சிவகுமாரின் மகாபாரதம்

This entry is part 5 of 18 in the series 3 ஜனவரி 2016

      நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் […]

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு

This entry is part 6 of 18 in the series 3 ஜனவரி 2016

  கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌ விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி வெம்மை […]

நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

This entry is part 4 of 18 in the series 3 ஜனவரி 2016

  பொழுது புலர்ச்சி விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/MTfMBJngwtw https://youtu.be/0bWZ5U-YYq4 https://youtu.be/5OFgJwdZxRc http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html https://twitter.com/NASA_Dawn http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0 ++++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினியில் இறக்கும் விண்கப்பல் ! வக்கிரக் கோள் […]

தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை

This entry is part 7 of 18 in the series 3 ஜனவரி 2016

அன்புள்ள சக கம்பன் கழக நண்பர்க்கு:   வணக்கம். இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் , காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும் இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கையினையும், சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டி அறிக்கையினையும் அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.   தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவை பற்றி தெரிவித்து […]

பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்

This entry is part 8 of 18 in the series 3 ஜனவரி 2016

கலை அழகியல் பெரும்சக்தியாக எழுத்தாளனுள்ளும் அவனின் படைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வாசகனையும் வாழ்க்கை பற்றிய பார்வையை விரித்துக் கொண்டே போகிறது என்று சொல்லலாம்.இது கேலி விளையாட்டாகவும் புத்திசாலித்தனமாகவும், அனுபவத்திரட்சியாகவும் கதைகளிலும் கிடைக்கிறது.அனுபவத் திரட்சிக்குள் வரும் வாழ்க்கையில் தென்படுபவற்றையும் மனதில் தங்கி விடுபவை பற்றியும் சரியான பார்வை கொண்டவர் வாமனன் என்பதை இக்கதைகளில் தென்படும் அனுபவங்களைக் கொண்டே சொல்லிவிடலாம். வெகுஜன இதழ்களில் தென்படும் கதைகளின் அனுபவங்கள், செய்திகள் போலில்லாமல் தினசரி வாழ்க்கையில் கூர்ந்து பார்க்கும் அவதானிப்புகளாக இக்கதைகளை எடுத்துக் […]

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)

This entry is part 10 of 18 in the series 3 ஜனவரி 2016

( 5 )         நினைத்தது போலவே செக் போஸ்டில் கெடுபிடி. போலீஸ் கூட்டம் வேறு ஸ்பெஷலாய் நின்றிருந்தது. எதேனும் ஒன்றில் முனைந்து விட்டார்களென்றால், அவர்களின் பணியின் தன்மையே தனிதான். புயலாய்ப் பணியாற்றுவார்கள். எந்தக் கொம்பனும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாதுதான். ஆனாலும் திருட்டுத்தனம் செய்பவர்களும், கடத்தல்காரர்களும் அதற்கும்மேல்தான் சிந்திக்கச் செய்கிறார்கள். அதுவும் அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எந்த மேலிடத்தின் குறுக்கீடும் இல்லாதிருக்க வேண்டும். நிச்சயம் கதையை முடித்து விடுவார்கள். கார் தானாகவே வேகம் குறைந்தது. […]

மௌனத்தின் பக்கங்கள்

This entry is part 11 of 18 in the series 3 ஜனவரி 2016

லதா அருணாச்சலம் ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னாலுமான உணர்வுகளின் விழிப்பு கோடை மழை சிலிர்ப்பாய் மலர்த்தி விடுகிறது மனதை. மீண்டுமொரு சந்திப்புக்காய் யாசிப்பின் தவிப்புகள் நிறைந்து வழிகின்றன தாழப் பார்க்கும் இமை மறைத்த விழிகளில் கைகோர்த்திருந்த விரல்களின் ரேகைகள் வாசிக்கும் உயிரோடு உயிர் உரசிக் கொண்ட நாதங்களின் சுரங்களை.. விடை சொல்லும் கையாட்டலில் வீசிச் செல்கிறாய் எனை நோக்கி ஓர் மௌனப் பக்கத்தை.. குட்டி இடுமென்று பத்திரமாய் அடைகாத்த சிறு மயிலிறகால் உன் பிரியத்தின் ஈரம் தொட்டு வரைந்து […]

புத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )

This entry is part 12 of 18 in the series 3 ஜனவரி 2016

ஸிந்துஜா   நாற்பது வருஷங்களுக்கு மேலாக கவிதை எழுதி வரும்  ந. ஜயபாஸ்கரன்  ஒரு பிழைக்கத் தெரியாத மனுஷன் . இல்லையென்றால் இந்த அனுபவத்துக்கு ஒரு பட்டம் , பதவி , விழாக் கொண்டாட்டம் என்று  ஏதாவதொன்றுக்கு மாலை போட்டுக் கொண்டு இருக்க வேண்டாமா ? பிடிக்கிறதுதான் பிடிக்கிறார், ஒரு வலிய  குழுவைச் சார்ந்த அல்லது குழுத் தலையாய் இருக்கிற ஆசாமியைப் பிடிக்க வேண்டாமா ? போயும் , போயும் இவருக்கு நகுலனும் , நாஞ்சில் நாடனும்தானா கிடைக்க வேண்டும் […]

தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.

This entry is part 13 of 18 in the series 3 ஜனவரி 2016

” அனேட்டோமி ” என்னும் உடற்கூறு மனித உடலின் அனைத்து பாகங்களையும் அறுத்துப் பார்த்து, தொட்டுத் தடவி பயிலும் ஒர் அற்புதமான பாடமாகும். ( இப்போதெல்லாம் இதற்கு போதுமான உடல்கள் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் பொம்மைகளையும் உறுப்புகளையும் வைத்துக்கூட பயில்கின்றனர். ) இந்த பாடம் துவக்க காலங்களில் மேல்நாடுகளில் புழக்கத்தில் வந்தபோதுகூட இறந்தவர்களின் உடல்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இது எப்படி வழக்கில் வந்தது என்பதும் சுவையானதுதான். முறையான பல மருத்துவ ஆராய்ச்சிகளைப்போன்று உடற்கூறும் மேல்நாடுகளில்தான் உருவானது. […]

இன்று இடம் உண்டு

This entry is part 14 of 18 in the series 3 ஜனவரி 2016

வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து’ குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை மையமாய் வீர்ர் களம் புகுந்ததில்லை இரும்புக் கொல்லர் செய்த எழுத்தாணிக்கு அவரின் பெயரில் எழுத எதுவுமிருக்கவில்லை இப்போது எழுதலாம் இடம் உண்டு மரக்கிளைகளில் மொட்டை மாடிகளில் கிடக்கும் அறுந்த பட்டங்களில்