புகலிடத்தில் வரையறைக்குள் நின்று பெண்ணியம்பேசிய ஆளுமையின் காலத்தை பதிவுசெய்த ஆவணம் ரேணுகா தனஸ்கந்தா – அவுஸ்திரேலியா இலங்கையிலும் புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் ஒரு இலக்கியத்தாரகையாக மிளிர்ந்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளரும் சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி கடந்த ஆண்டு இறுதியில் மறைந்து நாட்கள் விரைந்து ஓடி, ஒரு மாதகாலம் கடந்துவிட்ட நிலையில் அவருடைய நினைவுகளைத் தாங்கி வெளியாகியிருக்கிறது விஜயதாரகை என்னும் இமைகள் கவிழ்ந்த இலக்கிய இதழ். ” தாரகைகள் உதிரும் இயல்புள்ளவை. மீண்டும் உலகிற்கு அவை விஜயம்மேற்கொள்ளும் இயல்பையும் […]
அழகர்சாமி சக்திவேல் மருத்துவம் சொல்கிறதாமே சிறுநீர் குடிப்பது உடம்புக்கு நல்லதென்று நானும் எனது அண்ணனும் தினமும் சிறுநீர் குடிக்கும் கழிப்பறைப் பீங்கான் பாத்திரங்கள்… கழிப்பறையின் ஓர் ஓரத்தில் நானும் என் அண்ணனும் அடுத்தடுத்து.. அரைமணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஆண்களின் அழுக்கு அருவியில் எங்கள் குளியல் அறைக்குள் அகப்பட்டுக் கொண்ட என் அப்பா பீங்கானின் வாழ்க்கையோ படு மோசம்… எங்களிடமும் சொல்லுதற்கு ஒரு கதை உண்டு… உங்களுக்கு ஓர் அருவருப்பான கதை.. எங்களுக்கோ ஒரு வேதனைக் கதை. […]
சந்திப்பு: வே.தூயவன் தமிழ் நவீன இலக்கிய உலகில் திருப்பூரின் அடையாளங்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். 13 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 47 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து வாழ்வியல் பிரச்சனைகளை இலக்கியரீதியாக வெளிப்படுத்தி வருபவர். ”சாயத்திரை“ என்ற நாவலுக்கு தமிழக அரசின் பரிசு, சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான கதா விருது உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளி வந்துள்ளன. குறிப்பாக, திருப்பூர் […]
செந்தில் 2005ல் சுனாமி, 2010ல் தமிழின அழிப்பு, மீனவர் பிரச்சனை, ஊழல் வழக்குகள், 2015ல் மழையோ மழை…ஆனால் தண்ணீரை காணவில்லை..ஊரெல்லாம் குப்பையும் சாக்கடையும்…இப்படி பெரும் இழப்புகளினால், சிக்கல்களினால் ஆட்சி மாறத்தான் செய்கிறது. மக்களுக்கு இன்னும் ஜன நாயகத்தில் ஏதோ நம்பிக்கை…ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கபடும் தமிழக கட்சிகளும், மத்திய கட்சிகளும் இதையெல்லாம் தடுக்க வழி செய்யவில்லை. மக்களின் வாழ்க்கை தரம், கல்வி கட்டணம், வேலை வாய்ப்பு, இயற்க்கை மற்றும் வேளாண்மை வளர்ச்சி, நீர்வளம், விவசாயிகளின் உயர்வு குறித்தெல்லாம் எந்த […]
சேயோன் யாழ்வேந்தன் ஒரு பெரிய புரட்சிதான் சிறிய புரட்சிகளைத் தோற்றுவித்தது சிறிய புரட்சிகள் தத்தம் குட்டிப் புரட்சிகளைப் பெற்றெடுத்தன. குட்டிப் புரட்சிகள் தம் பங்குக்கு துளித்துளிப் புரட்சிகளைப் பிரசவித்தன சிறு துளிகள் பல்கிப் பெருவெள்ளமாகி புரட்சித்தாயை அடித்துக்கொண்டுபோய்விட்டது! seyonyazhvaendhan@gmail.com
(San Francisco Golden Gate Suspension Bridge) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்! பாரதியார் (பாரத தேசம்) ++++++++++++ முன்னுரை: கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் […]
வே.ம.அருச்சுணன் – மலேசியா தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம். அவரது பணி தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இனிதே அமைய வாழ்த்துவோம். இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு தரப்புகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.குறிப்பாக தைப்பூசத் திருவிழா தொடங்கிய நாள் முதல் அவ்விழா இனிதே முடியும் வரையில் […]
டாக்டர் ஜி. ஜான்சன் வரப்பில் ஒருவர் பின் ஒருவராக நடந்து வந்தோம். கோகிலத்தை முன்னே விட்டு நாங்கள் பின்தொடர்ந்தோம். பால்பிள்ளை எனக்குப் பின்னால் வந்தான். மௌனமாகவே நடந்து வந்தோம். வயல்கள் வெறிச்சோடிக் கிடந்தன. எங்களை யாரும் கவனிக்கவில்லை. சின்னத் தெருவில்தான் ஒரு சிலர் வயலுக்குச் சென்று வருகிறீரா என்று கேட்டனர். வீடு சென்றதும் திண்ணையில் பாய் விரித்து படுத்து நன்றாகத் தூங்கினேன். மனதில் பல்வேறு குழப்பங்கள் குடிகொண்டிருந்தாலும் உடன் உறக்கம் வந்துவிட்டது. மதிய உணவின்போது அம்மா எழுப்பினார். […]