முருகபூபதி – அவுஸ்திரேலியா ‘புதிர்’ என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy). இந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன். இவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின் தொடக்கத்தில் தமது அன்னையார் திருமதி கனகம்மா தம்பியப்பா […]