சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஆறு மாதத்தில், கோப்பையில் வாழ்க்கை சார்ந்த பரபரப்புகள் அமுங்கின. பை தெயர் ஃப்ரூட்ஸ், (சாதனைகளினால்) என ஏற்கனவே பதிப்பித்த நாவலைத் திரும்ப திரிஃபீல்ட் ஆரம்பித்திருந்தார். எனக்கு நாலாவது வருடம். வார்டில் இருக்கும் நோயாளிகளின் காயங்களுக்குக் கட்டுப்போடும் வேலை எனக்கு. மருத்துவமனையின் பிரதான கூடத்துக்குப் போய் பெரிய டாக்டர் வர காத்திருந்தேன். கடித அலமாரியில் எனக்கு எதும் கடிதம் இருக்கிறதா என்று பார்த்தேன். சில சமயம் என் வின்சன்ட் […]
சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]
அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்களின் இந்த இலையுதிர் காலத்தின் நடுவே பெப்ரவரி பதினாலாம் தேதி….. பொன் வசந்தம். மலர் மழை. தேன் மின்னல். குமுழிக்கோட்டம். நுரைவனங்கள். பனிச்சொற்கள். வண்ணாத்திப்பூச்சி சிறகுகளுக்குள் வாழ்க்கைப்பாடங்கள். முள் மீது கழுவேறும் ரோஜாக்கள். இதயத்தை இன்னொரு இதயம் கத்தியாகி கசாப்பு செய்தல். ஜிகினா தடவிக்கொண்டு பொன் எழுத்துக்களை கூரிய பற்களாக்கி உயிரை உறிஞ்சும் வேலன்டைன் அட்டைகள். அந்த பெப்ரவரி இனிமேல் கொலவெரி. மாதங்களை திருத்துங்கள். கிடார் […]
பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய் இந்த வரம் வாங்கி வந்தேன். “கூடு விட்டு கூடு பாய்ந்து” மெஹந்தி பிழியும் இந்த கூம்புக்குள் கண் கூம்பி தவம் இருந்தேன். இந்த “பியூட்டி பார்லருக்குள்” அவள் இன்று இதே நேரம் வருவாள் என்று எனக்குத்தெரியும். அப்படித்தான் அவள் தோழியிடம் பெசிக்கொண்டாள். அதோ சல்வார் கம்மீஸ்களின் சரசரப்புகள் ஒலிக்கிறதே. கண்கள் மூடி காத்திருந்தேன். கனவு விரித்து கூம்புக்குள் சுருண்டு கிடந்தேன். இன்னும் சற்று நேரத்தில் அவள் பொன் காந்தள் விரல்களில் மின்னல் பூங்கொடிகளாய் […]
(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்”தாளர்”கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட ரஜனிக்கு விசில் அடித்தது. விருது விழா ============ விருதும் கூட ரஜனிக்கு விசில் அடித்தது. எஸ்.ரா ======= நவீனத்துவம் பின் நவீனத்துவம் மனக்குகையில் மத்தாப்பு கொளுத்தல் இவரது கட்டுரையே கதை. ஞாநி ==== காரம் வேண்டும் என்பதற்காக எழுத்துக்களில்.. மிளகாய்ப்பொடி..மூக்குப்பொடி..கடுக்காய் தூள் இன்னும் என்னென்னவோ. சாருநிவேதிதா ============= திகில் எழுத்துகளில் திமிங்கிலவேட்டை. […]
மாயன் இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மற்றபடி […]
அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன் நனி நன்றியன் பெஞ்சமின் லெபோ செயலர் பிரான்சு கம்பன் கழகம் .
பிசாசுகளை பிசாசு என்று சொல்லக்கூடாது நாம் புள்ளியில் மறைந்திருக்கலாம் படைப்பின் சூட்சுமம் மனிதனின் தேடுகையும் மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம் பிசாசு என்று சொல்லாதீர்கள் உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில் நான் பிசாசா என்று என் பிசாசிடம் கேட்கிறேன் அரூபமாய் புள்ளியில் மறைந்து போகிறது வீரியமற்ற கனவின் மிச்சம் போல அது வெட்கவானின் சினறிய பொழுதுகள் வீறிட்டு அலறுகையில் கையில் விளக்கேந்தி புதுச் சொல் தேடுகிறது பிசாசு தன் பெயரை அழகாக்கிக்கொள்ள மிச்சத்தில் உழல்கிறான் மனிதன் தானே பிசாசாய் […]
காதறுந்த வீடுகள் கலையா துயிலில் சுகித்திருக்க பனிபோர்த்திய மைய இரவில் குறி இசைத்தான் கெட்டகாலம் பிறக்க கெடுதிகள் நடக்குமினி நோய்மை மனிதர்களையும் கடந்த பிணமும் கண்டு கற்றறிய பற்றற்றுப் போன போதியாய் உன் மகனும் தேசாந்திரியாவான் முதிர்ந்த உடல் கிடத்தி நிம்மதிக்கான வாழ்வின் கனவு பங்கப்படாமலிருக்க பரிகாரம் உண்டிங்கு அதிகாலை எனை அடைய ஆறுதல் கொள்வாய்யெனும் ஒலி தேய தொலைந்த நித்திரையை துழாவிடத் துவங்கினோம்…
சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா கடற்கரையில் தான். அந்த அரை மணி நேர, அரையிருட்டுத் தேடல், ஒரு திகில் அனுபவம். பாண்டிராஜுக்கு வேறு களம். சிறுவர்கள் மீது அக்கறை கொண்டவராக, பசங்க படத் தில் கிடைத்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது அவருக்கு. கிளீன் மூவி கொடுக்க வேண்டும் என்கிற லட்சியமும் அதில் சேர்ந்து விடுகிறது. […]