யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது. “தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் […]
அஸ்கர் அலி எஞ்சினியரின் மறைவுச் செய்தி கேட்ட மாத்திரத்தில் ஒரு நெருங்கிய உறவினரை இழந்துவிட்டது போன்ற பதட்டம் ஏற்பட்டது.நேருக்கு நேர் சந்தித்ததில்லை. கை குலுக்கியதில்லை. உரையாடியதில்லை. பிறகேன் இந்த பதட்டம்? மும்பையில் இறந்த அவருக்காக தென்கோடிமூலையில் வாழும் நான் ஏன் வருத்தப் படுகிறேன்.கேள்வி எழும்பாமல் இல்லை. என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு மூலகாரணம் அஸ்கர் அலி எஞ்சினியரின் எழுத்துக்கள்தான். தமிழ்மொழிபெயர்ப்பின் மூலமாகவும் ஆங்கில கட்டுரைகள் வழியாகவும் அஸ்கர் அலி எஞ்சினியர் எழுத்துக்கள் என்னை வந்தடைந்திருந்தன. எண்பதுகளில் வெளியான அஸ்கர் […]
முக்கியத்துவம் இல்லாதவையானாலும், சில நினைவுகள் நம் மனங்களை விட்டு நீங்குவதேயில்லை. சில நினைவுகளை மற்றவர்களுடன் உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளும் போது நம்மைப் பற்றிய சிலவற்றைச் சொல்ல நேர்ந்து விடுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க முடிவதில்லை. சில நேரங்களில் கொஞ்சம் தற்பெருமையாக நம்மைப் பற்றிப் பேசுவதிலோ எழுதுவதிலோ இந்தப் பகிர்தல் முடிந்துவிடுகிறது. இது பற்றிய கூச்சம் ஏற்பட்டாலும், இந்த நிலை தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது. இப்போது சொல்லப் போகும் விஷயமும் அப்படிப்பட்டதுதான் என்பதால் தான் இந்தப் புலம்பல் […]
என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை. உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே இயல்பான என் உடல்மொழி உன் காமத்தீயில் கருகிப்போனது என்னால் எழுத முடியவில்லை. களவும் கற்பும் நீ எழுதிவைத்த இலக்கணம்தான். […]
* திண்ணையில் பல ஆண்டுகள் தொடராக வந்த நாவல் —————————————- கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன் வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் ( 1889 – 1939 ) 50க்கும்மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார்.ஆனால் அவை பெருங்கதையாடலை தகர்க்கும் சிறுகதையாடல்களாக புது வடிவம் […]
பெண்டுலம் வைத்த பழங்கால உயரமான தேக்குமரக் கடிகாரம் டங்.. டங்.. என்று முரட்டுத்தனமாக ஒலிக்கிறது. மணி 12 அடித்திருக்குமோ.. இல்லையில்லை 11 தான் அடிச்சுது. நான் எண்ணிக்கிட்டேனே. இப்பதான வந்து படுத்தேன்.. 12 ஆகியிருக்காது. தண்ணி தாகமா இருக்கே.. கண்ணைத் திறக்க பயம். கையைத் தடவி கட்டிலுக்கருகில் தண்ணீர் பாட்டிலைத் தேடினாள். அயோடா, தண்ணீர் கொண்டு வந்து வைக்க மறந்துட்டேனோ. இருக்காதே. இது வரைக்கும் மறந்ததில்லியே. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன வந்துடப்போவுது? ‘காக்க, காக்க […]
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
இரா. கௌரிசங்கர் “இந்த ரோட்டிலயா போகப் போற” என்றேன் அஜய்யைப் பார்த்து. நான் இராகவன் – அஜய் என்னுடன் ஒன்றாக ‘ராம்ஸ்’ நிறுவனத்தில் மேனேஜராக வேலைப் பார்க்கிறான். நான் பைனான்ஸ் மேனேஜர். அஜய் டெக்னிகல். இருவரும் சம வயதுகாரர்கள். நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒரே பகுதியிலிருந்து அலுவலகத்திற்கு வந்தாலும் அவரவர் காரில் தான் தினமும் வருவோம். அன்று என்னுடைய காரை சர்விஸ் விட்டிருந்ததால், அஜய் எனக்கு லிப்ட் கொடுத்திருந்தான். நாங்கள் செல்லும் பாதையில் ஒரு குறுக்கு வழி […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com அ டேயப்பா …. படிக்கிறதுக்கு ஆவலா இருக்குறீங்க போலிருக்கே…ஒருத்தருக்குத் தோல்வி மேல் தோல்வி வந்தா அவரு என்னதாங்க செய்வாரு?..ஒன்னு தோல்வியத் தாங்க முடியாம இறந்துடுவாரு…அல்லது அவருக்குப் பைத்தியந்தான் பிடிக்கும்…ஆனால் சிலபேரு அதை சவாலா எடுத்துக்கிட்டு சளைக்காது முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க.. அப்படிப்பட்டவங்க சிலபேருதான் உலகத்துல இருப்பாங்க..அந்த வரிசையில முதல்ல இருப்பவருதாங்க இப்ப நான் சொல்லப் போற புகழ் பெற்ற ஏழை…என்ன ஒங்க நினைவுக்கு அவரு வந்துட்டாரா..ம்..ம்..ம்..அவருதான் ஆபிரகாம் லிங்கன்… 1809 ஆம் ஆண்டில் பிப்ரவரி 12-ஆம் நாள் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் தாமஸ் லிங்கன், நான்சி ஹாங்க்ஸ்(Nancy […]
பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும் சுற்றித்திரிய நேரிடும்போது இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல் பொத்திக்கொள்கிறது பாடலை பறவைகள் தாண்டிப் பறக்கையிலும் காத்துக்கொள்ளப்படும் இசை செறிந்த பாடல் சலித்துக் கொள்கிறது ஓய்வின்றிய அலைச்சலின் எல்லை எதுவென்றறியாது தனிமைப்பட்டதை இறுதியிலுணர்ந்தது தெளிந்த நீர் சலசலக்கும் ஓரெழில் […]