தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு வந்த இரைச்சல், நாமாவளி தமிழினத் தலைவா போற்றி, கலைஞரே போற்றி, முத்தமிழ்க் காவலரே போற்றி, இன்னும் எத்தனை போற்றிகளோ, மாதிரிக்கு ஒன்றிரண்டு தந்தால் போதாதா, அந்த இரைச்சல், தமிழகம் முழுதும் கேட்டு வந்த அந்த இரைச்சல் இப்போது கழகக் கூட்டங்களோடு, அறிவாலயத்தோடு முடங்கிக் கிடக்கிறது. முன்னரோ கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுகவினரும் தவிர மற்ற எல்லோரும் […]
ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா ? அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி. அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல், பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம் வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி.. -சித்ரா (k_chithra@yahoo.com)
பின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய நேரத்தில் வேர் பிடித்திருந்தது பயம். கண்ணேறு., காத்து கருப்பு., மோஹினி எல்லாம் சுத்தினபடி. ஒரு ஆழப்பாயும் வெறுப்பு கத்தியில்லாமல் குத்தினபடி.. ஒன்றுமற்று கலக்கும் காழ்ப்பின்முன் கவிழ்ந்திருந்தது தன்மை. பின்னெப்போதும் சந்திக்க முடியவில்லை அசூயை படிந்த கண்களை. ************************************** இடறி விழவைத்தும் போதாமல் இருப்பற்றுத் திரிந்து கொண்டிருக்கிறது.. சாவேற்படுத்துவதற்கில்லை. வெறுப்பேற்படுத்துவதற்கே வெறித்துப் பார்க்கிறது. குழம்பிக் கிடக்கும் […]
சிறகு இரவிச்சந்திரன். மயிலாப்பூர் பாலையா அவென்யூவில் மீண்டும் மௌலி (எ) அழகியசிங்கர் நடத்திய கூட்டம். சின்ன அரங்கு குளீரூட்டப்பட்டிருந்தது. தேடி சந்தின் ஒரு கோடியில் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இடத்தைக் கண்டுபிடித்தேன். மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக […]
காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்! அதிர்ச்சியும்.. நிசப்தமும் நிலவிய தருணம் உள் நுழைந்தோம்.. நண்பர்கள் புடை சூழ! வேண்டாம்.. தொட்டு விடாதீர்கள். பல ராசிகளுக்கு அடித்து விடும். சில ராசிகளுக்கு ஒடிந்து விடும். – முஹல்லத் தலைவர் கூற்று! மினுங்கும் தகடுகளை கையிலெடுத்துக் கூறினேன்.. ராசியே இல்லாதவனுக்கு என்ன தான் நிகழுமென! நீ அறிந்திராய்.. உண்மையாய் உணர்வினிலே […]
பூபாளம் சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில் நின்றிருக்கின்றாயா கூண்டுப் பறவைக்கு விடுதலை அளித்தபோது ஏற்பட்ட நிறைவை எப்போதாவது அனுபவித்திருக்கின்றாயா தாயின் கரங்களுக்கு அப்புறம் தென்றல் வருடிக் கொடுப்பது தானே மனதுக்கு இதமளிக்கின்றது தோல்வியின் மூலம் கற்கும் பாடங்களை எளிதில் மறந்துவிட முடியுமா சிகரத்தை அடைந்ததும் மனதில் வெற்றிடம் ஏற்படுவதில்லையா காயம்பட்ட இதயங்களுக்கு வார்த்தைகள் தானே ஒத்தடம் கொடுக்கின்றன […]
1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே! உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த பின்னால் தான் என் வாழ்வெனும் படகில் மிதந்து வந்தேன் உனக்குள்… ஆயினும் தோழி எனக்குமட்டும் உன் அன்பினில் ஒரு துளி தரமறுத்தாய்..! சிலருக்கு கடல் நீ, எனக்கொரு துளியாய் சுருங்கி விட்டாய்! வாழ்வது சில நாள் அதற்குள்ளே பாசத்தைப் புரிவது சிலர் தான்..! நீ தூரத்திலே ஒரு புள்ளியாய் போனாய், என் வானத்திலே நீ […]
குமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. அசையும் கயிறுக்கு அஞ்சி ஆழ் கிணற்றினுள்ளேயே துள்ளி விழுகிறது என்றான் நண்பன். இல்லை.. வாளி சிறிய குளமென்று வர மறுத்து பிடிவாதமாய் அதைவிடப் பெரிய குளமென மீண்டும் கிணற்றிலேயே விழுந்து விடுகிறது என்றேன் நான். குமரி எஸ். நீலகண்டன் பழைய எண்-204, புதிய எண் – 432. D7, பார்சன் […]
‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல் ———————————————————- – வே.சபாநாயகம். எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து அது பற்றிய ஒரு அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் நான் படிக்கத் தொடங்குவேன்.’தலைச்சுமை’ என்ற நாவலின் முன்னுரையில் இந்நூலாசிரியர் திரு.பழமன் அவர்கள் – கொங்கு வட்டார நாவல் என்றதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருகிற புகழ் பெற்ற நாவலாசிரியர் திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டிருந்ததை நம்பி ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன்.ஏனெனில் வட்டார நாவலில் தனக்கென தனி […]
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென வார்தெடுத்த சர்பமொன்று சாத்தானின் நிழலென ஊடுருவி மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும் எரிமலையின் பொருமலாய் அந்தி சாய்கிற நேரத்தில் எரியும் சிவந்த தழலோடு வாய் பிளந்து அபகரிக்கும் பொசுங்கும் நினைவு -சாம்பலை பொழுது புலராத முன்பனிக்காலத்து மழுங்கின படலங்களினூடே பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள் விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும் […]