ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

This entry is part 17 of 24 in the series 24 நவம்பர் 2013

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் பயிற்சி வகுப்பை நடத்தத் தீர்மானித்தார். மதியம் முழுவதும் உண்பதும் பேசுவதுமாகக் கழித்த மாணவர்களை அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தீவிரப் பயிற்சி வகுப்பாக அது அமைந்தது. சீன நாடகத்தில் சில நேரங்களில் ஆடாமல் அசையாமல் சிலை போல் நிற்க வேண்டும். அதற்காக பயிற்சி செய்வது மிகவும் கடினம். குருவும் யூன் லுங்கும் இரும்புக் கரங்களால் அதைச் செய்யத் தூண்டும் போது கொடுமையிலும் கொடுமை. குரு […]

ஜூனோ (அமெரிக்கா, இயக்குநர் – ஜேசன் ரைட்மன்) மற்றும் ஆதலால் காதல் செய்வீர் (தமிழ்நாடு, இயக்குநர் – சுசீந்திரன்) இரண்டு கலாச்சாரங்களும் ஒரு நிகழ்வும்

This entry is part 15 of 24 in the series 24 நவம்பர் 2013

  ஷைன்சன்   இவ்விரண்டு திரைப்படங்களும் கலைப்படைப்புகள் என்ற அளவில் பெரிய மைல்கற்கள் அல்ல. கலாசாரப் பிரதிபலிப்பு என்ற தளத்திலேயே இவை செயல்படுகின்றன. இவ்விரண்டுமே ஒரே நிகழ்வினை மையமாகக் கொண்டுள்ளன- எதிர்பாராமல் கருவுறுதல். இந்நிகழ்வுக்கு இரு வேறுபட்ட சமூகங்கள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை இத்திரைப்படங்களின் மூலம் காண்கிறோம்.   இரண்டு திரைப்படங்களிலும் வரும் குடும்பங்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவையே. எனவே சமூகப்படிநிலையின் தாக்கத்தைப் பற்றி நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை. கலாச்சாரத் தாக்கமே இரண்டு திரைப்படங்களையும் வேறுபடுத்துகிறது. […]

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

This entry is part 23 of 24 in the series 24 நவம்பர் 2013

  சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே […]

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

This entry is part 5 of 24 in the series 24 நவம்பர் 2013

தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் […]