கோடை நாடக விழாவில் அரங்கேறிய நாடகம். இம்முறை காமெடி களம். நவீன தொழில் நுட்பத்தை கையில் எடுத்து சாடியிருக்கிறார் ஆசிரியர் நாணு. வழக்கம்போல நாடகத்தை தாங்கி நிற்பவர் வெட்டரன் காத்தாடி தான். இனி அவரை ‘விட்’ டரன் என அழைக்கலாம். சகஜ வார்த்தைகளே அவர் வாயிலிருந்து புறப்படும்போது ஹாஸ்ய லேகியம் ஆகி விடுகின்றன. நவீன தொழில் நுட்பம் அறியாத அப்பா சிவராமன், அவரை விட ஐ க்யூ குறைவான அவரது மனைவி லலிதா. மென்பொருளில் புகுந்து […]
. எம்.பி. பி.எஸ். வகுப்பின் முதல் நாள் மறக்க முடியாததாகவே இருந்தது. வகுப்பு மாணவ மாணவிகளை ஒருவாறு அறிந்து கொள்ள முடிந்தது. அது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அன்று மாலை விடுதி திரும்பியதும் அந்த மகிழ்ச்சி அனைத்தும் மறைந்து போனது. காரணம் அங்கு காத்திருந்த சீனியர் மாணவர்கள்தான். இன்று இரண்டாம் நாள் ரேகிங்! நாளை இறுதி நாள். இந்த இரண்டு இரவுகளைக் கடந்துவிட்டால் நாங்கள் சுதந்திரப் பறவைகளாகிவிடுவோம். அதன்பிறகு யாரும் எங்களைக் கண்காணிக்க மாட்டார்கள்! அன்றும் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நான்கைந்து நாட்கள் கழிந்தன. அபிஜித் மைதிலி இரண்டு பேரும் பிஸியாக இருந்தார்கள். இந்த நான்கைந்து நாட்களில் அபிஜித் சித்தார்த்திடம் போய் சற்று நேரம் இருந்து விட்டு வந்தான். ஒரு நாள் வந்ததுமே நான்கைந்து பேப்பர்களை மைதிலியின் முன்னால் வைத்தான். எல்லாமே சல்வார், கமீஸ், ஸ்கர்ட், பிளவுஸ் டிசைன்கள். பதினெட்டு இருபது வயது பெண்களை, முக்கியமாக கல்லூரிப் பெண்களை உத்தேசித்து வரையப்பட்டவை. கலர் பென்சில்களால் ஸ்கெட்செஸ் தத்ரூபமாய் இருந்தன. […]
முருகன் கோயிலுக்கு அருகில் இருக்கும் காய்கறிக்கடையில் வழக்கமாக நான் காய் வாங்குவது உண்டு. அன்றும் அப்படித்தான். ஆனால் இந்த முறை காலையில் ஒரு விசேசத்திற்குப் போய்விட்டதில், மாலைதான் போக முடிந்தது. ஓய்வுக்குப் பிறகு இந்தப் புறநகர் வாழ்க்கை அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லாமல் இல்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே ஓடியதில், பல சுவையான விசயங்களைத் தொலைத்து விட்டது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது. அலுவலகம் போன காலங்களில், ஆறு மணிக்கு மேல் தூங்க விடமாட்டாள் என் மனைவி. அவள் என்னை எழுப்புவதே […]
[நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து] நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர் ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை எடுத்தாள்வது அவருக்கு மிக இயல்பாக வருகிறது. யாருமே அதிகம் படித்தறியாத, அவரே சொல்வதுபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களாக, தமிழ் விரிவுரையாளர்களாக, […]