முட்டாள் நண்பன் ‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற எண்ணினான். வியாபாரியின் மகனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். இரண்டு மடங்காகச் சம்பளம் கொடுத்து பொறுக்கியெடுத்த நேர்த்தியான யானை, குதிரை, காலாட் படைகளைத் திரட்டினான். ராஜநீதியின் ஆறு அம்சங்களும் அறிந்த அந்த […]