மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

This entry is part 11 of 32 in the series 29 மார்ச் 2015

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை டிரேட் மார்க் ஆக வைத்திருப்பார்கள். தலைப்பாகைக்கும் பிரியாணிக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இருப்பினும் தலைப்பாக்கட்டு என்ற பெயருக்காக நீதிமன்றத்தில் வழக்கு கூட நடந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தலைப்பாகை […]

நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

This entry is part 12 of 32 in the series 29 மார்ச் 2015

– சிறகு இரவிச்சந்திரன் 0 பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக வடிவில் தந்திருக்கிறார்கள் இரட்டையர்களான கோபு, பாபு. இயக்கியவர் திருமதி பாத்திமா பாபு. தந்தை மேல் கோபம் கொண்டு பிரியும் மகள், ஒரு பாசமுள்ள பெரியவரை தந்தையாக தத்து எடுப்பதும், மகளைப் பிரிந்த தந்தை பாசத்திற்கு […]

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

This entry is part 13 of 32 in the series 29 மார்ச் 2015

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சி பெற்றது. இலக்கியங்கள் பெருகிய பின்னர் அவற்றை ஆய்ந்து அம்மொழிக்குரிய இலக்கணத்தை உருவாக்கினர். ஒரு மொழியைத் திருத்தமாகவும், செம்மையாகவும் உரையாடுவதற்கும், எழுதுவதற்கும், மொழியின் அடிப்படையை முற்றும் உணர்தற்கும், விதிவிலக்குகளை விளக்குவதற்கும் வாய்ப்பாக […]

றெக்கைகள் கிழிந்தவன்

This entry is part 14 of 32 in the series 29 மார்ச் 2015

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும் ’ஒத்தப்’ பனை புறப்பட்டுச் செல்ல ஐயனாரை ஏற்றிக் கொண்டு எந்தச் சமயத்திலும் கம்பீரமாய்க் காத்திருக்கும் கல் குதிரை என்றோ தண்ணீர் கரை புரண்டோடிய காலம் எண்ணி எண்ணி மனம் திரைத்து மணல் திரளாகிய வறண்டாறு […]

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

This entry is part 15 of 32 in the series 29 மார்ச் 2015

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் – அவளுக்குத் தெரியாத ரகசியம் நாவலாசிரியர் – திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா பக்கங்கள் – 218 வெளியீடு – எக்மி பதிப்பகம் விலை – 300 ரூபாய் தபால் செலவு – 110 ரூபாய் தொலைபேசி – 0115020936, 0115050983     இந்த நாவல் கிடைக்கும் இடங்கள்:-   பூபாலசிங்கம் புத்தகசாலை – கொழும்பு 11. […]

கூடு

This entry is part 16 of 32 in the series 29 மார்ச் 2015

ஆரத் தழுவி அநேக நாட்களிருக்கும் தினம் நூறு முட்டையிட்ட கூடு சிதிலமடைந்திருக்கிறது சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன முத்தப் பறவைகள். குஞ்சுகளின் கீச்சொலியும் வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன சலசலக்கும் இலைகளில். உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும் ஊட்டப்பட்ட துணுக்கைப் போல அன்பும் சிதறுகிறது. குஞ்சுகளுக்குக் கால் முளைத்ததும் எங்கே காணாமல் போயின தந்தைதாய்ப் பறவைகளுமென யோசித்துக் கொண்டிருக்கிறது மரம்.

அழகிய புதிர்

This entry is part 17 of 32 in the series 29 மார்ச் 2015

    சத்யானந்தன்   மரத்தின் இலைகிளையின் அடர்ந்த பெரும் தோற்றமாய்   வெள்ளைப் படுதா மேல் வீச்சுடன் விழுந்த கருப்பு மையாய்   அரிதாய்க் காணும் யானையின் சயனமாய்   வெண்பஞ்சுச் சிதில் விஸ்வரூபமானதுவாய்   கடலலையின் நுரை வடிவாய்   மேகங்கள்   அலையும் அடிக்கடி வடிவம் மாறும் வானின் மன அலைகள்   என் கற்பனை விரிய விரிய வெவ்வேறாய்த் தெரியும் அழகு   அலைகள் மேகங்கள் மின்னல்கள் அரங்கேறும் பெண் முகம் […]

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

This entry is part 18 of 32 in the series 29 மார்ச் 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத்தின் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். வீணா இசைப்பள்ளி, நாகலட்சுமி இசைப்பள்ளி, கர்நாட்டிகா இசைப்பள்ளி, சப்த ஸ்வரா இசைப்பள்ளி, லலிதா இசைப்பள்ளி மற்றும் கோஸ்பல் தேவாலய இசைக் குழுமம் ஆகியவற்றில் இசை […]

மூளைக் கட்டி

This entry is part 19 of 32 in the series 29 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் கட்டி மண்டை ஓடு அல்லது அதன் உள்ளே இருக்கும் மூளை மற்றும் இதர திசுக்களில் தோன்றலாம். இப்படி மூளையில் மட்டும் தோன்றும் புற்று நோய்க் கட்டி உடலின் வேறு பகுதிகளுக்கு பரவாது. மூளையில் இவ்வாறு தோன்றும் கட்டிகள் […]

உலகத்துக்காக அழுது கொள்

This entry is part 20 of 32 in the series 29 மார்ச் 2015

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்) தமிழில்- நசார் இஜாஸ் இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே நீ வாழ்வின் ஓரு புள்ளியே பல குரூரமானவர்கள் இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் மலையளவு வலியையும் நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும் சிந்த வைக்கின்றனர். உனக்கு செயற்படுவதற்கு சரியான சிந்தனையே தேவைப்படுகிறது நடந்ததையே எண்ணிக் கொண்டிருக்காதே முயற்சித்து முன்னேறு இங்கு எமக்கெதுவுமேயில்லை உன் மரணம் நிகழம் வரை உலகம் இருந்து கொண்டேயிருக்கும்