ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
வெங்கடேசன் நாராயணஸ்வாமி எப்போதுமுள்ள மௌனமே நம்மிடையே - நாம் நம்முள் உறைவதின் அத்தாக்ஷியாய், நம்மிருப்பே இடையறாத சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், பார்க்காத மாதிரிதான், பார்க்காது இருந்தாலும், பார்த்துக் கொண்டிருப்பது போல்தான். ஒன்றாயிருப்பது…
வெங்கடேசன் நாராயணஸ்வாமி பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, சிகரெட் புகையுள்ளே வராமலிருக்க. காற்றைக் குறை கூறுவானேன்?
குடைபிடி ஞாபகங்களில் எச்சரிக்கின்றது வயோதிகம். குழந்தையின் மழலைப்போல போய்விடுகின்றது கால்கள். குளிரில் அணைத்தப்படி செல்லும் இளசுகளின் உரசலில் என் வாலிபத்தின் விலாச முத்திரை தெரியும். எங்கோ போய்விட்ட அறுந்த காத்தாடியின் நூலை பிடிக்க அலையும் …
இறக்கிவிட்ட ரயில் வெகுதூரம் சென்றுவிட்டது சில ஞாபக விலாசங்களோடு. "ஏதோ நினைவுகள் மலருதே...," பாடிய குருட்டு பிச்சைக்காரனை கைத்தடியில் அழைத்து செல்லும் சிறுமி . கடலை பர்பி கைக்குட்டை விற்று செல்லும் நொண்டி அண்ணன். …
ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல தோழியாக என்னை தேர்ந்தெடுத்தாய் நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும் அமிழ்ந்தெழுந்து ஆறுதல் அளித்தேன் உனக்கு நான் வெகு காலத்திற்கு பிறகு தான் தெரிந்தது…