நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்

This entry is part 6 of 26 in the series 17 மார்ச் 2013

-வாணிஜெயம் மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார். தனது கைப்பேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளைப் பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி…. “இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?” “ஆமாண்ணி.என்ன விசயம்?” “ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ எதுக்கும் மதியை […]

காலம்

This entry is part 5 of 26 in the series 17 மார்ச் 2013

எஸ்.எம்.ஏ.ராம் 1. பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன், ஒரு சமூகத்தின்- துக்கங்களுக்குக் கூட மரியாதை இல்லை. 2. எங்கே ஓடினாலும் உன்னைத் துரத்தும் உன் நிழல். சட்டையைக் கழற்றுவது போலுன் ஞாபகங்களைக் கழற்றி எறிவது அத்தனை சாத்தியமல்ல. தினம் தினம் சேரும் ஞாபகக் […]

கரிகாலன் விருது தேவையில்லை

This entry is part 4 of 26 in the series 17 மார்ச் 2013

கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் […]

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12

This entry is part 3 of 26 in the series 17 மார்ச் 2013

கதைகள் கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை யசோதரா ஓரமாக ஒதுக்கச் சொல்லி ரதத்தில் ஏறினாள். நுட்ப்மான மர வேலைப்பாடுகள் ரதமெங்கும் செய்யப்பட்டிருந்தன. சக்கரங்களில் பதிக்கப்பட்டிருந்த வெண்கலப் பட்டைகள் பளபளத்தன. ராகுலன் அவள் மடியில் அமர்ந்தபடி உற்சாகமாய்ப் புன்னகைத்தான். “குதிரையை வேகமாகப் போகச் […]

திருக்குறளில் மனித உரிமைகள்!

This entry is part 2 of 26 in the series 17 மார்ச் 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com திருக்குறள் உலகப் பொதுமறை எனத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகமாகத் திகழ்கின்றது. திருக்குறளை சட்ட இலக்கியம் என்று கூறலாம். மனிதன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பது இலக்கியத்தின் நோக்கம். மனிதனுக்கு வழிகாட்ட எத்தனையோ இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது “திருக்குறளே” ஆகும். திருக்குறள் மனித உரிமைகளைக் கூறும் மனித உரிமைப் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 21 இரா.முருகன் – ‘மூன்றுவிரல்’

This entry is part 1 of 26 in the series 17 மார்ச் 2013

மற்ற எந்தத் தொழிலில இருப்பவர்களையும்விட முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம். கணினி மென்பொருள் தொழில்நுட்ப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி […]