சாத்திய யன்னல்கள்

This entry is part 30 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

  ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல் உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும். இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள் அறுதியான வாதம். ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென தூங்குவதாயொரு பாவனை. நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம் எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று… நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத் துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும். அதிசயமாயவள் […]

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்

This entry is part 29 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை.   வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை.   இன்னும் பிடிவாதமாய் நிலாவை அழைத்தது. வரவே இல்லை.   கோபத்தில் குழந்தை நிலாவோடு டூ விட்டது. அடுத்த நாள் நிலா பிறை வடிவில் எட்டிப் பார்த்த போது குழந்தை கண்ணை அடைத்துக் கொண்டது.   சிறிதாய் நிலா கண் இமைகளின் இடைவெளியில் எம்பி நுழைய முற்படுகையில் கண்ணை இன்னும் இறுக்கிக் கொண்டது.   அப்போதும் நிலா எப்படியோ கண்ணுக்குள் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

This entry is part 41 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான். ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை செய்து ஆள்பவரின் நேர்மைக்கு […]

நதிகளில் நீந்தும் நகரங்கள்:-

This entry is part 28 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தொங்கும் தோட்டங்கள்., மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்., நதிகளில் நீந்தும் நகரங்கள் இவற்றில் சேகரமாகிறது ஆசை. புகைப்படங்களில்., திரைப்படங்களில் தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும். பசிய., கனிய தோட்டங்களும் தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும் நகரங்களையும் காண சேர்கிறது விழைவு, வேண்டுதல் முடிச்சைப் போல எடுத்துவைக்கும் பணம் போதுமானதாயில்லை வருடா வருடமும் வீங்கும் பணத்தால். மூட்டையான முடிச்சோடு பயணித்து அக்கம்பக்க மரம் கண்டு., நீர்ப்படகுச் சவாரி செய்வதில் களிக்கிறது மனது. வெனிஸ் நகரத்து வர்த்தகனாய்த் தோற்றமளிக்கிறான் அந்த ரெஸார்ட்டில் பாடி நடனமாடும் இளைஞன். […]

நேரத்தில் மனிதனின் நெடும் பயணம்

This entry is part 27 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .  மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப […]

வல்லரசாவோமா..!

This entry is part 26 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

  முழுப் பூசணிக்காய்கள் முற்றிலுமாய் மறைக்கப்படுகின்றன சோற்றுக்குள்.. மீறியும் தெரிந்தால், அதை மறைக்க அறப்போராட்டங்கள்.. திகார் கம்பிகளுக்கும் தெரியாமல் வெளியே தவறிழைக்கும் வாரிசுகள்.. ஆணவ அரசியலில், அக்கரையில்லாமல் போச்சுது மக்கள் மீது.. போவது தெரியாததுபோல் நடிக்கும் பொம்மை அரசுகள்.. ஊழலை எதிர்ப்பவன் கோமாளியாக்கப்படும் கொடூரம்.. எப்போது எங்கே வெடிக்குமோ என்று மக்களை ஏங்கவைத்திடும் திசைதெரியா தீவிரவாத அச்சுறுத்தல்.. தெரிந்தே ஏமாறுவோம் என்ற தெளிவிலே மக்கள்.. தெரிந்து சொல்- வந்துவிட்டதா நாம் வல்லரசாகும் காலம் !        […]

சுவர்களின் குறிப்புகளில்…

This entry is part 25 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு வாய்வு நிறைத்த வயிறும் பசிக்கும் மனதோடுமாய் ஞாபகத் திணறலோடு மூப்பின் உதிர்வொன்று. ஜாடைகள்  அப்பிய முகங்களோடு தலைமுறை காவும் நீ…ண்ட  நிழல்கள் சிரித்த முறைத்த ஞாபகச் சுவரோடு வெப்ப மூச்சு விட்டு விட்டு ஒடுங்க ஓடி ஒளித்து விளையாடிய கண்ணாடி மைதானத்து பல்லிகளும் இல்லாமல். காட்டிச் சொல்லும் தடயங்களை காணாமல் போனவர்கள் பைகளில் திணித்தவர்கள் […]

பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ? (கட்டுரை 2)

This entry is part 24 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

(Was Earth’s Original Water Delivered  By Ice-Covered Asteroids ?) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோளின் மாதிரி மண்ணை எடுத்து வையத்தில் இறக்கியது ஜப்பான் ஹயபுசா விண்ணுளவி ! அயான் எஞ்சினை முடுக்கி ஆமை வேகத்தில் மில்லியன் மைல் பயணம் செய்து முரண்கோள் வெஸ்டாவை முற்றுகை இட்டது நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி ! நான்கு வருடம் பறந்து எண்பது மைல் ஆழம் வரை நீர்ப்பனி போர்த்திய செரிஸ் முரண்கோளை நெருங்கிச் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2

This entry is part 23 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது தீமைகளில் மிகவும் தீவிரமானது, குற்றங்களில் மிகக் கொடியது வறுமை.  நமது முதற் பணி ஏழ்மையை இல்லாமல் செய்வதே.  அதற்காக நாம் எதையும் தியாகம் செய்யகத் தயாராக வேண்டும்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “எல்லா ஆடவரும் மாதரின் சொத்துக்களைத்தான் திருமணம் செய்து கொள்கிறார்.  அதுவே திருமணமான பெண்டிரின் உண்மையான சொத்து என்று மெய்யாக விளக்கப் படுவது.” ஆஸ்கர் […]

லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

This entry is part 22 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

நேற்று மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களும், அதன் முதுகெலும்பில்லா தன்மையும் வருமாறு: அம்சங்கள்: ௧. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், லோக் பால் மசோதா வரம்பிற்குள் வாரமாட்டார்கள். ௨. பார்லிமென்ட்-க்குள் எம்.பிக்களின் நடத்தையும் மசோதா வரம்பிற்குள் வராது. ௩. பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், அவருக்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. […]