தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை

author
0 minutes, 5 seconds Read
This entry is part 7 of 18 in the series 3 ஜனவரி 2016

அன்புள்ள சக கம்பன் கழக நண்பர்க்கு:

 

வணக்கம். இத்துடன் காரைக்குடி கம்பன் கழகம் , காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் 31-1-2016 ஆம் தேதி நடத்தும் இவ்வாண்டுக்கான தமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கையினையும், சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டி அறிக்கையினையும் அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

 

தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் இவை பற்றி தெரிவித்து மாணாக்கர்கள் அவர்கள் படிப்புக் கட்டணம், புத்தகங்கள் வாங்கும் செலவிற்கு உதவுகிறாற்போல் அதிக அளவில் ரொக்கப் பரிசுகளைப் பெற்றுப் பயனடைய உதவிடும்படி மிக்க பணிவன்புடன் வேண்டுகின்றோம். தங்கள் அறிவிப்பு பெற்றோர்களின் பாரத்தை இம்மழை வெள்ளப் பாதிப்பு சமயத்தில் குறைப்பதற்கு பெருமளவில் உதவும்; அவர்கள் தங்களுக்கும், தங்கள் பத்திரிக்கைக்கும் நன்றி பாராட்டுவர்.

 

மேலதிக விபரம் வேண்டுவோர் அல்லது போட்டித் தயாரிப்பிற்கு விவரம், குறிப்பு வேண்டினால் அஞ்சலட்டையில் பள்ளியா கல்லூரியா என்று குறிப்பிட்டு, தங்கள் வீட்டு அஞ்சல் குறிப்பு எண்ணுடனான முழு இல்ல முகவரியை, “கம்பன் கழகம், காரைக்குடி 2” என்ற முகவரிக்கு எழுதினாலோ அல்லது 94450 22137 என்ற கைபேசிக்கு குறுஞ்செய்தியில் (எஸ் எம் எஸ்) அனுப்பினாலோ எங்கள் செலவில் அறிக்கைகளை முழு விபரங்களுடன் அனுப்பி வைக்கிறோம் என்ற செய்தியயையும் தெரிவித்து உதவ மிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.

 

               தாங்கள் இதுகாறூம் எங்கள் முயற்சிகளுக்கு அளித்துவந்த உதவிகளுக்கும் ஆதரவிற்கும் நன்றியும் வணக்கமும் ஏற்றருள்க! இத்தகு நட்பும், உதவியும் இனியும் தொடர அன்போடு நன்றி பாராட்டி வேண்டுவோம்.

 

தமிழ்ப் பணியில் தங்கள் பணிவன்புள்ள

 

 

 

பழ பழனியப்பன்

(செயலாளன்)

இணைப்பு: அறிக்கைகள்

scan0087_new

 

 

 

 

 

 

 

 

 

scan0088_new

Series Navigationஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டுபொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *