எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “

This entry is part 9 of 18 in the series 3 ஜனவரி 2016

எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ” ஓலைதேடி எழுத்தாணி தேடி ஆளோய்ந்திருக்கும் மூலதேடி மூக்குக் கண்ணாடி முகத்திற் பொருத்தி வேளைவருமட்டும் காத்திருப்பார் ” கவிதையெழுத முற்படுபவர் என்று சொல்லப் படும் நிலையில் நம் கவிஞர் பாஸ்கரன் இல்லை என்றுதான் எண்ணுகின்றேன். பாஸ்கரன் அவர்களுக்குக் கவிதை இயல்பாக வருகின்றது.அவரால் மரபாயும் பாடமுடிகிறது. நவீனமாயும் பாடமுடிகிறது. சந்தம்வந்து சிந்தும் விளையாடுகிறது.வசனம்கூட வண்ணக் கவிதையாகி நிற்கிறது. கற்பனைகள் சிறகடித்தும் அவர்கவிதைகள் வருகின்றன.கருத்துக் குவியல் களாகவும் அவர்கவிதைகள் கதைசொல்லி நிற்கின்றன.தத்துவமும் அதனூடே […]

பாம்பா? பழுதா?

This entry is part 15 of 18 in the series 3 ஜனவரி 2016

    ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]

தாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்

This entry is part 3 of 18 in the series 3 ஜனவரி 2016

  முனைவா் பு.பிரபுராம், உதவிப் பேராசிரியா், தமிழ்த்துறை, கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா்-21.   கல்வியாளா்கள் “நரம்பு மெழியியல்”(neuro linguistics) என்ற துறை குறித்த கருத்தாக்கங்களை ஆழமாக அறிந்து, கல்விமொழி(Educational Language) குறித்த விவாதங்களைத் தீவிரமாக நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சுயநலன்களைத் தள்ளி வைத்துவிட்டுக் கல்விப்பணி செய்வோரை ஊக்குவிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதைப்போல, கல்வியறிவில்லாத மக்கள் களா் நிலம் என்பதை நாம் அறிவோம். எல்லாம் நாம் அறிவோம், அறிந்து என்ன பயன்?. நம் […]

பாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி

This entry is part 16 of 18 in the series 3 ஜனவரி 2016

குமரன் “சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைதானே சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம் தானே” என்னும் வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலசந்தரின் படைப்புகளை மனதுக்குள் படர வைத்து பத்திரப்படுத்தியிருக்கும் ரசிகர் எவருக்கும் இந்த வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். “ரயில் சினேகம்” தொலைக்காட்சித் தொடரில் வரும் வைரமுத்து எழுதிய பாடலின் வரிகள் இவை. பாலசந்தரின் படைப்புகளின் இதயம் எது? ஜீவன் எது? அந்த ஜீவன் வழியே வெளிப்படும் உணர்வுகள் எவை? […]

தொட்ட இடமெல்லாம்…..

This entry is part 17 of 18 in the series 3 ஜனவரி 2016

 மனஹரன்   தோட்டத்திற்குப் போக வேண்டும் புன்னகையைக் கையில் ஏந்தியபடி வழி நெடுகிலும் கனகாம்பர பூக்களாய் காத்திருப்பார்கள்   வீட்டின் முன் காய்த்திருக்கும் இளநீர்வெட்டி தாகம் தீர்ப்பார்கள்   கொல்லையில் அறுத்த வாழைக்காயை வறுக்கச்சொல்லி அதன் பதத்தையும் சொல்வார்கள்   மரத்தில் பழுத்திருக்கும் மயிரு முளைச்சான் பழங்களை கொத்தாகப்பறித்து தோல் நீக்கி லக்கான்களை பந்தி வைப்பார்கள்   எலுமிச்சைச் சாறு ஊரிய சுண்ணாம்பு சேர்த்த மீத மருதாணியை வீட்டுக்குக்கும் கொடுத்துவிடுவார்கள்   மாசமாக இருக்கும் மனையாளுக்கு நாகம்மா […]

நித்ய சைதன்யா – கவிதைகள்

This entry is part 18 of 18 in the series 3 ஜனவரி 2016

நித்ய சைதன்யா 1.நான் தர விரும்பும் ஒன்று நீ விரும்புவது ஒரு செடியின் அத்தனை மலர்களை ஒரு வனத்தின் அத்தனை கனிகளை ஒரு காதலின் அத்தனை வலிகளை ஒரு பிரிவின் அத்தனை துயர்களை ஒரு கூடலின் அத்தனை உச்சங்களை ஒரு துரோகத்தின் அத்தனை வாய்ப்புகளை ஒரு ஆறுதலின் அத்தனை இதங்களை ஒரு குரோதத்தின் அத்தனை வெறிகளை ஒரு சுயநலத்தின் அத்தனை ஆசைகளை ஒரு இச்சையின் அத்தனை நிறைவுகளை ஒரு காமத்தின் அத்தனை நிறங்களை ஒரு கர்வத்தின் அத்தனை […]

குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை

This entry is part 2 of 18 in the series 3 ஜனவரி 2016

குருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் நீண்டகால இலக்கிய வாசகர்.தன்னுடைய 15 ஆண்டுகால வாசிப்பின் வழியாக சிறுபத்திரிகை சார்ந்த பல எழுத்தாளர்களுடன் நேரடி அறிமுகமும்,தொடர்பும் கொண்டவர்.இலக்கியம்,நாடகம்,திரைப்படம் சார்ந்த உரையாடல்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். ஈரோடிலும்,பெங்களூரிலும் மாறி மாறி இருந்த அவர் பெங்களூரில் இருந்தபோது பல உலகத்திரைப்படங்களை யும்,கன்னட இந்தி மற்றும் வங்க நாடகங்களையும் பார்ப்பதில் நேரத்தை செலவிட்டவர்.புரிசை நாடக விழாக்களுக்கு பல சமயங்களில் என்னுடன் வந்தவர்.தன்னுடைய குருத்து பதிப்பகத்தின் மூலம் பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாட்டு வட்டாரச் […]