நாடில்லாத் தளத்தில் இருப்போன் !

This entry is part 1 of 11 in the series 26 நவம்பர் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   நாடில்லா மனிதன் அவன் நிஜமாகவே !  வாடிக் கிடப்பது அவன் நாடில்லா தளத்தில் ! தன் நாடில்லா நிலத்தில் யாருக்கும் உதவத் திட்டமிட வேண்டாம் ! குறிக்கோள் இல்லை ! போவ தெங்கே என்றும் அறியான் அவன் ! சிறிதளவு என்னைப் போல, உன்னைப் போல    இல்லையா அவன் ?   நாடில்லா மனிதா ! நான் இப்போது நவில்வதைக் கேள் […]

அவுஸ்திரேலியா சிட்னியில் கலை – இலக்கியம் 2017 தமிழக கவிஞர் வைதீஸ்வரனும் உரையாற்றுகிறார்.

This entry is part 2 of 11 in the series 26 நவம்பர் 2017

  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை – இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services  மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில்  மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் சிற்பி அறக்கட்டளை விருது பெற்றவருமான  கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள […]

திறனாய்வு

This entry is part 3 of 11 in the series 26 நவம்பர் 2017

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார் இன்னொருவர். ’மும்மூன்று ஒன்பது அங்குலம்’ என்று தன் வாதத்திற்கு வாய்ப்பாட்டைக்கொண்டு வலுசேர்த்தார் இன்னொருவர். ’செவ்வாய்க்கிரகத்தில் எல்லா இருகால் முக்கால் பொய்க்கால் விலங்கினங்களுக்கும் ஒன்றரையங்குல நீளம்தான் வால் தெரியுமா’ என்றார் கரையான்சாவடி எங்கேயிருக்கிறதென்று தெரியாதவர். ’அதற்காக என் […]

ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2017

This entry is part 4 of 11 in the series 26 நவம்பர் 2017

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர்  2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு Attachments area

கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 26 நவம்பர் 2017

 அருணா சுப்ரமணியன்  1. வீணாகும் விருட்சங்கள்… வசந்த கால வனத்திற்குள்  எதிர்ப்பட்ட ஏதோவொரு  மரத்தில்  கட்டப்பட்ட  சிறு கூடு  ஏந்தியுள்ள  முட்டைகள்  மழைக்காற்றில்   நழுவி விழ… வனத்தின் வெளியே  வேரூன்றி  கிளை பரப்பி  காத்திருந்து  வீணாகின்றன  விருட்சங்கள் ….. 2.  எட்டாக்கனி  உயிர் காக்கும்  தொழில் ஒன்றே தானா  இவ்வுலகில்  பிழைத்து கிடைக்க.. கனவென்றும்  கடமையென்றும்  கடிவாளம் கட்டிவிட்டு  பந்தய குதிரைகளாக்கி  வரிசைகளில்  காத்து கிடக்கிறோம்…. இலவசமாய்  இனியனவாய்  கிடைக்க வேண்டியன  எல்லாம்  எளியோருக்கு  எட்டாக்கனிகளாய் .. 3. மூளைச்சாவு […]

பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !

This entry is part 6 of 11 in the series 26 நவம்பர் 2017

Posted on November 26, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் மட்டம், கனல் ஏறி கரைப் பகுதிகள் மூழ்க்குது ! மெல்ல  வெப்பம் […]

மழயிசை கவிதைகள்

This entry is part 7 of 11 in the series 26 நவம்பர் 2017

மழயிசை 1.அவள் எங்கே? எப்போது பிறந்தாள்? யார் ஈன்ற பிள்ளை? அவள் குறியை யார் பார்த்தார்கள்? எப்போது பூப்படைந்தாள்? யாருடன் புணர்ந்தாள்? என்று வினாக்கள் விவரமாக.. அலைகடலுக்கு அன்னை என்று பெயர் சூட்டியவர்கள் திண்ணையில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். சூழலை எப்படிச் சமாளிக்கலாம் என்று… 2.நாடு முழுக்க மது ஒழிப்பு மாநாடு கலந்து கொள்வோருக்குக் கோ… கோ… இலவசம் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்  கண்டீசன்ஸ் அப்லை.. 3.தலைவனைச் சந்தித்து ஒரு திங்களாகிறது தோழியுமில்லை, செவிலியுமில்லை பாங்கனுமில்லை, பாங்கியுமில்லை […]

கவிதை

This entry is part 8 of 11 in the series 26 நவம்பர் 2017

மகிழினி அவமானமாய் இருந்தது அத்தனைபேர் முன்னிலையில் திட்டு வாங்குதலென்பது அம்மாவோ அப்பாவோ அதட்டியதில்லை நான் அதட்டியிருக்கிறேன் அன்பாய்த்தான் அவர்களை பதின்ம வயதின் பருவ மாற்றங்கள் பல்வேறு சுரப்புகளைப் பரவ விட்டுக்கொண்டிருக்கும் வேளை… எனக்கும் தெரியாமல் என்னன்னவோ செய்கிறேன் அம்மாவைப் போல் சமூகத்தாரும் புரிதலில் பொறுத்தா கொள்வர் சேற்றைவிடக் கேவலமான செஞ்சொற்களால் முகத்தில் விசிறுகின்றனர் மானம் கொம்பிழப்பதாய் மனம் நினைக்கிறது மாண்டு போதலை ஏற்கிறது போலும் எதிர்த்துப் பேசத் திராணியற்று ஏனோ மலைத்து நின்று குளமோ கிணறோ கயிறோ […]

வாட்ஸ் அப் வாழ்வியல்…!

This entry is part 9 of 11 in the series 26 நவம்பர் 2017

குமரன் ஒரு சமூகம் முன்னெடுத்துச் செல்லும் செயல்பாடுகளின் பரிமாணங்கள் சார்ந்தே அச்சமூகத்தின் தற்கால வாழ்வியல் செறிவு நிர்ணயம் செய்யப்படுகின்றன. உலகமெங்கும் உலாவும் வாட்ஸ் அப் சில ஆண்டுகளாய் ந‌ம் கையிலும் சிக்கியிருக்கிறது. “வசப்பட்டிருக்கிறது” என்று சொல்ல ஆசை தான். ஆனால் குரங்கு கையில் பூமாலை வசப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சொற்குற்றமும் பொருட்குற்றமும் சேர்ந்ததாகி விடாதா? இதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறோம் நாம்? யாரேனும் ந‌ம் வாட்ஸ அப் செயல்பாடுகளை பார்த்து மேலோட்டமாக முடிவெடுப்பார்களாயின், தமிழர்கள் […]

மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

This entry is part 10 of 11 in the series 26 நவம்பர் 2017

அ. பொறுமைக் கல்  –அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience  என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான  வேலை. பிறரைக் கவர்ருவதற்கென  நகாசு வேலைகள் வேண்டும். பேன்ஸி ஸ்டோர் கூட்ட த்தை அள்ள பொன்மூலாம் பூசவேண்டும். ஆனால் […]