நன்றி நவிலல்

This entry is part 31 of 41 in the series 13 மே 2012

கோமதி நடராஜன் உடல்வலிமையும் ,மனவலிமையும், நிறைந்திருந்த நாளில், பூமியில் பதிந்த, மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார், நெம்பி எடுத்துத் தந்தேன். வேரோடியிருந்த , மரத்தைப் ,பிடுங்கித் தரச் சொன்னார், கிள்ளி எடுத்துக் கொடுத்தேன். மனமும் சோர்ந்த , உடலும் களைத்த , இன்று தரையில் கிடந்த ஊசியைக் கேட்டார், ”ஊசிதானே ,உன்னால் ஆகாதா ”என்றேன் மலையையும் மறந்தார் மரத்தையும் மறந்தார் ”உன்னால் ஒரு பிரயோசனமில்லை” என்றவாறு அகன்றார்.

தோல்வியில் முறியும் மனங்கள்..!

This entry is part 30 of 41 in the series 13 மே 2012

சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி…நான் அப்பறமா வரேன்…..அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு …..முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா … கட கடன்னு இறங்கி வந்தோமான்னு வா…வீடு… வீடா.. நின்னு கதை பேசாதேன்னு…….அவசர அவசரமாக போற போக்கில் என்னிடம் சொல்லிவிட்டு.. படிகளைத் தாவித் தாவி சிட்டாக இறங்கினாள் சங்கீதா. அவளது அம்மா என்ன சொன்னாலும் சரி…காலையில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 13 ஆணவம் நொறுங்கும் போது !

This entry is part 29 of 41 in the series 13 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலின் வலைகள் விரிந்துள்ளன பூதள மெங்கும் ! அவற்றில் எவர் வீழ்வார் என்று அறிவது யார் ? ஆணவம் யாவும் நொறுங்கும் போது தானாய்ப் பொழியும் கண்ணீர்த் துளிகள் என்பதை அறிவது யார் ? இன்ப மயமான இவ்வுலகில் உன் தேவைகள் வேண்டுவாய் நிரந்தர மாக ! சன்மானம் தர வேண்டும் உன்னை நீயே என்று நீ அறிய மாட்டாய் ! தருணம் ஒன்று […]

நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி

This entry is part 28 of 41 in the series 13 மே 2012

அன்புடையீர் வணக்கம் கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின்தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன்,  சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு  எதிரான […]

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்

This entry is part 27 of 41 in the series 13 மே 2012

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தனது கனவுத் திட்டமாக தொடங்கிய படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் முதல் பேட்ச் பல தடைகள் தாண்டி முடிந்துள்ளது. இதில் சேர்ந்த மாணவர்கள் கற்றார்களோ இல்லையோ, நான் நிறைய கற்றுக் கொண்டேன். மனிதர்களைப் பற்றி. இதன் இரண்டாவது பேட்ச் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது.  படிமை என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள நீங்கள் எங்களுடன் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும். படிமை என்று […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்

This entry is part 26 of 41 in the series 13 மே 2012

+++++++++++++++++++++++++++ காலனே நண்பனை நெருங்காதே ! +++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில […]

வளர்ச்சி…

This entry is part 25 of 41 in the series 13 மே 2012

கறுப்பு, வெள்ளைப் பணங்கள் உரமாகி கழனிகளில் கான்கிரீட் காடுகளின் வளர்ச்சி அமோகமானதால், கவலைக்குக் கூட மோட்டுவளையைப் பார்க்கமுடியாத கவலை.. மரக்கிளைகள் மறைந்துபோனதால், தொங்கும் மின்விசிறிக்கும் தலைக்கும் துப்பட்டா இணைப்புக் கொடுத்து தற்கொலையாக்கும் துயரம்.. தூதுப்புறாக்கள் மனிதனின் பசிப்பிணிக்கு மருந்தாகிப்போனதால், பல சேதிகள் பலான சேதிகளாய் கைபேசியால் பரிமாறப்படும் பரிதாபம்.. குடியிருப்புக்களில் இடக்குறைவால், முடக்கோழிகளாய் முதியோர்கள் முதியோர் இல்லங்களுக்குக் கடத்தப்படும் கொடுமை.. சாதிக் கணக்கெடுத்து சாதிக்கு சங்கம் வைத்து சாதிக்காய் சண்டையிட்டு சாதியால் விலைபேசி ஜனநாயகம் காக்க நிற்கும் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1

This entry is part 24 of 41 in the series 13 மே 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்கங்கள்            (முதலாம் அங்கம்)                     அங்கம் -1  பாகம் – 1 நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி : ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி […]

சுப்ரமணிய பாரதியாரும் சுப்ரீம் கோர்ட்டும்

This entry is part 23 of 41 in the series 13 மே 2012

கஞ்சி குடிப்பதற்கில்லார்-அதன் காரணம் இவை என்னுன் அறிவுமில்லார் பஞ்சமோ பஞ்சமென -நிதம் பதைபதைப்பார் மனம் துடிதுடிப்பார் நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்னும் சுப்ரமணிய பாரதியாரின் ஆதங்கமான பாடலை கடந்த வாரம் ஒரு பொது நல மனுவில் வணக்கத்துக்குரிய சுப்ரீம் கோர்ட்டின் கருத்து நினைவு படுத்தியது. ‘ப்ளாஸ்டிக் பைகள் அணு குண்டை விட ஆபத்தானவை” என்ற கருத்தை மேதகு நீதிபதிகள் கூறியுள்ளனர். குடி நீருக்கான நன்னீர் வாய்க்கால்கள், குழாய்கள், கழிவு நீர் ஜல […]

இன்றைய தமிழ் சினிமாவின் சென்டிமெண்ட் வியாபாரம்

This entry is part 22 of 41 in the series 13 மே 2012

சிலவருடங்களுக்குமுன் எங்களூரில் ஒரு நாள் சாலையோரத்து காப்பிக்கடையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வினியோகித்துக்கொண்டிருந்தார். எனக்கும் கொடுத்தார். அது ஒரு மார்வாடி சேலைகளை விற்க வைத்த கண்ணீர் மடல் அல்லது கோரிக்கை. தான் மிகப்பெரிய வியாபாரியாக வடமாநிலமொன்றில் செழிப்பாக வாழ்ந்து வரும்போது திடீரென வியாபாரம் பெரும் நட்டத்தைச் சந்தித்ததாகவும், அதிலிருந்து தற்கொலை பண்ணலாமென யோசித்துப் பின்னர் எஞ்சிய சேலைகளையெடுத்துக்கொண்டு தமிழகத்துக்கு வந்து ஊர்ஊராக வந்து ஒன்றும் பெரிதாக நடக்கவில்லையெனவும் கடைசியில் இவ்வூருக்கு வந்து நகராட்சி […]