ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை அவர் குறிப்பிடும் விதம் பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப் போலிருக்கிறது. கதையில் வரும் காடு குறித்து அவர் பேசும்போது அதில் வாழும் சிங்கராஜாவும் ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்! அந்த நதிக்கரையில் பொழியும் மழையை அப்படி நனைந்து நனைந்து விவரிக்கிறார்! அந்தக் கதையை எழுதியவரின் பெயரை மந்திர […]
சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக் குறைபாடுடைய இந்த பள்ளி மாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலை இயற்றி பாடிதங்களாலான ஆக்கபுர்வமான சமூகநலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்!
பிரார்த்தனை இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும். ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன் என்று ஆகிவிடலாகாது. இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும் மக்கள்பணியாற்றும் எல்லோருக்குமானதாகட்டும். என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக் கரவொலியெழுப்பாமல் மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக. உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல் நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு […]