(Discovery of The Diamond Planet) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட பெருமூச்சில் உப்பிடும் பிரபஞ்சம் சப்பிக் போய் விடும் ஒரு யுகத்தில் ! சுருங்கி மீண்டும் உயிர்தெழும் வேறு பிரபஞ்சம் ! உதிக்கும் விண்மீன்கள் ஈர்த்துச் சுற்ற வைக்கும் புதிய அண்டக் கோள்களை ! கோடான கோடிப் பரிதிகள் நம் சூரிய மண்டலம் போல் இயங்கும் ! சுய ஒளிவீசும் ஒற்றை நியூட்ரான் விண்மீனைச் சுற்றிவரும் […]
இரவு கருத்ததும் கலங்கரை விளக்காய் ஒளிவிடத் தொடங்குகின்றன இன்றைக்கான கனவுகள். ஒளிர்ந்த விளக்குகள் பிடறி சிலிர்க்கும் சவாரிக் குதிரைகளாய் காற்றில் பறக்கின்றன. ஆசைக்காற்றில் உப்பி வண்ண பலூன்களாகி பருக்கத் தொடங்குகின்றன கடல் மண்ணிலிருந்து. பலூன்களைப் பிடித்துச் செல்லும்போது பறக்கும் வெப்பக்காற்று பலூன்களாகி உயரத் தூக்குகின்றன. வளைந்து திகிலோடு வாய் உலரப் பறக்கையில் வால் முளைத்த பட்டங்களாகின்றன. வால் நிலவில் மாட்ட பட்டம் மேகமலையில் முட்டி மாஞ்சா அறுந்து கிடக்கிறது., விடியலில் கடல் அலையைப் பார்த்தபடி. அடுத்த இரவுக்காய்க் […]
நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு வசீகர வாசிப்பு அவருக்கே சொந்தம். உலகமே ஒரு நாடக மேடை. அந்த மேடையில்., எல்லையற்ற வெளியில் ”நாடக வெளி” என்ற நாடகக் குழுவை நடத்திவரும் திரு ரங்கராஜன் அவர்களின் புத்தகம் “ நாடகம் நிகழ்வு […]
பெரு வட்டம் அதனுள் சிறுவட்டம் மீண்டும் உள்வட்டம் கருவட்டம் மையபுள்ளியாய் குறிபலகை ஒன்று.. மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான் வருவோர் போவோர் எல்லாம் மையத்தை நோக்கி எய்த ஆரம்பித்து விட்டனர் அம்பை.. பலகை வரை கூட செல்லாத , பெருவட்ட வளைவில் செருகிய , வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என சிதறியது பலதரப்பட்ட அம்புகள் தோல்வியென சுருங்கியது மனங்கள் குறிபலகை இருக்கிறது என்பதற்காக குறி எய்த வேண்டுமென எவர் சொன்னது ? கல்யாணம், குழந்தை, குட்டி சம்பாத்யம்,பணம்,காசு […]
யாரங்கே என ஏய்த்துக்கொண்டிருந்தது அது பசுத்தோல் நம்பி மேய்ந்துகொண்டிருந்தன அவை பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிக்கொண்டிருந்தது அது பாம்பென்று பயந்தும் மீனென்று வியந்தும் மாட்டிக்கொண்டிருந்தன யாதும் வாங்கமாட்டேன் வரதட்சனை யென விழித்துக்கொண்டது வாலிபம் வெள்ளையுஞ் சொள்ளையு மென வேட்டியுஞ் சட்டையுமோ பட்டும் பகட்டு மென சேலையுஞ் சோளியுமோ அணிந்து இளித்துக்கொண்டிருந்தது அது இருமனம் இணையும் திருமண நிகழ்வை ஒருமனதாக யாவரும் ஏற்றுக்கொண்டிருந்தும் ஆணுக்கு வரவும் பெண்ணுக்கு செலவுமென மாற்றிக்கொண்டிருந்தது அது சிலாகித்தும் சமாளித்தும் சிரித்தும் மழுப்பியும் […]
மாமரத்தில் ஏறி மெலிந்த கிளையைப் பிடித்து மயிரிழையில் தப்பித்து.. செவுனி எறும்புகளிடம் செமத்தியாய்க் கடிவாங்கி.. தோட்டக்காரன் தலையைப் பார்த்து தொடைநடுங்கி ஓடி.. கிடைத்த காயையெல்லாம் மடியில் கட்டி மாறாத கறையாக்கி வந்து.. மற்றவர்களுடன் மணக்க மணக்க பால் வடிய பக்குவமாய்ப் பல்லால் கடித்தும் கல்லில் உடைத்தும் களவாடித் தின்றதுதான் மாங்காய் ! கீத்து மாங்காய் தின்னும் என் பிள்ளை கையில் இருப்பதா மாங்காய் ! -செண்பக ஜெகதீசன்..
சவ்வூடு பரவலின் விதிப்படி பரவுகிறது கோபமும் வெறுப்பும், அடர்ந்திருக்கும் இடத்திலிருந்து குறைந்திருக்கும் இடத்திற்கு, விழிக்குப் புலப்படா ஒரு படலத்தில் ஊடுருவி.. விதிமீறி கிழிகிறது அப்படலம் சில பரிமாற்றங்களில்.. பேசித்தீர்த்துக்கொள்ள எண்ணி முன்னேறுகிறேன்.. மனம்மாறி தீர்த்துப்பேசிடத் தோன்றுகிறது! ஒன்றுமில்லை இன்னும், தீர்ப்பதற்கு, தீர்ந்துபோய்விட்டது எல்லாம்.. இல்லை! தீர்ந்துபோவதற்கு ஒன்றுமே இருந்திருக்கவில்லையோ என்று கூடத்தோன்றுகிறது!!
நான் வாழும் உலகத்துக்குள் மழையாய் நீ…. நீ வாழும் உலகத்துக்குள் மழலையாய் நான்…. வளர்ச்சி அற்று போனாலும் மகிழ்ச்சி உற்று போவேன் உன்னால்.. கள்ளம் இல்லை கபடம் இல்லை என் பாச முல்லை என் செல்ல பிள்ளை உன்னை தவிர எனக்கு யாருமில்லை என்னை விட்டு நீ பிரிந்தால் உடலைவிட்டு உயிர் பிரியும்…. உன்னை விட்டு நான் பிரிந்தால் உயிரை விட்டு உடல் பிரியும்…. நிலவோடு பேசுகையில் உன்னை கொஞ்சிய ஞாபகம்… உன்னோடு பேசுகையில் நிலவுக்கு கொஞ்சம் […]
இன்றைய நாளிதழ் செய்தியில் நேற்று இறந்து இருந்தான் இன்று அதிகாலை வரை உயிரோடு இருந்தவன் வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து சிறிது சிறிதாக இறக்க தொடங்கியிருந்தான் அன்றைய நாளிதழ் செய்திகளை அன்றைக்கே வாசிக்க இயலாதவர்களுக்காக இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். பின்னொரு நாளில் அவர்கள்அச்செய்தியை வாசிக்கநேரும் தருணம் மீண்டும் அவன் இறக்க வேண்டியிருந்ததது. ரவிஉதயன் raviuthayan@gmail.com
செல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை இந்த வாக்கு எந்திரகளுக்கு சிந்திக்கும் அறிவுமில்லை என்ற ஏளனத்தில் மிதந்தன. அடிமட்டத் தொண்டன் நான் அவையின் ஓர் மூலையில் கறிவேப்பிலையாய் கிடந்தேன் எதிகாலத் திட்டங்களை மனதிலும் குறைபாடுகளை மனுவிலும் வைத்துத் தவித்தபடி தேர்தல் சீட்டுக் […]