புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்

This entry is part 1 of 24 in the series 24 நவம்பர் 2013

ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002.   முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான விடுதலையை மக்கள் அடைய முடியும் என அம்பேத்கர் கருதியுள்ளார். வாழுமிடம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்தும் அதிகாரம் மற்றும் உரிமைகளுடன் அமைய வேண்டும்.  பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்வியல் கேள்விக் குறியாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலைக்கான காரணம், இக்காரணம் தொடர்ந்து வளர்ந்து வந்ததற்கான சமூகச்சூழல், ஏற்பட்ட […]

​எப்படி முடிந்தது அவளால் ?

This entry is part 8 of 24 in the series 24 நவம்பர் 2013

  மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப்​ போனதையும் மீண்டும் புதுப்பிக்க எண்ணி தோல்வி கண்ட தருணம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன் பால்யம் கடந்த பின்னும் வாலி ​ப​ மங்கையாய் சலிக்கா  து​ முழங்காலில் ஊர்ந்திட எப்படி முடிந்தது அவளால் ? உள்ளத்துக் குமறல்களை உலகுக்கு மறைத்து சிரிப்பொலி பரப்ப எப்படி முடிந்தது அவளால் ? பின் நின்றுப் பார்க்கும் கண்களையும் விச்சுக் கொட்டும் உதடுகளையும் சலிக்காமல் […]

திண்ணையின் இலக்கியத்தடம் -10

This entry is part 4 of 24 in the series 24 நவம்பர் 2013

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்- அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக் கழகமும் இந்தியாவும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது நல்ல திட்டம். 2.பாரதிதாசனுக்கு ஜாதி முத்திரை குத்த முயன்ற ஒரு ஜாதி சங்கத்தின் முயற்சியை அவரது பேரன் முறியடித்துள்ளார். […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 6 of 24 in the series 24 நவம்பர் 2013

    (Children of Adam) உரிமை இடம்      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         ஆண்மகன் ஆத்மா சிறியது மில்லை பெரியதும் இல்லை ! அவனும் தன் பீடத்தில்தான் அமர்ந்துள்ளான். அனைத்துப் பண்புகளும் உள்ளன ஆணிடம். ஆற்றலும் இயக்கமும் பெற்றவன். நாமறிந்த பிரபஞ்ச அலையோட்டம் ஓடுகிறது அவனிடம் ! இகழ்ச்சி ஏற்புடைத்து அவனுக்கு; பசியும் உள்ளது அவனுக்கு; எதிர்ப்பும் ஏற்புடைத்து […]

பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

This entry is part 22 of 24 in the series 24 நவம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை பெரியார் கலைக்கல்லூரி கடலூர்-607 001. கட்டுகள் உடைத்து உருவாகும் கட்டுப்பாடுகளுக்குள் சமுதாயம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மகாகவி பாரதி.  தெளிந்த சிந்தனைக ;குள்ளிருந்து கொப்பளித்து வெளிவரும் தனது சொற்களைப் பேச்சு, உரை, கட்டுரை, கதை, வசனம், கவிதை என்ற எவ்வுருவத்தில் அமரவைப்பினும் அதனை ஓர் ஆயுதத்தைக் கையாளும் கவனத்துடனேயே செய்துள்ளார்.  பேண்ணுக்கான, பெண்ணுக்குரியத் தமது சிந்தனையையும் அதுபோன்ற தளத்திலேயே பதிவு செய்கிறார்.  சீர்திருத்தம் பிரச்சாரத்தில் பெண்ணுரிமைக்கெ முன்னுரிமையைக் […]

தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !

This entry is part 18 of 24 in the series 24 நவம்பர் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   தெற்கி லிருந்து இன்று அடிக்கும் தென்றலுக்கு காட்டு மரங்கள் எல்லாம் தலை ஆட்டும் ! நாட்டியம் ஆடிக் கொண்டு வரும் வானத்து மோகினிச் சீரிசையாய்க் காற் சலங்கை ஒலிப்பாள் இதயப் பிரிவு ஏக்கத்  துடிப் போடு !   மாதவிக் கொடியிலே மௌன ப் பேராவல் எழுந்திடும் மனத் துயரோடு புதிய இலைகளின் சல சலப்புக் குரலோடு  ! பறந்து போகும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34

This entry is part 20 of 24 in the series 24 நவம்பர் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 34.மரபியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை…. என்னங்க ​கோபமா வர்ரீங்க…என்ன ​மொகத்தத் திருப்பிக்கிட்டீங்க..ஓ​ஹோ…​ஹோ..ஓ..ஒங்கள ​மெண்டல்னு ​​போனவாரம் ​சொன்னத மனசுல வச்சிக்காதீங்க…அட அது ​பெரிய அறிவியல் ​மே​தை​யோட ​பேரு ​தெரியுமா….என்ன வாயத் திறந்து ஆ…ன்னு பாக்குறீங்க மரபியலின் தந்​தைன்னு ​சொல்​றோ​மே அந்த ​மே​​தையின் ​பெயரத்தான் ​சொன்​னேன். அதப் புரிஞ்சுக்காம நீங்கபாட்டுக்குக் […]

நீங்காத நினைவுகள் – 24

This entry is part 16 of 24 in the series 24 நவம்பர் 2013

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என் பெற்றோர் பற்றியும் தாறுமாறான கணிப்புக்கும் முடிவுக்கும் சிலர் வந்தது பற்றி அறிய நேர்ந்து நான் தொடக்க நாள்களில் திடுக்கிட்டுப் போனதுண்டு. ஆனால், சராசரி மனிதர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டு சமாதானம் செய்தும் கொள்ளும் பக்குவத்தையும் விரைவிலேயே அடைந்து யாரும் […]

நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

This entry is part 13 of 24 in the series 24 நவம்பர் 2013

நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம். 5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய […]

மரணம்

This entry is part 14 of 24 in the series 24 நவம்பர் 2013

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில் கிடந்தது. கணிப்பொறிப் பழுதுகளைக் கவனித்து நீக்கும் பயிற்சி பெற்ற சுலோச்சனாவின் அறை நான்கு அறைகள் தள்ளியிருந்தது. நேரிடையாகச் சொல்லி கையோடு அழைத்துவந்துவிடும் நோக்கத்தோடு வேகமாக இருக்கையைவிட்டு எழுந்த போது துப்பட்டாவின் முனை நாற்காலி விளிம்பில் சிக்கிக்கொண்டது. “அவசரம்னு ஏந்திருக்கறப்பதான் நமக்குன்னு ஆயிரம் […]