பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை […]
இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் – தம் புறவிதழால் புதுக் காற்றை பிடிபிடித்தும் பார்க்கின்றன… வளிபோன போக்கில் அசைந்தாடவும் வாயின்றி சில வார்த்தை இசை போடவும் வான் போடும் மழை நீரில் விளையாடவும் வையத்தில் தேன் பூக்கள் பூக்கின்றன. ஒரு மொட்டு மலரும் போது… மெல்லப் பேசுகின்றது… பேசும் விழிகளால் புன்னகை பூக்கின்றது… பூமிக்கு வளையோசை கேளாமல் காற்றிலே நடனம் […]
ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட, உலகத் திரைப்படங்களின் திரையிடலில், கொஞ்சம் புரொஜெக்டர் சொதப்பியதால், இம்முறை திரையிடும் முன்பு, ஒரு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டார்கள். அப்படி ஓட்டிய குறும்படம் பொன். சுதா இயக்கிய, எழுத்தாளர் அழகியபெரியவனின் சிறுகதையான ‘ நடந்த கதை ‘ கீழத்தெரு தலித்துகளால் செருப்பு போட முடியாத அவலம். மேட்டுத்தெரு வாசிகளின் அதிகாரம், அகங்காரம். கதை நாயகன் செருப்பு போட முடியாத வெறுப்பில், கோயில் வாசலில் கிடக்கும் செருப்புகளை, யாரும் பார்க்காத போது லவட்டி, பொட்டல் காட்டில் திசைக்கொன்றாய் […]
தனிமைப்படுத்தப்படுகிறவர்களின் அனுபவப்பிரதிநிதியாக பிரியவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கவிஞர் யாழன் ஆதியின் நான்காவது கவிதைத்தொகுப்பு’போதலின் தனிமை’ கருப்புப்பிரதிகள் வெளியீடாக தோழர் நீலகண்டனின் அறிமுகத்துடன் துவங்குகிறது. துவக்கமே பறவையென இறக்கையை விரித்தெழுகிற அதிகாரவர்க்க சூரியனையும் எழுச்சியெனும் நிறம் பூசிக்கொள்ளும் உழைக்கும் வர்க்க வானத்தால் பதற்றமுற்று எஞ்சியுள்ள நிறத்தை தின்று பசியாற எத்தனிக்கும் அதன் முயற்சியையும் ஆழமாய் பதிவு செய்கிறார்.வலிக்காத வார்த்தைகளை தர முடியாத அவலத்தையும் கனறாத கங்குகளின் மீது நின்று எதிர்காலத்தை முன்னெடுத்துச்செல்லாத தடைக்கற்களை என் செய்யவென்று ஆதங்கப்படுகிறார்.அறைக்கூவலாய் […]
செய்யாறு தி.தா.நாராயணன் குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. குப்பைகளை நடுத்– தெருவிலா கொண்டு வந்துக் கொட்டுவார்கள்?கெட்டுப் போன உணவுகள்,அழுகிப்போன காய்கறிகளும், ,பழ்ங்களும், ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்கள்,, எலும்புத்துண்டுகள்,செத்த எலி,பிளாஸ்டிக் குப்பைகள்,பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட குழந்தைகளின் மலங்கள்,இன்னும் சொல்லக் கூசும் எல்லாக் கழிவுகளும் வீதியோரங்களில். கொட்டப்படுகின்றன. தெருவே நாறுகிறது. நாலு தூறல் போட்டுவிட்டதோ குப்பென்று கிளம்பும் கவிச்சை வாடையில் உவ்வே ! குடலைப் புரட்டும். இதுதான் எட்டாம் வார்டில் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க காலத்தினை வீரயுக காலம் என்பர். அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்றும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் என்ற பெயர;களிலும் குறிப்பிடுவர். இச்சங்க இலக்கியங்களின் அடிநாதமாக விளங்குபவை காதலும் வீரமும் ஆகும். இந்தச் சங்க இலக்கியப் பாட்டுக்கள் மொத்தம் 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 473 பேராவர். 192 பாடல்களுக்குப் புலவர்களின் […]
சின்ன வயதில் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்து ரசித்த இனிய நினைவுகளோடு பார்க்கப் போன படம். கொஞ்சம் வேர்வுல்ப், கொஞ்சம் கிங்காங், எழுபதுகளில் காட்டப்பட்ட கிராமம், பெல் பாட்டம், பியட் கார், சின்ன வயது ஹாரிஸ் ஜெயராஜ் போல ஒருவன், சின்ன வயது மனோபாலா போல ஒருவன், அதீத மேக்கப்புடன் ஒரு நடிகை, மேக்கப்பே இல்லாமல் ஒரு நடிகை, பாக்யராஜ் பாணி பாடல்கள், ஹிட்ச்காக் பின்னணி இசை. இதையெல்லாம் மிக்சியில் போட்டுக் கலக்கினால், மொக்கையாக ஒரு படம் வரும். […]
எம் ஜி சுரேஷை, ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இலக்கியக் கூட்டங்களில் பார்த்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. அவர் அதிகம் உலகத் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். நன்றாக ஊதியம் வரக்கூடிய வங்கி வேலையை விட்டு விட்டு, புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் ‘ என்று சற்று விசித்திரமான தலைப்பு கொண்ட புத்தகத்தை, அவர் வெளியிட முயன்று கொண்டிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட, இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் […]
“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம். ஓய்வுறு எடுத்துக் […]
பொன்.குமார் சமூகத்தைப் பேசவும் சமூகத்தைக் காட்டவும் சமூகத்தைச் சீர்படுத்தவும் ஒரு சிறந்த ஆயுதம் கவிதை.கவிதை எழுதுவது எளிது போல் தொடக்கத்தில் தோன்றும்.கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது.அது எளிதில் வசப்படாது.கவிதை உலகில் நுழைந்தவருக்கே தெரியும்.புரியும்.சாத்தியப்படும்.தொலைந்து போன நிழலைத் தேடி புறப்பட்ட ப.மதியழகன் இரண்டாம் தொகுப்பில் சதுரங்கம் விளையாடி உள்ளார்.விளையாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. பால்யம் என்பது எல்லோருக்கும் ஒரு பொதுவான அனுபவமாகவே இருக்கும்.எதிர் காலம் குறித்த கவலை ஏதுமின்றி மகிழ்ச்சியாய்ச் சுற்றித் திரியும் பருவம் அது.பெரியவர்களுக்குக் கவலை அளிக்கும் […]