இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இறைவன் அனைத்து உயிர்களையும் ஒன்றாகவே படைத்தான். அவ்வுயிரினங்களில் பல ஒன்றோடென்று நட்புறவுடன் வாழ்கின்றன. ஒரு சில உயிரினங்கள் ஒன்றோடென்று பிறவியிலேயே பகையுணர்வுடன் வாழ்கின்றன. அப்பகை காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது வியப்பிற்குரியதாகும். பாம்பு-கீரி, காகம்-கூகை, பூனை-எலி, உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தும் இயற்கையிலேயே ஒன்றுடன் ஒன்று பகைமை உணர்வுடன் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையை வைத்து நம்முடைய முன்னோர்கள் பல வாழ்வியல் பண்புகளை எடுத்துரைத்துள்ளனர். அதிலும் பூனை, […]
ஏ.நஸ்புள்ளாஹ் வாப்பாபற்றியதான ஒருநாட்குறிப்பிலிருந்து ஒருஆண்மரத்தின் வாழ்க்கைப்பாதைபயணப்படுகிறது. வாப்பா எனக்குப்புத்திதெரிந்த நாளிலிருந்துஒருகடலையொத்தகவலைகளையும் ஒருமலையையொத்தபாரத்தையும் சுமந்துகொண்டு கனவுகளையும்நாளைபற்றிய நம்பிக்கைகளையும் எனக்கும்என்ராத்தாவுக்கும் தம்பிக்குமாக விதைத்ததைநினைக்கும்போதெல்லாம் வாப்பாமிகவும் மனசுரீதியாகஉயர்ந்துபோனார். நாளைஒருநாள்நான்கூட வாப்பாவாகலாம். ராத்தாஉம்மாவாகலாம். தம்பியும்வாப்பாவாகலாம். அன்றையநாளில்எங்களுக்குள்ளும் இப்படிஇப்படியாகபயணப்பாதை காயப்பட்டுப்போகலாம் வாப்பாவின்நாட்குறிப்பைப்போல.
புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து […]
இவள் பாரதி நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன் எதிராளி அறியாமல் கலைத்து முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ அத்துடன் முடிக்கவோ துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று… ============= நிலத்தில் விழவும் நீரில் விழவும் நிழல் மறுக்கிறது.. காற்றில் […]
கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் […]
“கீதா.. இன்னிக்கு ராதாவுக்குப் பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறதா?” “எனக்கு ஞாபகம் இருக்கவில்லை.. ஆனால் தெரியும்..” “என்ன சொல்லறே.. புரியலையே!” “எனக்கு அவள் பிறந்த நாள் இன்று என்பது ஞாபகம் இல்லை. ஆனால் இன்று என்பதை பேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்டேன். இப்போ புரியதா?” “அப்படியா? அவளுக்கு என்ன பரிசு தரலாம்?” “நான் பரிசும் கொடுத்துட்டேன்..” “கொடுத்துட்டியா? என்னை விட்டுட்டியே?” “பைசா செலவில்லாமே.. பரிசை அனுப்பிட்டேன். நீயும் பரிசு கொடுக்கலாம்..” “என்னது செலவில்லாமையா? அப்படி என்ன பரிசு?” […]
உயிர்மையின் பிப்ரவரி இதழைக் கண்ணுறும் வேளை கிட்டியது. எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. இந்திப் படங்களைப் பற்றி எழுதிவிட்டு, ‘ஏழை படுத்தும் பாடு, தமிழ் திரைப்படத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார். பயனுள்ள விசயங்கள். இந்தி திலீப் குமாரின் கண்கள், காதல் காட்சிகளில் பேசும் என்று கமலஹாசன் சொன்னதாகத் தகவல். திலீப்குமாரின் கண்கள் பேசினால், நம்மூர் சிவாஜியின் ஒவ்வொரு அங்கங்களுமே பேசுமே! ஊட்டி வரை உறவு பாடல் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ) […]
எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. […]
விரும்பி சொன்ன பொய்கள் – என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல். கதை ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய […]
செந்தூர்புரத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ‘எடக்கு’ முருகேசனைக் கைது செய்து விட்டார்கள். அவர் என்ன வெடிகுண்டா வைத்திருந்தார்? இல்லை, தீவிரவாதி களுக்கு துணை போனாரா? எதுவும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், எட்டாப்பு பிள்ளைகளை வைத்து, தார்சாலையில், மர நிழலில், இயற்கைச் சூழலில், வகுப்பு எடுத்து விட்டார். அரசின் கவனம் தம் பள்ளியின் மேல் திரும்பும் என்றெல்லாம் அவர் எண்ணி அப்படி செயல்படவில்லை. பின் என்னதான் காரணம்? காலைப் செய்தித்தாளைப் பிரித்தவுடன், படித்த செய்திதான், அவரை அப்படி செய்யத் […]