வாளின்பயணம்

This entry is part 21 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2 வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும் கொம்புமுளைத்த ஜின்களின் காலடியோசைகளும் லத்திமுனைவீச்சுக்களும் வெகுஅருகாமையில் கேட்கின்றன. என்னை நெருங்கிவரும் வீச்சரிவாளின் ஓசை கழுத்தை துண்டித்து கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது. தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த வேம்படிமரநிழலில் துஆ செய்தேன் வாவாவென ஆவல்மேலிட தன்னை […]

பிறந்தநாள் பொம்மைகள்..:-

This entry is part 20 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின் பிரியத்தை இழந்ததாய் இருக்கின்றன. அச்சத்தோடும்., கோபத்தோடும் வெறுப்போடும்., ஆதங்கத்தோடும் ஒதுக்கப்படும் அவை பெயர் அட்டை பிய்க்கப்பட்டு கட்டிலுக்குக் கீழ் இருக்கும் பழைய பெட்டியில் அடைக்கலமாகின்றன. இன்னொரு குழந்தையின் பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.

இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்

This entry is part 19 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெண்ணிற இரவுகளைக் கைகளில் சேகரித்து யாரும் கானவியலாதொரு தேசம் நோக்கி ஓடினேன்.. யாருமற்ற அவ்வெளியில் சாம்பல் மலர்களாலான மழை பெய்து கொண்டிருக்க தோளில் உருபெற்ற வலி மெல்ல மெல்ல பயணித்து விரல்கள் வழி இரவுகளை நனைக்க சில்லிட்டது எனக்கு.. குளிர்ந்து விட்ட கைகளில் நடுங்கிய இரவுகள் மெல்ல உடல்பெருத்து விடியல்களாய் பூப்பெய்து கொண்டிருந்தன..

ஜென் ஒரு புரிதல் பகுதி -5

This entry is part 18 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? இவ்வுலகிற்கா ? (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா ? விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது? இது தெளிவாகாத வரை ஆன்மீகம் ஒரு வேண்டப்படா […]

பயணங்கள்

This entry is part 17 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கடுமையான டிராபிக் ஜாமில் ஹனீஸ். எப்படியும் பள்ளிகூடத்தை சென்றடைய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். +2 கணித தேர்வு இன்னும் 10 நிமிடத்தில் ஆரம்பித்து விடும்.பாதையில் விபத்தா? மந்திரி வருகின்றாரா? என்ன எளவோ எதனால் இத்தனை தாமதம். எந்த வாகனமும் ஒரு அடி கூட நகரவில்லை. என்ன செய்வது என்றே புரியவில்லை.சீக்கிரம் பள்ளிக் கூடம் போவனும் “யா அல்லாஹ் …யாஅல்லாஹ் எனக்கு கருணை செய் ரப்பே” பரிதவித்தான் ஹனீஸ். 000 ஹனீஸ் +2 வின் […]

“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை

This entry is part 16 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

‘‘தமிழ்ச் செம்மொழி வரலாறு’’ என்ற தலைப்பில் முனைவர் சி.சேதுராமன் உருவாக்கியுள்ள நூலானது தமதிழ்ச் செம்மொழியான திறத்தை உளிய உரைநடையால் உணர்த்தும் சிறந்த நூலாகும். இந்நூலில் 9 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. 110 பக்கங்களைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழி குறித்த அடிப்படையான தகவல்கள், அரிய செய்திகள், சான்றுகள் நூலில் நுண்மான் நுழைபுல அறிவுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கியப் பராம்பரியம் உள்ள பண்டை மொழிகளுள் ஒன்றாகும். தமிழ் உலகம் தழுவி வாழும் ஒரு மொழிக் […]

நூலிழை

This entry is part 15 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கவிதைக்கும்,பொய்க்கும் உள்ள தூரம் கனவுக்கும்,நனவுக்கும் உள்ள தூரம் நிழலுக்கும்,நிஜத்திற்கும் உள்ள தூரம் ஒப்பனைக்கும்,இயல்பிற்கும் உள்ள தூரம் அடங்கலுக்கும்,மீறலுக்கும் உள்ள தூரம் மனதிற்கும்,நினைவிற்கும் உள்ள தூரம் சொல்லுக்கும்,பொருளுக்கும் உள்ள தூரம் விழிப்பிற்கும்,உறங்கற்கும் உள்ள தூரம் உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம்…. சின்னப்பயல் – chinnappayal@gmail.com

கூடு

This entry is part 14 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன. ஊருவிட்டு ஊரு வந்து […]

அறமற்ற மறம்

This entry is part 13 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் போ. அடுத்த வின்டருக்கு நீ தயாராயிடுவே ” என்று சாமித்துரை அவன் வந்த புதிதில் சொல்லிச் சிரித்தார். வந்த ஒரு வாரம் அவர் கூடத்தான் அவன் தங்கியிருந்தான். அப்புறம் சரோஜினி நகரில் ஒரு பஞ்சாபி […]

விடியல்

This entry is part 12 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ராதிகாவின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்த திருமணம் . ராதிகா வீட்டின் கண்மணி . புத்திசாலி . இன்ஜினியரிங் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிட்டாள். பிடித்த கணிதத்தில் பி.ஹெச்டி பட்டம் .உள்ளூர் கல்லூரியில் வேலை . பேசுவதில் , எழுதுவதில் எல்லாவற்றிலும் தெளிவு . பிறரைப் புண்படுத்தியதாக நிகழ்ச்சியே கிடையாது . யாராவது சுள் என்று பேசினாலும் ஒரு இளம் புன்னகையால் ஒதுக்கிவிடுவாள் . அவளுடைய வாழ்க்கையில் ஒரு மரண அடி . ராஜரத்தினம் உள்ளூரில் இருப்பவன். […]