போத்தனூரின் புது இல்லம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னந் தனியாக அமைதியான இயற்கைச் சூழலில் கோயம்புத்தூர் குளிர் தென்றலில் நாட்கள் இனிமையாகக் கழிந்தன. வேலை முடிந்து மீதி நேரத்தில் அந்த புதுக் குடிலில் தஞ்சம் கொண்டேன். மேசை மீது நான் படிக்கும் நாவல்களையும் கண் மருத்துவ நூல்களையும் வரிசையாக அடுக்கிவைத்தேன். படிக்கவும் எழுதவும் அதுபோன்ற ஓர் இடம் கிடைப்பது அபூர்வம். மனதில் இனம்காணாத ஒருவகையான நிம்மதி. எழுத அமர்ந்துவிட்டால் கற்பனை சிறகடித்துப் பறக்கும். இனி எனக்கு எந்த […]