வெள்ளி மதியம் சிதம்பரம் புறப்பட்டேன். மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்று அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் ஏறினேன்.தெம்மூர் சென்றடைய இரவாகிவிட்டது.தவர்த்தாம்பட்டிலிருந்து வீடு வரை நடந்தே சென்றுவிட்டேன்.மனைவியை கூட்டிச்செல்ல வந்துள்ளதாகக் கூறினேன். அது கேட்டு அப்பா சந்தோஷப்பட்டார். அவளும் மனதுக்குள் மகிழ்ந்தாள். காலையில் பால்பிள்ளை வந்தான். இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றோம். அவன் கையில் தூண்டில் வைத்திருந்தான். சிறிது நேரம் தூண்டில் போட்டோம். ஆற்றில் குளித்தோம். […]