர்தான்அதில் […]

கவிதை என்பது யாதெனின்

This entry is part 9 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல் ! அலை அலையாய் அடிக்கும் ஆலயமணி போல். அசரீரி போல் சொல்லும் வானிலிருந்து. உன் எதிரே கூசாமல் உரைக்கும். பையிக்குள் இருந்து குரான், பைபிள், குறள் போல் வழிகாட்டும். குத்தூசி போல் புகுந்து உடல் நோய்க்கு மருந்து தரும். தூங்கும் ஆத்மாவை எழுப்பி தூங்காமல் வைக்கும். ஆத்மாவின் ஆணி வேரை […]

ஆம் இல்லையாம்

This entry is part 8 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.களைத்துப்போகச் செய்தாலும்புண்ணாக்கினாலும்ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின் பின்னாலும்ஓடியோடித் தேடியபடியேநாம்…….

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

This entry is part 7 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு – 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம்.  ஆனால் “கோதாவரிக் குண்டு”வில் வரும் நம்ம ஆள் இருக்கிறாரே, அவர் எதிர்கொள்ளும் விதத்தை எல்லாம் பார்த்தால், உங்களுக்குத் தூக்கி வாரிப் போடும். கதைசொல்லிதான் நம்ம ஆள். அவர் வீட்டுக்குப் பழைய பேப்பர்க்காரன் வருகிறான். அவன் இவரை ஏமாற்றுவான் என்று இவருக்கே திட்டவட்டமாகத் […]

சூம்

This entry is part 6 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது அது ‘சூம்’ என்றானது சூமின் கைதியாய் சுயம் ஆனது பாலைவனமானது சுயம் கானல்நீரானது விடுதலை கண்ணாடி பார்த்தது சுயம் அங்கே பிம்பம் காணவில்லை ‘ஏய் நீ எங்கே போனாய்’ ‘லண்டனில் பேசிக் கொண்டிருக்கிறேன்’ ‘நான் என்ன செய்வது’ ‘தூங்கு’ அமீதாம்மாள்

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?

This entry is part 5 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது?  எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது. இதுக்கு முன்னால நுங்கம்பாக்கத்தில் இருந்த வீடு நினைவுக்கு வருது. இப்போ   அடையார் பக்கம் வீடு மாத்திக்கிட்டுப் போனோம். அஃது என்னவோ ஒரு நகர். சாஸ்திரியா? காந்தியா? இந்திராவா? சுத்தமா நினைவுக்கு வரலையே. வயசாயிடுச்சா?  எந்தப் பஸ்ல ஏறது? […]

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

This entry is part 4 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.       அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டு வியந்தேன்.       கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? – உன்       கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?       என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்களும் கேட்டு இருப்பீர்கள். ஜெய்சங்கரும் […]

பெருந்தொற்றின் காலத்தில்

This entry is part 18 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் நடந்து- நன்கு தெரியும் என்னை அதற்கு – ஆனால் தெரியாதது போல் கடக்கிறது  என்னை வெறிச்சோடிய வீதி (3) “வெளியே” நடை செல்ல முடியாமல்- ஒற்றைத் தென்னை உரைக்கும்: ” நிற்கிற அதே இடத்திலேயே நட என்னைப் போல்- ‘வெளியே’ உன்னைச் சுற்றி-” (4) தனித்து- […]

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

This entry is part 3 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல  அமைதியாக இருக்கிறேன் மனசு தான்  அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற  பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் இருக்கிறேன் ஒரு பிடி அரிசி இல்லை வயிற்றுக்குள் கரையான்கள் நிலவும் சூரியனும் தவறாமல் வந்து போகின்றன அழகான பெண்கள் என் கனவுகளில் நடனமாடுகிறார்கள் என் வெளிச்சமற்ற அறை இரவுகளில் நடுங்குகிறது துர்வாசமடிக்கும் உடுப்புகள்  என் உடலை போர்த்தியிருக்கின்றன பகலில் ஜன்னலருகே வந்து ஒரு சிட்டுக்குருவி என்னிடம்  பேசி விட்டுப் போகிறது தூரத்து […]

சின்னக் காதல் கதை

This entry is part 2 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய  பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் வீசிப் போனது. வானில் வட்டமிட்டலைந்த பருந்தொன்று அதைக் கொத்தித் தூக்கி கொத்திக் கொத்தி கல்லென நினைத்து குளத்தில் எறிந்தது. குள மீன்கள்‍‍ கூடிக் கடித்துக் கடித்து நெகிழித் துண்டென்று முடிவுசெய்து நீரில் மிதக்க விட்டு விட்டன. நீரில் குதித்தாட வந்த  சிறு பிள்ளைகள் சிவப்பு பழமென எடுத்து மரக்கட்டையென  […]