பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில். பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது. அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்து […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -10 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 18 & படம் : 19 [இணைக்கப் பட்டுள்ளன] ++++++++++++++++++ காட்சி ஆறு முடிவை நோக்கிச் சீதா [படம் :1] இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், […]
கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம். மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட். இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் […]
’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும் உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள […]
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை…… 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை…… dR.SRK “தத்துவமில்லாத நடைமுறை மலட்டுத்தனமானது; நடைமுறையே இல்லாத தத்துவம் குருட்டுத்தனமானது” வாங்க வாங்க… என்னங்க தத்துவ மழையாப் பொழிஞ்சிக்கிட்டு வர்ரீங்க…..“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்”, “கல்விக்கழகு கசடற மொழிதல்”, என்னங்க நம்ம முன்னோர்கள் […]
வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது . மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை. அழுத்தமான தரவுகளற்ற புனைவு என்றாலும் இந்த வரலாறு இப்படித்தான் இருந்திருக்கக்கூடுமென்ற உணர்வை ஒரு கோட்டுச்சித்திரமாக இன்றைய தலைமுறைக்கு வெள்ளையானை விதைத்திருக்கிறது. சென்னை கடற்கரைச்சாலையில் விவேகாநந்தர் இல்ல நிறுத்தத்தில் இறங்க பேரூந்துகளில் இன்னும் ஐஸ் […]
பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து வருவது போல் இருக்கும். அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க. குழந்தை முதல் நாள் விடாது அழும். இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும். மூன்றாம் நாள் மனதுக்குள்ளே கிணற்றுக்குள் அழும். இப்போதெல்லாம் குழந்தை அழுவதில்லையாம். குழந்தை ‘ஏ, பி, சி, டி’ யெல்லாம் சொல்லும். ‘டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார்’ என்று ’ரைம்ஸ்’ எல்லாம் […]
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் […]
நானும் பல்லியும் கரப்பானும் சாம்பல் மற்றும் கறுப்பு நிற கொட்டுப்பூச்சிகளும் ஒட்டடைகளும் என இது நகர்கிறது……………………. என் விடியலின் போது நீ தூங்கிக் கொண்டிருக்கக்கூடும்… உன் பக்கத்தில் என்னால் கற்பனை செய்ய முடியாது போன எவனோ ஒருவன்…………. என் நிலவை உனக்கு பரிசளிக்க நினைத்தால் உன் கடற்கரையில் உங்கள் இருவரின் நிழல் உலவும்… ஆனால் காற்று வீசாது…. அலைகளும் சண்டை பிடிக்காது மூச்சு வாங்கி முழி பிதுங்கி நிற்கும். என்னையும் உன் போல் மாற்ற நீ எடுக்கும் […]
தன்க்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாத வற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் […]