ஜென் ஒரு புரிதல்- பகுதி 30

This entry is part 11 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சத்யானந்தன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது வசதியானதாக இருக்கலாம். அது திடமான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பதிவுகளில் ஞானம், மனித நேயம், பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் தெய்வத்தின் மீது […]

சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

This entry is part 10 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன் கதை விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே ” என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்” என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. […]

வளவ.துரையனின் நேர்காணல்

This entry is part 9 of 31 in the series 5 பிப்ரவரி 2012

வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் ( அன்பாதவன் ) கணினி அச்சு, வலைப்பதிவு : சிறகு இரவிச்சந்திரன் வளவனூர் அ.ப. சுப்பிரமணியன் வளவ.துரையன் ஆனது எப்படி? அறுபதுகளில் நான் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தபோது முதலில் ஈர்த்தவை மரபுக்கவிதைகள் தாம். அவற்றை எழுதி திண்டிவனம் குயில் இதழுக்கு அனுப்ப நினைத்தேன். அப்போது அறிமுகமான இலக்கிய நண்பர்கள் அனைவரும் திராவிட இயக்கத் தோழர்கள்.எனவே கடவுளின் பெயர் காட்டும் சொந்தப் பெயர் பிடிக்கவில்லை. புனைப்பெயர் வேண்டுமென எண்ணினேன். கிராமத்து […]

சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘

This entry is part 8 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் தான் என்று எண்ணி விடாதீர் கள். எந்த ஒரு படைப்பும் ஒரு பக்கத்துக்குள்ளே இருக்க வேண்டும் என்பது வரையறை. வெள்ளைத் தாளில் 24 பக்கங்கள் கொண்ட இதழ். ஒரே ஒரு விளம்பரம் மட்டும் உள் அட்டையில். விருதுநகரிலிருந்து ஜெ. விஜயலட்சுமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் என்றாலும், முழுமையாக பின்னாலிருக்கும் சூத்திர தாரி செண்பகராஜன். […]

குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை

This entry is part 7 of 31 in the series 5 பிப்ரவரி 2012

இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது. பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் அட்டையே அசத்துகிறது. தனியாக நீல பார்டரில் படைப்பாளிகளின் பெயர்கள். சபாஷ். கலைந்த கூந்தலுடன் கூடிய பெண்ணின் கோட்டோவியம் ( வரைந்தவர் ஜீவா ) எடுப்பாக இருக்கிறது. தேடி எடுத்த கதை பகுதியில் சோ. தர்மனின் ‘அஹிம்சை’ வந்திருக்கிறது. மைனா வளர்த்து அது இறந்து போக பைத்தியம் பிடித்தவர் போலாகும் அய்யா, கிளிக்குஞ்சு கிடைத்தவுடன் நார்மலாகிறார். […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)

This entry is part 6 of 31 in the series 5 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ பிறர் பின்னால் சென்று +++++++++++++++++++ கூக்குரல் மெதுவாய் நிற்கிறது ஓநாய் வருகுது ஓடுகிறோம் வெவ்வேறு திசைகளில் கிடைத்துள்ள ஆதாயங் களை நினைத்துக் கொண்டு ! ஆனால் எதுவும் நீடித்து மிதப்ப தில்லை. மௌனம் படியுது வாயிலும் காதிலும் ! சிரம் ஒவ்வொன்றும் அப்பால் தணிகிறது ! பிறரைப் பல்லாண்டு பின்பற்றி என்னைத் தெரிந்திட முயன்றேன் ! உள்ளிருந்து கொண்டு செய்வ தென்ன […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12

This entry is part 5 of 31 in the series 5 பிப்ரவரி 2012

சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]

ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2

This entry is part 4 of 31 in the series 5 பிப்ரவரி 2012

மாயன் இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்… இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம். மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது. […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்

This entry is part 3 of 31 in the series 5 பிப்ரவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் […]

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

This entry is part 2 of 31 in the series 5 பிப்ரவரி 2012

‘ஓ பரமபிதாவே’ துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது வானமும் அதிர்ந்த நாளதில் உயர் மருத்துவம் மகளை எப்படியும் காப்பாற்றிடும் நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக ஆச்சியும் வந்திருந்தாள் பார்வையாள விருந்தினராக இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும் அவர்களுக்கென்று யாரும் வராத வாயிலையே பார்த்தபடி எப்பொழுதும் கட்டிலருகே […]