குரு அரவிந்தன் கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன. தமிழர்களின் பாரம்பரியத்திற்கு அமைய பொங்கல் பற்றிய உரையும், மற்றும் மொழி, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. […]
ஆர் வத்ஸலா காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து அம்மா தந்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் கண்ணாடியில் முகம் பார்த்து அவசரமாக தலை வாரி லேசாகக் கோதிக் கொண்டு கட்டிக் கொடுக்கப் பட்ட சாப்பாடு திருத்தப்பட்ட மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுடன் ஸ்கூட்டரை உதைத்தான் எதிர்வீட்டுப் பெண் அப்போது தான் கிளம்புவாள் பணிக்கு என்றும் தெருக் கோடி வரை அவள் பின் போகலாம் என்றும் அறிந்ததனால் அவள் பெரிய அழகியல்ல என்றும் இவன் முகத்தை அவள் பார்த்ததில்லை […]
ஹிந்தியில் : ஹேமந்த் தேவ்லேகர் தமிழில் : வசந்ததீபன் நம் இருவருக்கு நடுவே ஒரு ஹார்மோனியம் ________________________________________ ஹார்மோனியத்தின் அந்தப் பக்கம் சுரங்களை தனது விரல்களின் அமுக்குதலிருந்து விழித்தெழுகிற நீ அமர்ந்து இருக்கிறாய் மற்றும் இந்த பக்கம் உன்னுடைய சுரங்களில் நாதம் நிரப்பி திரைச்சீலையால் காற்றை வீசுகிறேன் நான் ஹார்மோனியம் _ சந்தோஷ ஆரவாரம் நிரப்புகிறது ,கை_ கால்கள் நடக்கச் செய்கிறது. ஒரு புதிய பிறந்த குழந்தை இருக்கிறது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆனது நாம் இருவரும் அதற்கு […]