காரணங்கள் தீர்வதில்லை

This entry is part 11 of 17 in the series 13 நவம்பர் 2016

சேயோன் யாழ்வேந்தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அப்பா வீட்டில் இருந்தார் விருந்தினர்கள் வந்திருந்தார்கள் பலகாரம் செய்துகொண்டிருந்தேன்… வெய்யில் மண்டையைப் பிளந்தது மழை வரும் போலிருந்தது காரணங்கள் தீர்ந்தாபாடில்லை. எளிதாய்க் கிடைக்கும் காரணங்கள் இல்லையென்றால் மிகவும் சிரமப்பட்டுத்தான் போயிருப்பாய். வாராததற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் காத்திருந்ததற்குக் காரணம் ஒன்றுதான். seyonyazhvaendhan@gmail.com

மரத்துடன் மனங்கள்

This entry is part 12 of 17 in the series 13 நவம்பர் 2016

கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது. ”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!” “பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி” இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. “பல்லவி மாத்திரம் இதிலை […]

மெரிடியனுக்கு அப்பால்

This entry is part 13 of 17 in the series 13 நவம்பர் 2016

என்.துளசி அண்ணாமலை “அதோ…மலை உச்சியில் தெரிகிறது பாருங்கள், ஒரு உயரமான கட்டிடம்! அதுதான் கிரீன்விட்ச் மெரிடியன் கட்டிடம்!” அரசு காட்டிய திசையில் பார்வையை ஓடவிட்டான் சுந்தர். அவனோடு வந்திருந்த மற்ற நண்பர்களும் வியப்போடு பார்த்தனர். அடிவாரத்திலிருந்து பார்க்கும்போது மிகப் பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது அந்தக் கட்டிடம். வாய்விட்டு வர்ணிக்க இயலாத பரந்த மைதானம். கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே போய், மலையில் முடிந்திருந்தது. மைதானத்திற்குக் கரை கட்டினாற்போல வானளாவிய உயர்ந்த மரங்கள். ஒவ்வொன்றும் வயதான யானையின் உடலைப் போன்று […]

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

This entry is part 14 of 17 in the series 13 நவம்பர் 2016

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம். ——————————————————————– நவ – 7 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவ மனையில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி நிறுவனர் வைத்தியர் கே.பி.அருச்சுனன் தலைமையில், கிருபானந்த வாரியார் நினைவு தினக் கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. வாரியார் சுவாமிகளின் திருவுருவ படம் திறப்பு செய்து மாலை அணிவித்தல் மற்றும் மௌன […]

உண்மை நிலவரம்.

This entry is part 15 of 17 in the series 13 நவம்பர் 2016

ஞா.தியாகராஜன் இந்த நகரத்தில் விலையுயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன இந்த நகர்த்தில் அனைவரும் யாரின் கைகளையோ இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள் அனைவரும் யாரையோ அழைத்து அவசர அவசரமாக தங்கள் முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள் குழந்தைகளுக்கு சாக்லெட்களை வாங்கி கொடுக்கிறார்கள் நிறைய நீதிமான்கள் தங்கள் போதனைகளை அச்சுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள் நீங்கள் கை தட்டுவதை நிறுத்தி விடுவிர்கள் என்றால் நிச்சயம் இங்கே யாரும் ஒரு பிச்சைகாரனுக்காக தங்கள் பிரசங்கத்தை நிகழ்த்தி கொண்டிருக்க மாட்டார்கள் thiyagarajan852@gmail.com

(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்

This entry is part 16 of 17 in the series 13 நவம்பர் 2016

கோ. மன்றவாணன் எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் கதைப்பாத்திரங்களின் பின்னால் மனமும் நிழலாகத் தொடரும் விந்தையைக் காணலாம். நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே விவரிப்பதில் எந்தச் சிரமும் இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத- காதுக்குக் கேட்காத மனதை, ஒருவர் ஒளிப்பதிவு செய்யவோ, ஒலிப்பதிவு செய்யவோ முடியுமா? உருவத்தைப் படம் பிடிக்கலாம். உள்ளத்தைப் படம்பிடிக்க முடியுமா? முடியும் என்றுதான் மெய்ப்பித்துக் காட்டுகிறது வளவ. துரையனின் ஒவ்வொரு […]

டவுன் பஸ்

This entry is part 17 of 17 in the series 13 நவம்பர் 2016

வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப முயன்று பின் அக்கறையெடுத்துக் கொள்ளாதவன் போல் அப்படியே நின்றான். பனியன் கம்பனிக்கென்றான இயந்திரங்கள் ஓடும் சப்தம் ரீங்காரமாய் கேட்டது. உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறவனின் மூச்சிரைப்பு போல அது சுப்ரமணிக்கு இப்போதெல்லாம் படுகிறது. மூச்சிரைத்தபடி ஏதோ வாகனம் பின்பக்கம் ஓடிப்போயிற்று. “”என்ன நின்னுட்டே? உள்ளே வர்றது.. நீ யாரைக் கூட்டிட்டு வந்தாலும் வரவேற்க மொதலாளிதா இருக்காறே?” […]