ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ரேடியோவில் “குந்தி விலாபம்” வந்து கொண்டிருந்தது “ராமநாதன்! நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” தீனமாய் கேட்டாள் சாஹித்தி. “உனக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?” “என்னவோ, எனக்கு அப்படித் தோன்றுகிறது.” “நீ என்றுமே என் சாஹிதி தான். நான் காதலிப்பது உன்னைத்தானே தவிர உன் பணத்தையோ, சொத்தையோ இல்லை.” அவளை அருகில் இழுத்துக் கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். “சாஹிதி!” “ஊம்.” “நாம் […]
பிம்பிசாரரின் எதிரே கலா உதாயின் வணங்கி நின்றிருந்தார். “நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிகின்றன உதாயின். ஆனால் கௌதம புத்தர், மன்னர் பிம்பிசாரர் கருதுவது போலத் தங்கள் பாலிய சினேகிதராக இல்லை. கஸ்ஸாபா பழங்குடியினர் அக்கினி தேவனைத் தவிர வேறு யாரையும் ஏற்காதவர்கள். அவர்களே தங்களது தலைவர்களான கஸ்ஸாபா சகோதரர்களுடன் பௌத்தத்தில் இணைந்திருக்கிறார்கள்” “சிறியவனுடைய பேச்சு அதிகப்பிரசங்கமாக இருந்தால் மன்னிக்கவும். பெற்ற தாயையும் தந்தையையும், நம்பி வந்த மனைவியையும் தான் பெற்ற மகனையும், பிறந்த மண்ணையும் விடவா […]