குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் […]
அன்புடையீர், 25 டிசம்பர் 2022 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை) பர்கோட் – – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3) மாலதி சந்தூர், ரேணுகா தேவி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்] சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?–கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 3) அஷ்டத்யாயீ – உத்ரா […]
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். இம்முறை இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவரும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ளவருமான எழுத்தாளர் லெட்சுமணன் முருகபூபதிக்கும், இந்திய எழுத்தாளரான பெங்களுரில் வதியும் பாவண்ணனுக்கும் இயல் விருது வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட இயல்விருது தொடர்பான செய்தியறிக்கை பின்வருமாறு: லெட்சுமணன் முருகபூபதி […]
வெனிஸ் கருமூர்க்கன் [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 1 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ […]
வெங்கடேஷ் நாராயணன் காவிரியில் தண்ணீர் சற்று சூடாக தான் இருந்தது. மே மாதம் அக்னி நட்சத்திரம் இல்லையா அப்படித்தான் இருக்கும் .நாராயணன் தனது மகனை கரையில் விட்டுவிட்டு காவிரியில் இறங்கி ஒரு முழுக்கு போட்டான். இவ்வளவு நாள் வீட்டில் குளிப்பதற்கும் இப்போது காவிரியில் குளிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இது சின்ன காவிரி தான் வாய்க்கால் என்று கூறுவர் .அகண்ட காவேரி சற்று தொலைவில் உள்ளது. எப்படியும் இந்த பத்து நாட்களுக்குள் மூன்று முறையாவது அங்கு சென்று […]
சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை இன்னும்! யுத்தங்கள் நிற்கட்டும். அத்துடன்பூகோளம் சூடேறிபேரழிவுகள் நேர்ந்து விட்டன !பேரரசுகள்போகும் திசை தெரியாதுஆரவாரம் எங்கும்!பேய்மழை, பெரும்புயல் பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள்! புத்தாண்டு பிறந்தது!புவி மக்களுக்குப் புத்துணர்ச்சிபுத்துயிர் அளிக்கட்டும்!வித்தைகள் சிறந்து ஓங்கட்டும்!விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும்!வேலைகள் பெருகட்டும்!ஊதியம் கூடட்டும்!சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும்!யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.ஜாதிச் சகிப்பு மிகுந்து,ஜாதிகள் […]
சோம. அழகுகிரகம் : செவ்வாய் கிரகம் (Mars) வருடம் : 2100 இடம் : மலையும் மலை சார்ந்த இடமும் திடீரென்று சுத்தம், சுகாதாரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அங்குள்ள சில ஜீவராசிகளுக்கு மண்டையினுள் முதலில் ஓர் அரிப்பெடுத்தது. இந்தத் தினவு ஆண் இனத்திற்கு மட்டுமே உரித்தானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தினமும் இரு முறை நீராடச் சொல்லி உடல் முழுவதும் அரிப்பெடுக்கத் துவங்கியது. மூன்று வேளையும் பழையன விலக்கி புதியன மட்டுமே […]
சக்தி சக்திதாசன் ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். ஆமாம் காலண்டர் தேதிகள் கிழிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியில் வந்து நிற்கிறது. ஓரிரவுக்குள் 2022 ஐக் கடந்து 2023 க்குள் கால் வைக்கப் போகிறோம். சரி ஒரு வருடம் எம் வாழ்க்கையில் கடந்து போயிற்று. அதற்குள் அது தாங்கிக் கொண்டும், கடந்து சென்ற நிகழ்வுகள் தான் எத்தனை ? இன்பம்,துன்பம் எனும் இரண்டு […]
அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன், ஓராண்டு மட்டும் இந்திரா பார்த்தசாரதி. அனால் . இப்போது எந்தப் போட்டிக்கும் என் குறுநாவலாகட்டும், நாவலாகட்டும், சிறுகதை ஆகட்டும், கவிதை ஆகட்டும் அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஏன்? இப்போது நான் எதை எழுதினாலும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். அந்தக் […]