முனைவர் ப. சரவணன் 1964ஆம் ஆண்டில் ரா. ஆறுமுகம் எழுதிய ‘கவலைக்கு மருந்து’ என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் வெளிவந்துள்ளது. பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுவோர் அடையும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களையும் அக்காலப் பத்திரிகைத் ‘தர்மத்தை’யும் இந்நாடகம் எடுத்துரைத்துள்ளது. ‘வாடாமல்லி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் தன் சிந்தனைத் திறத்தையும் உதவியாசிரியர் சந்தானத்தின் மூளையுழைப்பையும் அச்சுக்கோர்ப்பாளர் கனகரத்தினத்தின் உடலுழைப்பையும் உறுதுணையாகக்கொண்டு பத்திரிகையை நடத்திவருகின்றார். தன் பத்திரிகை வாசகர் பலரையும் சென்றடையவேண்டும் என்பதற்காகப் பல்வேறு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் துணிந்துசெய்கின்றார். இயன்றளவு […]
ஸ்ரீதர் சதாசிவன் Twitter: @shrisadasivan நடுநிசியில் கண்விழித்த அதிதி, பக்கத்தில் படுக்கையில் ராமை தேடினாள். எதிர்பார்த்தது போலவே படுக்கை காலியாய் இருந்தது. மெல்ல எழுந்து லிவிங் ரூமிற்கு வந்தாள். ராம் இருட்டில், கவுச்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அணைத்து வைத்திருந்த டி.வீயை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் வந்து, குனித்து முழங்கால் போட்டு உட்கார்ந்தாள் அதிதி. அவன் தலை முடியை, தனது கைகள் கொண்டு வருடினாள். “ஏம்ப்பா தூங்கலையா?” என்று பரிவாய் கேட்டாள். “………..” பதில் சொல்லாமல் […]
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான என்.எஸ்.ஜெகன்னாதன் என்கிற என்.எஸ்.ஜெ. தில்லியிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ளார் என்கிற தகவலைச் சொல்லி “சாயங்கலாமா வரீங்களா? அவரப் போயி பாக்கலாமா?” என்று கேட்டார். அக்கணம் ”என்னைக் கேட்டால்” என்று அவர் கணையாழியில் தொடர்ந்து பல காலம் எழுதிவந்த பத்தியின் தலைப்புதான் உடடியாக நினைவுக்கு வந்தது. இலக்கியம், சமூகம், அரசியல், சமயம், பாராளுமன்ற […]
சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் இப் பாதையொரு முடிவிலி இரு மருங்குப் புதர்களிலிருந்தும் வெளிப்பட்டிருக்கும் புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய் புதையுண்ட மனித உயிர்கள் காலக் கண்ணாடியை விட்டும் இரசம் உருள்கிறது அதில் தென்பட்ட விம்பங்கள்தான் புதையுண்டு போயினவோ வேர்களில் சிக்கியிருக்கும் உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும் உறிஞ்செடுத்த விருட்சங்கள் எவ்விசை கேட்டு வளரும் விதியெழுதும் பேனா எக் கணத்தில் முறிந்திடுமோ […]
ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய […]
இழந்தது என்னவென்று தெரியவில்லைதான் ஆனாலும்… எதையோ இழந்ததான வலியில் உயிர் துவண்டு கசிகிறது. வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய் எதனை இழந்திருக்கக்கூடும் நான்? தெரியவில்லை. என் உள்ளார்ந்த விம்மலின் சத்தம் உன் ஆழ்ந்த மௌனத்துள் அமிழ்ந்துதான் போயிற்று! இருள்களின் எல்லை தாண்டிய பயணம் பற்றிய என்னுடைய கனவுகள் நடுவானிலேயே தம் சிறகுகளை இழந்துவிட்டனவா, என்ன! எழுந்து தொடரும் பெருமூச்சுக்களின் நீளத்தை நீ என்றேனும் அளந்து பார்த்திருக்கிறாயா, நண்பனே? உனக்கான வாழ்க்கையில் எனக்கான மணித்துளிகள்… அந்தோ! உன் வேலைப் […]
இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது […]
எங்காகிலும் தட்டுபடுகிறதோ அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ? நீள் கோடுகளும் அங்காங்கே புள்ளிகளுமாய்.. அழகின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த பிம்பமென தாவி தாவிப் பறக்கும் அது …? மனம் கவர்ந்திழுத்த அதன் நினைவுகளில் அழுகிப்போன இதயங்களின் சுவடுகள் ஏதும் பதிப்பிக்க அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய் இல்லை … மெல்லிய இறக்கைகள் விரித்து பறக்கும் அவைகளில் கனந்து போன துன்பங்கள் கரைந்து போக … மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும் கரைக்க […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் மனிதனாவான். அம்மனிதன் பண்பாலும், நடத்தையாலும் உயர்நிலையை அடைதல் வேண்டும். இறைவன் மனிதன் உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பியே உலகில் அவனுக்கு உதவியாக இயற்கையையும், உயிரினங்களையும் படைத்தான். ஆனால் மனிதன் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றையெல்லாம் விடுத்துப் பல்வேறு கீழான குணங்களைக் கைக்கொண்டான். இத்தகைய கீழான எண்ணங்கொண்ட மனிதனை நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் […]
தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில் நடக்கிறது. இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ பில்டிங்), 735, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 600002. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்), பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்), கிருஷ்ண பறையனார் (பறையர் பேரவை), எழுத்தாளர் ஜோ டி குரூஸ், எஸ்.இராமச்ச்சந்திரன் (கல்வெட்டு ஆய்வாளர்), டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க), டாக்டர் தியாக சத்திய […]