என்ன சொல்றே நீ ரத்தினம்..? நாம இன்னிக்கு கண்டிப்பா போறோம். அந்த ஜோசியர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். இப்பப் போய் நீ இப்படிக் கேட்கறியே….வேண்டாம்…வேண்டா ம் நீ பாட்டுக்கு வண்டியை ஒட்டு…நான் பைரவி கிட்ட பேசிக்கறேன். அவளுக்கு ஒண்ணும் ஆகாது. வேணும்னா ஆதித்தனை போய் பார்த்துக்க சொல்றேன். அதுவும் தேவையிருக்காது. பைரவியே பார்த்துக்குவா. அதான் மாதவி கூட இருக்காளே…பிறகு என்ன…? நாம போயிட்டு வந்துடலாம்.பைரவியின் அப்பா தனது கைபேசியை எடுத்து பைரவியை அழைக்கிறார்.பைரவியின் வீட்டு […]
புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டால் எண் 488-ல் விற்பனையாகி வருகிறது. இச்சிறுகதைகள் இதழ்களில் வெளியானபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது […]
இருபது வருடங்களாகப் பிரிந்து கிடக்கும் பெற்றோரைச், சேர்த்து வைக்கும் மகனின் முயற்சியும், அதற்கு உதவும் அவன் காதலியும் தான் கதை. கே. பாலச்சந்தர் தொடங்கி, விசு, மவுலி, வெங்கட், வியட்நாம் வீடு சுந்தரம், வேதம் புதிது கண்ணன் என்று பல ஜாம்பவான்கள், உறவு சிக்கல்களை நாடகமாக்கி, துவைத்து காயப் போட்ட பின், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரமோகன். முன்னவர்களின் நாடகங்கள், அழுத்தமான காட்சி அமைப்புகளினாலும், ஷார்ப் வசனங்களாலும், நினைவில் அழியா இடத்தைப் பெற்றன. கூடவே நாகேஷ், […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தொடக்ககால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவினை மட்டுமல்லாது தானே உணவினை உற்பத்தி செய்யும் முறையினையும் மேற்கொண்டான். கால ஓட்டத்தில் தேவைக்கேற்ப பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்றனர். இவ்வாறு பழங்காலத்தில் […]
திருப்பூர் அரிமா விருதுகள் 2013 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 : முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் […]
நூல்கள் வெளியீட்டு விழா * திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு “ பனியன் நகரம்“ 2013 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல் 27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை: அரிமா கேபிகே செல்வராஜ் * முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி, சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன் சிறப்புரை: கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி, சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி, வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் […]
(பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்பவள விழாவைக் கொண்டாடும் வகையில் பேசாமொழி இணைய இதழ் வெளியிட்ட மலருக்கு எழுதிய கட்டுரை..) ஆங்கிலத்தில் motion picture, film, cinema என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுவதை தமிழில் திரைப்படம், சினிமா, சலனப்படம் என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கமாகியுள்ளது. நாம் பேசும் இந்தப் புதிய 20- நூற்றாண்டு கலைக்கு, புதிதாகத் தோன்றிய தொழில் நுட்பத்திலிருந்து பிறந்த ஒரு கலைக்கு, திரும்பவும் தொழில் நுட்பமும் கலையாகப் […]
-ஜே.பிரோஸ்கான் – என் அருமைச் சகோதரியே ரிசானா உனது மரணம் உலக மக்களின் பேரிழப்பு. நேற்று நீ உறங்கிப் போன பின் அந்த அரேபியாவில் ~ரீஆ சட்டமும் தடுமாறி நின்றதாம் சரியா செய்யாததால். பதினேழு வயசு குழந்தை நீ பக்குவம் அறியா இளசு நீ மொழியும் தெரியா பறவை நீ இதையறிந்தும் அந்த அரேபியா தாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே சரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது அவள் செயல் கண்டு. நீ வருவாய் நீ வருவாய் என்ற […]
எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 […]
பிரபு கிருஷ்ணா நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நின்டிருந்து இன்று வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தன தழைகளை கடித்த ஆடுகள் கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் காதல் பேசிய சரவணன் துர்கா அழுது தீர்த்த செல்லம்மா திருடியதை புதைத்த கதிரவன் பிள்ளை பெற்ற லட்சுமி என எல்லா கிளைகளும் தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு மிச்சமிருந்த கடைசி கிளை எதுவும் சொல்லவில்லை அநேகமாய் அது வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும் – பிரபு கிருஷ்ணா