ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும் தெரிந்து கொள்ளாமல் வாசிக்க ஆரம்பிக்க, எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யத்துக்குள் இட்டுச் சென்று பிரமிக்க வைத்து சிந்தனையை தூண்டியது என்று சொன்னால் மிகை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட மாத்திரம் நாவலின் களம் ஒரு […]
திரிபு வார்த்தைகளும் தத்துவார்த்த பிழைகளும் தின்மச் சொற்களும் தந்த ரணங்களை சுமந்து இடர் சூழ்ந்த இவ்வுலகில் பொருள் தேடி அலைகிறேன்…. துயரம் சொல்லொணாத் தவிப்புடன் உடல் நிறைக்க இறுகிப்போன சக்கையாய் மனம்…. நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால் தன்னந்தனியாய் தவிக்கும் அழுகையின் நிறம் மீளாத்துயருடன் பின் தொடரும் நிழலாய் நினைவுதிர்த்து போகின்றது……
வரும் மனிதருக்கு வழி சொல்ல சிதற விட்டுச் செல்லும் நம்பிக்கை கற்களில் மூதாதையரின் பல்வேறு முகங்கள். பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து காலமா யுருண்டு தரைக்கு வரும் கல். அதை உற்று நோக்கும் ஆய்வின் கண்களில், மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும் கதிரொளி. காலத்தை குத்தி நிறுத்த ஒரு மனிதன் எழுப்பிய பிரமிட்டின் முனையில் அவன் மூக்கு மழுங்கியதாய் எண்ணி வருகிற சிரிப்பு பாலைவனத்தில் எதிரொலிக்கும். குளிரூட்டப்பட்ட பெரிய அறையில் உலகப் பொருளாதாரத்தை ஒரு நொடியில் […]
. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத் தின்று தீர்க்க வாய் திறந்து திறந்து மூடுகிறது உயிரின் நித்திரைத் திரட்டுகள்.. ***** –இளங்கோ
“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர் வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் […]
முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து கதைகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?) இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி […]