குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் வருவான் எனக் கூறி நதியினுள் போய் மறைந்து போனாள் கங்கை.வாக்கை மீறிய சந்தனுவின் ஒரு கேள்வியால் உயிர் பிழைத்த கங்கா புத்திரனான பீஷ்மர் வாலிப வயதை எட்டியிருந்தார்.அவர் உலாவும் நதிக்கரையோரம் ஒரு விடிகாலைப் பொழுதில் […]
சிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் •பார்முலாவை நாடோடிகள் படத்தில் கையாண்ட இயக்குனர், இதிலும் அதையே தொடர்கிறார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது, இவர் கை தேர்ந்த ரசிக நாடி இயக்குனர் என்று காட்டுகிறது. பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இருவர் கதாநாயகர்கள். காற்று அடிக்கும் பெண்ணும் குரூப் டான்ஸ் நடிகையும் கதை நாயகிகள். கரடி வேசம், காண்டாமிருக வேசம் எனப் போடும் ரூம் மேட். ஒண்டு குடுத்தன […]
சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள் ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு ’உர்’ரென்றது சிலிர்ந்து நின்றதைப்பார்த்து பூனைக்குட்டி சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை நான் கடக்கையில் லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து பூட்டிய கேட்டினுள் விட கூம்பு போல் உடலை உயர்த்தி ஓடிச்சென்று கூரையில் தங்கியது திரும்புகையில் கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும் […]
விதைத்து விட்டிருக்கும் வாழ்வியலின் கவன சிதறல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது . மூன்றாம் வயதின் நினைவின் மீது இக்கணம் அமர்ந்திருக்கிறேன் . அப்பா மளிகை கடை கொண்டிருந்த காலம் தினமும் முத்தங்களும் ஐந்து காசும் ,பத்து காசும் கிடைத்திருந்தது உணர்த்தி செல்லும் நினைவுகளும் அறிவதற்கில்லை நாங்கள் பெற்றிருந்த அகமகிழ்வை. பின் காலத்தின் பயணம் தொடங்கியது அனைத்தும் நின்றது . வேறு வகையின் பயணம் இனிதே தொடங்கியது . குத்தகை நிலமொன்று இருந்த காலம் […]
பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து வாங்கிவரும்படி எனக்கு நிர்வாகம் கட்டளையிட்டிருந்தது. இரண்டு நாட்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வையாளர் வளாகத்தில் அமர்ந்துகொண்டு நான் கையோடு கொண்டுசென்றிருந்த புத்தகங்களையெல்லாம் படித்ததுதான் […]
குருவிக்கும் யானைக்கும் சண்டை அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த காட்டானை ஒன்று வெய்யில் தாள முடியாமல் நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் ஒதுங்கியது. மதம் பிடித்துக் கண்மூடிப்போன அந்த யானை, குருவிக் குடும்பம் இருக்கும் மரக்கிளையை துதிக்கை நுனியால் இழுத்து ஒடித்தது. கிளை ஒடிந்து குருவி வைத்திருந்த முட்டைகள் எல்லாம் கீழே […]
ஹெச்.ஜி.ரசூல் ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா.. என்பது குறித்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது.பீர்முகமது அப்பாவின் பாடல்களைப் புரிந்து கொள்ளுதல் தொடர்பாக சகோதரர்கள் சாகிர் அலி,பஷீர்,சாஜித் அகமது, ஹாமீம்முஸ்தபா முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட நண்பர்களும் எதிர்தரப்பில் சகோதரர் கெளஸ்முகமது,அஸ்லம்,ஷறபு உள்ளிட்ட நண்பர்களும் விவாதம் புரிகின்றனர். இதில் எனது சார்பாக எனக்குத் தென்பட்ட சில கருதுகோள்களை முன்வைக்கிறேன். 1) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக நெஞ்சுருகச் சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கிறித்துவ ஆலயத்தில் தொழுவோன் ஆயினும் சரி, மண்டியிட்டு இஸ்லாமிய மசூதியில் வழிபடுவோன் ஆயினும் சரி யாராக நீ இருப்பினும் உன்னை நான் நேசிக்கிறேன் என் சகோதரனே ! நீயும் நானும் ஒரே நம்பிக்கையில் உதித்த பிள்ளைகள்தான் ! மதங்களின் வெவ்வேறு பாதைகளில் இருப்பவை ஓர் உன்னத அதிபனின் அன்புக் கரத்தில் உள்ள ஒரே மாதிரி விரல்கள்தான் ! அவை நமக்கெல்லாம் பூரண ஆன்மாவாக […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு நிர்வாண மனிதன் ஆற்று நீரிலே குதித்தான் வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி ரீங்காரம் செய்யும் போது ! நதியின் தூய நீரோட்டம் தான் கடவுளை நினைக்க வைப்பது ! இறைவன் தவிர வேறெந்த மெய்ப்பாடும் இல்லை இவ்வுலகில் ! இறைவன் ஒருவனே ! மனிதனின் காம இச்சையை நினைவூட்டும், தலையை வலம்வரும் வண்டுகள் ! மனிதனுக்கு வனிதை இவளா […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “பீட்டர் ! சல்வேசன் சாவடியை யாரும் மூடப் போவதில்லை. அதன் அடுப்பில் எப்போதும் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கும். எப்போதும் உள்ள சலுகை இங்கே உனக்கு இன்னும் இருக்கும். என் மேஜர் வேலைதான் இப்போது போய் விட்டது ! நானும் உன்னைப் போல் இப்போது வேலை இழந்து தவிக்கிறேன் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் […]