முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார். சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள் பேசும் ஆற்றலை அடைந்தான். […]
ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் பரிவாளர்களாக தன்னைக் காட்ட முயன்றது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் கூடும்பொழுதெல்லாம் புறம் பேசுவதில் திளைத்து இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்கள் கூடுமிடத்திலெல்லாம் இவனொரு மௌன மடையனென பேசிக்கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அன்றொரு நாள் அவர்களின் […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை சைவ உலகின் முதன்மையர் காரைக்காலம்மையார். தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே முதலானவர். முதன்மையானவர் ஆவார். அவரின் பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் செழுமை மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம் ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய இன அடையாளக் குறியீடாகும். தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ் வளர்ச்சி என்பதும் மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது. தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் […]
–பாலமுருகன்.லோ நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஒருவித படபடப்பு. ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர் அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார். என்றும் போல் அன்று கணேசன் அலுவலகம் சென்ற போது, அங்கிருந்த நண்பர்கள் சக […]
ரவி அல்லது இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் […]