சம்பூர் சனா நான் பிறந்ததால் “நீ” இறந்தாய்.. நீ இறந்ததால் “நானும்” இறந்தேன்.. மீண்டும் ஓருயிரென ஆனாயோ..?, என்னை இன்று வாழ்த்துகிறாய்… உன் ஒரு வாழ்த்துக்காக காத்திருந்தேன் பல நாள்.., இன்று என்னை வாழ்த்துகிறாய் “நான்” உயிர் நீத்த பின்னால்… “நன்றி” சொல்ல “நான்” இல்லை.., ஆனாலும் சொல்லுகிறேன் – “கல்”லாய் உள்ளம் ஆகினாலும் இதயம் இன்றும் துடிப்பதனால்…! என் அன்பு வாழுமிடம் உன் இதயம் என்பதனால் “நான்” இறந்து போனபோதும் உனக்குள் வாழ்வேன் இதயத்துடிப்பாய்…! உன் […]
கார்த்திக் பாலா வீட்டிற்கு வெளியிலிருந்து வந்த அந்த அழுகைச் சத்தம் சுவர்களைப் பிளந்து வீட்டுக்குள் எதிரொலித்தது. அந்தி மங்கி இருள் வியாபிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில் அவ்வலறல் அம்பு துளைத்த ஒரு காட்டுப் பன்றியின் கதறலைப் போலிருந்தது. அப்பா வீட்டின் நடுவில் நடுஞ்சாடையாகப் படுக்க வைப்பட்டிருந்தார். அம்மாவும், அத்தையும், சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அழுது அழுது அவர்களின் கண்கள் இரத்தச் சிவப்பேறி வீங்கிப் போயிருந்தன. காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் வறண்டு போயிருந்தது அவர்களின் […]
வையவன் எல்லாக் கைதிகளுமே சின்னஞ்சிறு சிசுக்களாகத்தான் தென்படுகிறார்கள் தூங்கும் போது கைமடித்து ஒருக்களித்து கவிழ்ந்து மல்லாந்து கருப்பைக்குள்ளும் வெளியிலும் ஒரு பாவமும் அறியாது இருந்த அதே நிலையில்.. துயிலின் தாலாட்டில் துவண்டு போன தோற்றத்தில் .. காவலர், நீதிபதி , வழக்கறிஞர் தண்டனை, பாதிக்கப்பட்டோர் மற்றும் தம் குடும்பம் என்று வளரும் சமூகத்தில் அடப் பாவிகளா என்ற சாபம் உறங்குவோருக்குக் கேட்காது விழித்தபின் தான் வெளிப்படுவான் மூத்து முற்றி முதிர்ந்த அந்த ஆதி மனிதன் சற்றே நீடிக்கட்டும் […]
ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் வாழ்வில் துயரம் எட்டிப் பார்த்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வேண்டுதலுக்குப் பிறகு, ஒரு அழகிய மகனை ஈன்றெடுத்தாள் கசுமி. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, “அதிர்ஷ்டச் சிறுவன்” என்ற பொருள் படும்படி, குழந்தைக்கு “கிசிரௌ” என்று பெயரிட்டனர். கசுமியும் இசிரௌவும் மகனைப் பெரிதும் நேசித்தனர். அவனுக்கு எதையும் இல்லை என்று சொல்லாமல், அழுதாலும், கோபித்தாலும், […]
தாத்தா நினைவு தப்பி தன்மை பிறழ்ந்து முன்னிலை மறந்து படர்கைகளை பிழையாக அனுமானித்து முதுமையை வாழுகையில் பரிதாபமா யிருக்கும் கட்டிக் காலங்கழித்தப் பாட்டியையும் பெற்றுப் பேர் வைத்த அம்மாவையும் பேரன்பு காட்டிய எங்களையும்கூட இதுதான் இவர்தான் நான்தான் நீதான் என அடிக்கடி அடையாளம் காட்டியே பேச வேண்டியிருந்தது தேர்தல் விழா தேர்த் திருவிழாவென படு விமரிசையாக நடந்து முடிய கட்சி சார்புக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அவர் சுய நினைவோடு தீர்மாணித்திருக்க முடியா தெனினும் தாத்தாவின் சுட்டு விரலிலும் […]
“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் கூறினான் அவன். “இல்லை நீ ஓயாம வெயில்லேயும் தண்ணியிலேயும் விளையாடிக் கிட்டுதான் இருக்கிறே. எவ்வளவு தடவை சொல்லி இருப்பேன். கேட்க மாட்டேங்கிறே. இப்போ உனக்கு இப்படி காய்ச்சல் வந்திருக்கிறது” என்று கூறியபடியே அவனை மருத்துவரிடம் கூட்டிச் சென்றார் அம்மா. அவனுக்கு காய்ச்சலால் உடம்பு நன்கு கொதித்தது. மருத்துவமனை கொஞ்சம் தொலைவில் இருந்தது, அதனால் பேருந்து […]
வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு. சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது. இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஒட்டுமொத்தமாகக் […]
எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் […]
பற்களான படிக்கட்டுக்களோடு பாசம் புதையக் காத்திருந்தது குளம். தட்டுச் சுற்றான வேட்டியுடன் தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன். விரால் மீன்களாய் விழுந்து துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள். இரவுக்குள் ஒளிய நினைத்து கருக்கத் துவங்கியது தண்ணீர். மொழியற்றவனைப் பார்த்து நாவசைத்துப் பாடத்துவங்கியது குளம். நிலவும் சேர்ந்து இசையமைக்க அவனும் இசைய விரும்பினான். தாலாட்டுப் பாடிய தாயை அணைக்க நீரை நெகிழ்ந்து இறங்கினான்.. உடல்களையும் உடைகளையும் கழுவிக் கிடந்த குளம் இவனைத் தழுவியது. ஈசானமூலைக் கிணறுப் பள்ளம் கைநீட்டி […]
வார்த்தைகளைக் கோர்த்துச் சித்திரங்கள் வரைவது பிடித்தமானது அவளுக்கு. வரையும்போதே வண்ணங்கள் சிதறி விழுகின்றன மண்ணாய் அங்குமிங்கும். மூளை மூடாமல் திறந்து கிடக்கிறது மண்டையோட்டுக்கான வண்ணம் போதாமல். கார்டெக்ஸும் மெடுல்லாக்களும் பற்களாக மாறி துண்டாக்குகின்றன் பேசத்தெரியாத நாக்கை. வரைந்து முடித்தபின் மூளையும் நாவும் வெளியே கிடக்கின்றன வாழ்வதன் தேவையை வலியுறுத்தி.