பெண்பால் ஒவ்வாமை

This entry is part 7 of 38 in the series 10 ஜூலை 2011

பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு  வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான  பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற  அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும்  எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும்  ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.  இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும்  […]

“கானுறை வேங்கை” விமர்சனம்

This entry is part 6 of 38 in the series 10 ஜூலை 2011

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு “கானுறை வேங்கை”. ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய “The Way of the Tiger” என்ற இந்த நூலை தமிழில் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். புலிகள் வாழ்க்கை முறை பற்றியும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட/எடுக்க வேண்டிய நடை முறைகள் பற்றியும் […]

வேடிக்கை

This entry is part 5 of 38 in the series 10 ஜூலை 2011

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார் தலையில் கட்டலாமென்று தபால்காரரின் கையிலிருக்கும் கடிதங்களின் கனம் சற்றே குறைந்தது நடைப்பயிற்சி செய்பவர்கள் எய்யப்பட்ட அம்புபோல விரைந்து சென்றார்கள் ஐஸ்கிரீம் வணடியில் எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் ஒலித்தது காய்கறிகாரனின் கவனமெல்லாம் வியாபாரத்திலேயே இருந்தது குழந்தைகளின் […]

பயணம்

This entry is part 4 of 38 in the series 10 ஜூலை 2011

ஹபீபுல்லா கிளம்பிக் கொண்டிருந்தார். பாத்திமுத்துவும் அவரோடு சேர்ந்து பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்து வச்சியா, இத வச்சியா என்று கேட்டுக் கொண்டே, மகனின் கனமான மௌனத்தையும் கவனிக்கத் தவறவில்லை. மகன் சலீமும் பேப்பர் படிப்பது போல இருந்தாலும், மனதில் பெற்றோரின் இந்த புறப்படல் அரித்துக் கொண்டேயிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாரும், சலீமோடு கோவித்துக் கொண்டுதான் ஹபீபுல்லாவும், பாத்திமுத்துவும் கிளம்புவதாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக ஒரு இறுக்கமான சூழ்நிலைதான் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. ஆனால், உண்மைநிலையோ […]

வேஷங்கள்

This entry is part 3 of 38 in the series 10 ஜூலை 2011

முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை வானத்தில் படர்ந்தது. கொட்டிக் கிடந்த ஏகப் பட்ட நட்சத்திரங்களில் எது ரொம்பவும் அழகு என்று தேடிச் செல்வதைப் போல நிலவு உருண்டு சென்று கொண்டிருந்தது. அகலமாக விரிந்து கிடந்த மொட்டை மாடியில், இந்தக் காற்றிலும் , நிலவிலும் , இருளிலும் இதற்கு முன் எவ்வளவோ தினங்கள் மயங்கி, முயங்கிக் கிடந்திருக்கிறார் அவர். ஆனால் இன்று மனதில் […]

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

This entry is part 2 of 38 in the series 10 ஜூலை 2011

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** –இளங்கோ 

இழவு வீடு

This entry is part 1 of 38 in the series 10 ஜூலை 2011

ஒவ்வொரு இழவு வீடும் பெருங்குரலோடுதான் துக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றன.பெண்கள் ஒப்பாரி வைக்க ஆண்கள் அழுகையை அடக்கிக்கொண்டு வெளியில் போய் நிற்கிறார்கள் நாட்டமை போலும் ஒரு உறவினர் தொலைபேசி மூலம் தொலைதூர சொந்தங்களுக்கு செய்தி தருகிறார் அக்கம்பக்கம் முதலில் வந்து துக்கம் விசாரிக்க மெதுவாய் கூடுகிறது கூட்டம் இறந்தவரை நடுவீட்டில் வைத்து மாலையிட்டு மரியாதை செய்து சுற்றிலும் அமர்ந்து ஒப்பாரி வைத்து புகழ் பாடத் தொடங்குகிறார்கள் சுமார் ஒரு மணி நேரம் கழிந்தபின் அக்கம்பக்கம் அகலுகிறது சொந்த பந்தம் […]

பகுப்பாய்வின் நிறைவு

This entry is part 38 of 38 in the series 10 ஜூலை 2011

கவனமற்று இருக்கின்ற அனைத்து இருப்பு கொள்கைகள் எழுகின்ற கேள்வியை பற்றிக்கொள்கிறது தன் முனைப்பு . கேள்விகள் அழகியல் தன்மை வாய்ந்தவை கூடுதலான மனத்திரை உடையவை முக்காலத்திலும் தொன்றுத்தொட்டு வழக்கம் உடையவை . அதன் விடையில் நிறைவு பெறாது அடுத்த நிலைக்கு ஆயுத்தப்படுத்தும் மற்றுமொரு கேள்விகள் தொடர்கின்ற அழகியல் இயக்கமாகிறது . தன் பகுப்பாய்வின் தீவிரத்தன்மை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது கற்பனையின் வரையறைகள் . கேள்விகளும் பதில்களும் ஒன்றையே தேடுதலின் நோக்கமாக கொண்டுள்ளது அவை எப்பொழுதும் நிறைவு தன்மை […]