“ஒன்றுமில்லை “, தெரிந்த பிறகும் ஒன்றை பற்றிக்கொண்டு வாழ்தல், ஒன்றைத்தான். அது எது என்ற தேடுதல் கடவுளைச்சுற்றியோ, இஸங்களை சுற்றியோ, இலக்கியத்தை சுற்றியோ, இசையை சுற்றியோ, வனங்களை சுற்றியோ, போர்களை சுற்றியோ எது எது என அறிதலின் பொருட்டு வாழ்க்கை நகரும் மெல்ல நத்தையென எது பொருட்டும் கவலை இல்லாமல் நடப்பது வேதாந்திகள் வேலை. எதையோ ஒன்றை பற்றி, சுற்றி ஊர்வலம் வருவது சுயம்பிகளின் வாழ்க்கை. ஆணைச்சுற்றி பெண்ணும், பெண்ணைச்சுற்றி ஆணும் ஆடிப்பாடி வருவது ஆனந்தக்கூத்தன் சொன்னது. […]
குரு அரவிந்தன் கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி […]
புரண்டு புரண்டு படுத்தார் தர்மகர்த்தா. தூக்கம் வரவில்லை, துக்கம் தொண்டையை அடைத்தது. யாரிடம் சொல்லி அழுவது. மனிதர்களிடமா. .., பிரயோசனமில்லை. அந்த அனந்த பூரிஸ்வரிடமா? அவரை தான் நேற்றே தூக்கியாச்சே!! இனி யாரிடம் சொல்லி அழ. காலையில் ஓதுவார் வந்தார் தொங்கிப்போன முகத்துடன் மீளா துக்கம் கண்ணில் புரண்டது. “சிவன் சொத்து குலநாசம் “, தேம்பி தேம்பி அழுதார் தர்மகர்த்தா ! தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி! பாடினார் ஓதுவார். கண்ணில் வழிந்தோடியது தோற்றப்பிழையா? […]