3 – 06 – 2012, ஞாயிறு மாலை 7 மணி, மத்திய அரிமா சங்க கட்டிடம் , காந்தி நகர், திருப்பூர். முன்னிலை: திருவாளர்கள் பொன்னுசாமி, பிரதீப்குமார், ரங்கசாமி (மத்திய அரிமா சங்க நிர்வாகிகள்) தலைமை : சாமக்கோடாங்கி ரவி வெளியீடு: *சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவல் மலையாள மொழி பெயர்ப்பு அறிமுகம்: * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பு *பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” […]
அறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் […]
கணினியில் தமிழைப் பரப்புவதை இலட்சியமாகக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் `கனவு மெய்ப்பட வேண்டும்` என்ற தலைப்பில் வெகு சிறப்பாக துபாய் ஸ்டார் இண்டர் நேஷனல் பள்ளிக்கூட வளாக அரங்கத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அமீரகத் தமிழ் மன்றம் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வண்ணம் மகளிருக்கான […]
(கட்டுரை : 80) (Newfound Exoplanet may turn to dust) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமியைத் தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி ஒளிக்கருவி விண்மீன் ஒளிமுன்னே அண்டக் கோள் ஒளிநகர்ச்சி பதிவாக்கிப் புதிய கோள் கண்டுபிடிக்கும் ! விண்மீன் பரிதி போல் தன்னொளி வீசும் ஒளிமந்தை மீன்களைச் சுற்றும் உலகங்கள் கோடி ! ஈர்ப்பு விண்வெளியில் பூமியைப் போல் நீர்க்கோள் […]
யூ டியூப்பில் அருமையான குறும்படங்கள் காணக்கிடைக்கின்றன. நல்ல நடிப்பு, துல்லிய ஒளிப்பதிவு என அமர்க்களப்படுத்துகின்றன அவைகள். சில காதலில் சொதப்பும் ரகம். சில பிரச்சார நெடி. இனி நான் பார்த்த இரண்டு குறும்படங்கள் பற்றிய எனது பார்வை. ஹரியின் “ 1680 “ தினமும் தண்ணியடித்துக்கொண்டு வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் முன்று இளைஞர்கள். அதில் ஒருவனுக்கு காது கேட்காது, ஆனால் சினிமா பைத்தியம். இன்னொருவன் மேலைநாட்டுச் சங்கீதத்துக்கு குத்து நடனம் ஆடுபவன். அவனுக்கு அது மட்டும்தான் தெரியும். […]
முதலில் ஒன்று சொல்லியாக வேண்டும். விமலுக்கு இந்தப் படத்தில் தொள தொள பேண்ட் இல்லை. அழுக்குச் சட்டை இல்லை. சார்லி சாப்ளின் நடை இல்லை. ஆள் மாநிறத்திலிருந்து, சிகப்புக்கு மாறி இருக்கிறார். வரவேற்கத்தக்க மாற்றம். கதாநாயகி நிஷா அகர்வால், காஜல் அகர்வாலின் தங்கை. வனப்பில் அக்கா என்றே சொல்லி விடலாம். அதாவது, அவரை விட இன்னமும் வாளிப்பாக இருக்கிறார். கண்கள் பெருசாக,அக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேற கட் ஆப் மார்க்கை விட கூடுதல் தகுதி இவரிடம். சந்தானம் […]
(கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கருத்தரங்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் அரிய முயற்சியில் இந்தியாவிலே மிகவும் தொன்மை வாய்ந்த நகரமும், முதலாவது தலைநகரமுமான கொல்கத்தாவில் மிகவும் சிறப்பாக நடந்தது. இவ்வாண்டு மார்ச் 8-9 தேதிகளில் இந்தக்கருத்தரங்கம் நடந்தேறியது. கொல்கத்தாவைப் பற்றி சிறிது சொல்லித்தான் ஆக வேண்டும். காரணம் இந்தியாவில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாநிலமாகும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இராமகிருஷ்ண பரஹம்சர், விவேகானந்தர், அன்னை […]
அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-28 காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் […]
30. நள்ளிரவைக் கடந்து மூன்று சாமங்கள் கழிந்திருக்கலாம். செண்பகம் மொட்டைமாடியில் உறங்காமல் குட்டிபோட்ட பூனைபோல உலாத்தினாள். குளிர்ந்தகாற்றுடன் கரிய இருளும் உடலைத் தொட்டுக் கடந்து சென்றாலும் மனதைபோலவே உடலும் அனலாய்க் கொதித்தது. கவிழ்ந்திருந்த வானத்தில் நட்சத்திரங்கள்கூட மெருகு குலைந்த கற்கள்போல பொலிவிழந்திருந்தன. அண்மையில்தான் எங்கோ மல்லிகைபூத்திருக்கவேண்டும். மல்லிகை பூக்களின் மணத்தோடு, தேனுண்டு அம்மலர்களில் உறங்கிபோன தேனீக்களின் மணமும் கலந்து வீசியது. கண்களை மூடி மல்லிகை மணம் முழுதும் தனக்கே தனக்கென்று நினைத்தவள் போல சுவாசக்குழலில் அவற்றைத் திணித்தாள். […]
சீனாவில் தற்போதைய மக்கள் தொகையில் 32 மில்லியன் பையன்கள் பெண்களைவிட அதிகமாக ( இருபது வயதிற்குட்பட்டவர்களில்) அதிர்ச்சியைத் தருகிறது. கருச்சிதைவும், குழந்தைகளின் வளர்ப்புச் சிரமங்களும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. திருமண வயதையொட்டிய ஆண்களின் பெண் தேடலில் இது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. பெண் குழந்தைகளை வீட்டில் பள்ளி வயதிற்கு முன் பூட்டி வைத்து பாதுகாப்பது, பள்ளிக்குப் போக விடாமல் வீட்டிலேயே இருக்கச் செய்வது, என்று பல அசாதாரண நடவடிக்கைகளும் சில சமயங்களில் காணப்படுகிறது. பள்ளி […]