பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை — மன்னார் அமுதன்
– உதுல் பிரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு […]
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் […]
பாதல் சர்க்காருடைய மறைவுக்குப் பிறகு அவர் குறித்து வெளிப்படுத்தப்படும் பல்வேறு உணர்வுகள் பாதல் சர்க்காரின் பொருத்தப்பாடு இன்றைய சிக்கலான சமூக கலாச்சார சூழலில் எப்படி வைத்து மதிப்பிடப்படுகிறது என்பது குறித்த அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகின்றன. ஏற்கனவே பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பங்கேற்றவரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை பங்கேற்ற குழுக்களின் நிலைப்பாடுகள் பற்றி 1993ம் ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். தன்னுடைய படைப்புச் செயல்பாடுகளை காலவோட்டத்தில் பொருத்திப் பார்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு […]
தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும் காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: “கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை” என்கிற புத்தகம். இதனை காமராஜர் […]
“ஒரு முறை மட்டுமே உபயோகம் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. நாங்கள் விற்பதுமில்லை! உபயோகிப்பதுமில்லை!” அருகாமையில் இருந்த கடையில் ‘பன்னீர்’ சோடா குடித்துக் கொண்டிருந்த நான், ஒட்டப் பட்ட துண்டு பிரசுரத்தை கவனித்தேன். “நல்ல விஷயமில்ல? ஹ்ம்ம். ஏதோ கொஞ்சமா நல்லதும் நடக்கத் தான் செய்யுது”, மனமூலமாக நகராட்சியின் மீது மலர்களை தூவினேன். “எவ்ளோ?” “நாலு ரூபா தம்பி”, “இந்தாங்க”, சில்லறையை கொடுத்துவிட்டு வண்டியில் ஏறினேன். வீட்டை நோக்கிப் பயணம். […]
1. வீதியில் குழந்தைகள் விளையா டும் சப்தம் ஒழுங்கற்று. இரண்டு மாதமாகக் பள்ளிவிடுமுறை நிச்சயக்கபட்டாத பாடத்திட்டம். புத்தகங்கள் வாங்கும், பைண்டிங் செய்யும் வேலைகள் இல்லை. திறப்பு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதிறப்பு நாள் பற்றி பல யூகங்கள். துவைத்து காயப்போட்ட புத்தகப் பைகள் சிரித்தபடி கயிறுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 2. கலகலப்பாக இருந்தது வீடு. விடுமுறையில் எத்தனையோத் திட்டங்கள் எத்தனையோ வேலைகள் . கூட யாராவது இருந்தபோது ஆறுதலாக இருந்த்து. மகள் இருந்தது இன்னும் […]
உலகில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசையுண்டு. ஆசையில்லாத மனிதர்களைக் காண இயலாது. ஆசையில்லாதவன் மனிதனே அல்ல. அவன் மனிதனிலும் மேம்பட்டவன். இவ்வாசையினை, அவா, ஆவல், வேட்கை,விருப்பம், பற்று என்று கூறுவர். உலகில் பல ஆசைகள் உண்டு. மண், பொன், பொருள் உள்ளிட்ட என்னென்ன இருக்கிறதோ அத்தனையின்மீதும் மனிதன் ஆசைப்படுகின்றான். உலகில் உள்ள அத்தனைக்கும் ஆசைப்படு என்று சிலரும், ஆசைப்படாதே! அது துன்பத்தைத் தரும் என்று சிலரும் கூறுகின்றனர். ஆசைப்பட்டதால் தான் மனிதன் பண்பட்டு நாகரிகத்தில் சிறந்தவனாக, அறிவில் மேம்பட்டவனாகத் திகழ்கின்றான். […]
விமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் – விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும் திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் தான். ஆரோக்கியமான அனுசரணை மிக்க விமர்சனங்கள் என்றால் நினைவில் நிற்பவர்கள் திரு.வல்லிக்கண்ணன் அவர்களும் திரு.திக.சி அவர்களும். கறாரன, தாட்சண்யம் கருதாத விமர்சனம், முன்னவர் இருவருடையதும். ‘கடிதோச்சி மெல்ல எறிக’ என்ற பண்பு கொண்டவர்கள் மற்ற இருவரும். இளம் படைப்பாளிகள் தங்கள் விமர்சனத்தால் முளையிலேயே கருகி விடக்கூடாது என்கிற தாய் உள்ளத்துடன், […]
வெள்ளுடை தேவதைகளையும் செவ்வுடை சாமிகளையும் மஞ்சளுடை மாட்சிமைகளையும் பச்சை உடை பகைமைகளையும் படிமங்களாய்ப் புதைத்தவற்றை வர்ணாசிர தர்மமாய் வெளியேற்றும் ப்ரயத்னத்தில்.. ப்ரக்ஞையோடு போராடித் தோற்கிறேன்.. விளையாட்டையும் வினையாக்கி வெடி வெடித்துத் தீர்க்கிறேன்.. எப்போது உணர்வேன் வண்ணங்களை.., அழுக்கேறாத ஆன்மாவின் உடைகளாய்..