சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ***************** https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=k6eyJ_VMdu8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jw92UK1RfQY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r6zkkQujAlo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-8fnvyM6Rs https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o1RRNiYQAAI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IZf6e0ntFrw https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NYuML1eqH0w +++++++++++++++++++ சைனாவின் தற்போதைய வேகப் பெருக்கி அணு உலைப் படைப்பியக்கம் உலகில் முதற்படி நிலையில்தான் உள்ளது. வேகப் பெருக்கி டிசைன், கட்டுமானம், நிறுவகம், சோதனை, இயக்கம் ஆகிய துறைகளில் சைனா ஆளுமைத் திறம் பெற்றுள்ளது. இந்த அனுபவச் சாதனைகள் வணிக ரீதியாக, வேகப் பெருக்கி அணுமின் நிலையங்கள் நிறுவவும், அணுவியல் எருக்கள் சிக்கனப் […]
ராம்ப்ரசாத் படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின் கழுத்தில் அந்த விண்கலத்தை இயக்கும் ரிமோட் தொங்குகிறது. அமீர் இறங்குவதை பங்கஜ் உதாஸ் பாடலை கேட்டுக்கொண்டே நடை போடும் ஒரு ராஜஸ்தானி பார்க்கிறான். (பங்கஜ் உதாஸ் எத்தனையோ பாடல்களை தந்திருந்தாலும் ‘தும் தோ டஹரு பர்தேசி’ பாடலையே ஏன் அவருக்கு அடையாளமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஷாரூக்கானின் குச்குச் ஹோத்தா ஹை, பீகே […]
My poetry book in English titled Inscrutable Muylla Nasrudin Episodes in rhyming verses has been released by Cyberwit.net publishers of Allahabad in December last. Thanks. Jyothirllata Girija
சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப்பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது […]
1. ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் அந்த நாளின் கவிதை ஓவியமாக சிரித்துக் கொண்டிருக்கிறது 2. யாரேனத் தெரிந்தும் பலிபீடம் நோக்கி தலை சிலுப்பச் செல்லும் ஆடு குருதி படியும் நிலங்களுக்காக தனை வெட்டக் கொடுக்கிறது 3. உடைந்து அழும் பொம்மையிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் அம்மா ஒட்டப்பட்ட பொம்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறாள் அவநிதா
ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம் காட்டும் உவகை கூட்டும். கழை சுரம் புகுதரும் கடும்பனித்தூவல் பொறிமா போர்த்த வெள்ளிய காட்சி அணியிழை அகல்விழி அந்தணல் ஆர்க்கும். பண்டு துளிய நனை நறவு உண்ட பூவின் சேக்கை புதைபடு தும்பி சிறைக்க […]
ருத்ரா “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” ………………. 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து இப்படிப்பாட! எத்தனையோ ஓடி விட்டது. காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து. எத்தனையோ அலைகள் அலைகளின் மேல் அலைகளின் கீழ் அலைகளின் அலைகளாய் தங்க மணல் ஏக்கங்களை தடம்பதிக்க நீல வானம் “கொண்டைதிருக்கு” சூடி நீளமான கூந்தல் எனும் கால விழுதுகள் ஆடவிட்டு.. கனவுகள் எனும் பஞ்சுமிட்டாய் நட்டுவைத்த காதல் நுரைவனங்கள் […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது! தோசைப்பிரியர்கள் எத்தனை வகை? எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை வார்ப்பாள். ஒரு பர்னரில் சின்ன தவ்வாவில் போட்டு எடுக்கப்பட்ட தோசையில் வெறுத்துப் போன தகப்பனார், தேடி கந்தசாமி கோயில் கடையில் செவ்வக தகட்டை வாங்கி வந்தார். பரிட்சார்த்தமான தேதியில் நான் போய் மாட்டிக் கொண்டேன். […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை. புதிய வருடத்தில் புதிய உறவைத் தேடிய பயணம் இது. நேற்றே துணை வட்டாட்சியர் திருமதி. மலர்க்கொடி அவர்கள், பாதி நேரம் வந்துட்டு போய்டும்மா என்று பணித்திருக்க, அலுவலகம் செல்லும் எண்ணத்தோடு எழுந்த எனக்கு காத்திருந்தது இறுக்க உணர்வு. துவைக்கப்படாத துணிக்காக அலுத்து, பழைய உடைகளை மாற்றி மாற்றி போட்டு எதுவும் சரிப்படாததால் இப்படி முடியாமைக்கு அலுத்துக் கொண்டேன். இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல், கொஞ்சம் துணியை துவச்சிருக்கக் […]
எஸ். ஸ்ரீதுரை நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம் நேற்றைய டூட்டியின் முடிவில் நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய களவாணித் தனத்துடன் வார்த்தைகளால் விளையாடி வஞ்சகமாய் மனம் வருந்தி “போய்வா!” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளிய கணம் முதலாகக் கவலைப்படத் துவங்கி விட்டது என் பலகீன மனசு…. கடனில் வாங்கிய கைனடிக் வண்டியின் பாக்கித் தொகை குறித்தும், அக்காவின் கல்யாணச் செலவுகளில் கால்வாசிக்கு நானே பொறுப்பென்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவைப்பற்றியும், ஆஸ்துமாவின் உடன்பிறப்பாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் […]