ஊறெரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டில் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் நாட்டுக்காக விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் அதன் எழுச்சியின் வேகம் கூட்டுப் பறவையாக இருந்த பெண்ணை வெளியில் எட்டி பார்க்க வைத்தது. “பெண் விடுதலை” என்ற புதுப்பாட்டும் ஒலிக்க ஆரம்பித்தது. அப்படியென்றால் அவள் வாழ்ந்து வந்தது சிறைக்குள்ளா? வேறு பெயர் வைத்திருக்கலாமோ ? பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று ஆரம்பித்தால் இதிகாசமும் இலக்கியமும் வரலாறும் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்வுகளைக் காட்டி […]
மதியம் மணி பன்னிரண்டு. “இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…?” அவனுக்குக் கமறி விக்கியது. “மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள். “முதல்ல தண்ணியைக் குடிடா” “ஆம்லேட்டை ரசம் வரைக்கும் வெச்சிருக்க மாட்டே.. இரு.. அப்பளம் சுட்டுப் போடறேன்.” அப்பளம் சுட்ட படியே “ஏண்டா.. ஏதோ […]