மஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று. ஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் […]
டாக்டர் ஜி. ஜான்சன் அது ஒரு சிற்றாலயம். காலையிலேயே ஆராதனை முடிந்து விட்டது. அதன்பின் சபையைச் சேர்ந்த சுமார் முப்பது பிள்ளைகள் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தோம். பிரான்சிஸ் விக்டோரியா ஜோடி பெரிய பிள்ளைகளுக்கு பொறுப்பு வகித்தனர். வெரோனிக்காவும் நானும் சிறு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டோம். அவளுக்கு முன்பே அனுபவம் உள்ளதால் அன்று அவள்தான் அனைத்தையும் சொல்லி தந்தாள். கர்த்தரின் ஜெபத்துடன் ஓய்வுநாள் வகுப்பைத் தொடங்கினாள் . முதலில் ஒரு பாடல் சொல்லித் தந்தாள்.அவள் பாடுவது […]
வளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண் மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது. பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் […]
துரை ராஜூ தினம் உடல் உழைக்கத் திங்களைக் காலண்டரில் தொலைத்தவன் மனம் வலி பொறுக்க உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன் கை நீட்டிய இடமெல்லாம் சாலையோர மரம் வளர்த்தவன் கால் பதித்த தடமெல்லாம் சிமெண்ட் சித்திரம் எழுப்பியவன் இம்சை(கள்) வசை பாடக் கல்லாய் சற்றும் அசராதவன் பலர் ஏறி மிதிக்க உளைக்கு மட்டுமே அஞ்சி நின்றவன் ஏன் கலவரக் கறைகளோடு இன்று அடி வாங்கும் கல்லானாய்? சிராங்கூன் சாலைக் கலவரம் உன் வாழ்க்கைச் சுவரில் வெறும் கறை … […]
பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான “சக்தி விருது “ ) , இவ்வாண்டு நிகழ்ச்சி 25/12/14 சிறப்பாக நடைபெற்றது. .. மத்திய அரிமா சங்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பேரா.. செல்வி துவக்க உரை நிகழ்த்தினார்.பரிசுகள் பெற்ற 30 படைப்பாளிகளின் […]
மோனிகா மாறன் காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் கலந்த மணம்.கணேஷ்ஷ்ஷ் மெல்லிய சீறலாய் அழைக்கிறாள்.நான் திரும்பாமலே ம்ம்.. என்கிறேன்.நீ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்ன எனக்கு புக் தந்துட்டு போ. ,…. நைட் ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிச்சு […]
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது […]
சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம் இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் ‘கருவத்தடி’ கவிதைநூல் குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர் படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது. ஜெயந்தி சங்கரின் ‘நெய்தல்’நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் ‘வாழ்ந்து பார்க்கலாம் வா’ நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் ‘காட்டாளி’ குறித்து அன்புசிவா பேசினார் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி வாடா நண்பா ! வாழ்ந்து பார்க்கலாம் வா ! உலகை அளந்து நமக்காய் வளைக்கலாம் வா ! வாழ்க்கைக் கடலாய் பரந்து கிடக்கு. அள்ளி பருக துணிவு மிருக்கு. எண்ணச் சிறகை மெல்ல விரித்து பிரபஞ்ச வெளியைக் கையில் நிறுத்து வாடா ராஜா ! வாழ்ந்து பார்க்கலாம் வா ! வாழ்க்கை நமக்கே, துணிந்து தோற்கலாம் வா ! தோல்வியா சோகம் எதற்கு ? அனுபவ பாடமிருக்கு. புதிய […]