இந்த பகுதியில், எவ்வாறு டெம்போரல் லோப் வலிப்பு நோய், ஒரு புதிய மதத்தை உருவாக்கியது என்பதை பார்க்கலாம். அதே நேரத்தில் எவ்வாறு ஒரு புதிய மதம், அதற்கு முன்னால் வந்த மதங்களின் நீட்சியாகவும், அதே நேரத்தில் அதன் தூய வடிவாகவும் தன்னை தகவமைத்துகொள்கிறது என்பதையும் காணலாம். தற்போதைய அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர்களில் முதலாவதாக வந்துகொண்டிருப்பவர் மிட் ராம்னி என்ற மோர்மன் பிரிவைச் சேர்ந்தவர். மோர்மன் பிரிவு என்பது என்ன? மோர்மன் […]
G Ramakrishnan ஓராண்டிற்கு முன் தமிழகக் கல்வி நிலை பற்றியும் கபில் சிபலின் மைய அரசின் மோசடி முயற்சிகள் பற்றியும் சொல்லியிருந்தேன். மேலும் ஆகஸ்டில் சமச்சீர் கல்வி பற்றி ராஜாராம் எழுதியிருந்தார். கபிலின் மேலதிக விளையாட்டுகள், உச்ச நீதிமன்றத்தின் குழப்பமானத் தீர்ப்பு, சுப்ர பாரதி மணியனின் செய்தி (திண்ணை) போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின் மீண்டும் சந்திக்கிறேன். மைய அரசு முயற்சிகளைப் பார்க்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதையே அறவே 2013 லிருந்து அகற்றும் முடிவை மைய […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனின் வாழ்வு சுற்றுச் சூழலைப் பொருத்தே அமைகின்றது. மனிதன் சூழலைக் கெடுக்காது இயற்கையுடன் இயைந்து இணைந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதன் இவ்வுலகில் மகிழ்வான வாழ்வை வாழ இயலும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலைப் பா பாதுகாத்து நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட நம்முடைய முன்னோர்கள் அத்தகைய நற்சிந்தனைகளைப் பழமொழிகள் வாயிலாகப் பாங்குற மொழிந்துள்ளனர். வீடும் வெயிலும் மண்ணிற்கு அழகு […]
கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம். திலீப் குமார்: சாமிநாதன், நேற்று […]
தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். 11 இளவேனிற் காலமென்பதால் வெப்பம் முன்னிரவு நேரத்திலும் மூட்டம்போல கவிந்திருந்தது. நீர்ப் பாசி போல கரிய இருள் இரவு நீரில் கலந்தும் கலவாமலும் மிதந்துகொண்டிருந்தது. மரங்கள் காற்றை எதிர்பார்த்து அசைவின்றி இருந்தன. தொழுவத்தில் கட்டத் தவறிய பசுவொன்று வெகுநேரமாக இருட்டில் நிற்கின்றது. மரகதப்பச்சையில் ஒளிறும் அதன் விழிகளின் காட்சியில் பள்ளி அறையின் சன்னல் கம்பிகளைப் பிடித்தபடி […]
தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக் கண்களற்றுப் போயிற்று காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக் காதுகளற்றுப் போயிற்று காணச் சகித்திடா அவலட்சணத்தை தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில் வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம் எனது விழிகளை உருவிக்கொண்டு – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
ஹெச்.ஜி.ரசூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறையும் கீற்று வெளியீட்டகமும் இணைந்து சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த இலக்கிய உயராய்வுபன்னாட்டு இருநாள் ஆய்வரங்கைநெல்லை பல்கலைக்கழக அரங்கில் 2012 ஜனவரி 9 – 10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. துவக்கவிழாவிற்கு தமிழியல்துறைத்தலைவர் பேரா.முனைவர் சு. அழகேசன் தலைமைஏற்றார். பேரா. முனைவர் பே.நடராசன் வரவேற்பு சொல்லிட பண்பாடு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் தமிழ்மண்ணில் சூபிய வரலாறு சார்ந்த கருத்தரங்க மைய உரையை நிகழ்த்தினார். முதல் அமர்வுக்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா.கா.முகமது […]
கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு […]
முன்னுரை நாம் வாழும் பூமி எண்ணற்ற உயினங்களின் இருப்பிடமாகும். இப்பூமி தோற்றம் பெற்ற நாளிலிருந்து உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தான், மிகப்பெரிய அழிவை சேதத்தை பூமிக்கு ஏற்படுத்தியுள்ளது. சென்ற சில நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சியின் பெயரால் பூமியின் வளம் பெரிதும் சூறையாடப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள 1235 கோள்களில் உயிரினம் வாழ்வதற்கேற்ற கோள் பூமி ஒன்றுதான். கோள்களின் தோற்றம் வயது.உயிர்ப்பு இவற்றைக் கணக்கிட்டு கிரேக்லாக் என்ற அறிஞர் பூமியின் மதிப்பு இந்தியமதிப்பில் 2இலட்சத்து16 ஆயிரம்இலட்சம் கோடி (3000டிரில்லியன் […]