தமிழுக்குக் கிடைத்த அரிய செல்வங்கள் பழம்பெரும் இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியம், சமய இலக்கியம் எனப் பலவகை உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு கால கட்டத்தில் பாடப்பட்டதாகும். அவற்றில் முத்தொள்ளாயிரம் முக்கியமான நூலாகும். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று மன்னர்களையும் புகழ்ந்து பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு முத்தொள்ளாயிரம். அதில் காதலும் உண்டு வீரமும் உண்டு. அகம், புறம் அடங்கியது. முழுதும் வெண்பாக்களால் ஆனது. மரபிலக்கியம், சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, விமர்சனம் என அனைத்துத் […]
ஜெ.குமார் பசிக்குப் புசிப்பதற்காக எலி தேடியலைந்த பூனையொன்று வழி தவறிக் காடடைந்தது . வேட்டையின் எச்சத்தில் புலி வைத்த மிச்சத்தை உண்டு களித்த அப்பூனை புலிகளும் தன்னினமே எனக்கூறிப் புளகாங்கிதம் அடைந்தது . பெருத்த சப்தத்துடன் ஒலித்த பூனையின் ஏப்பத்தைப் புலியின் உறுமலெனவேக் கொண்டு கும்பிடத் தொடங்கின குள்ள நரிகள். நடை உடை தோற்றம் ஒன்றெனினும் மொழியில் பேதம் கண்ட நக்கீர நரிகளுக்குக் காதில் அழகழகாய்ப் பூச்சுற்றி அப்பிராணியாக்கியது அப்பூனை. பூப்பறித்து செவி சூட்டுவதே பூனையின் வேலையாகிப் […]
ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது. யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள். அறுபதாண்டு குரல்கள் ஓய்ந்து விட்டன. இன அழிப்பு முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. கனவுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. அகதிகள் நிலையை மீட்டெடுக்காமல் கொல்லப்படாமல் திரிவதே சுதந்திரம் என்றாகி விட்ட்து. அந்த நாட்டு எழுத்தாளர்கள் தொடர்ந்து வாழ்தலுக்கான நீதியையும் அநீதியையும் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள்.பேரழிவுகள் தந்த உள்ளார்ந்த துயரங்களைத் […]
——————————————————— Invitation அன்புடன் அழைக்கின்றோம். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் (Kuru Aravinthan) 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகப் பாராட்டு விழாவும், நூல் வெளியீடும் எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற இருக்கின்றது. காலம்: அக்ரோபர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை. October 16th 2015 – Friday நேரம்: மாலை 6: 45 P.M இடம்: Location: BABA Banquet Hall 3300 […]
தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த தன்னுடல் அசைவை கண்டதும் பூனை… தன்னுயிர் கொண்டு அவனுடல் நுழைந்து எழுந்து அமர்ந்தது.. அவனது குரலில் பூனை சொன்னது பூனையாய் இருந்த அவனை நோக்கி, ” நீ வித்தை கற்கும் போதெல்லாம் உடனிருந்து உன்னித்தவனடா நான்.. இனி நீ பூனை… நான் நீ.”என்று…
Cyberwit.net publishers of Allahabad have published my book The Deity of Puttaparthi in India in 414 quatrains. For information.
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா” “சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது” “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் […]
கே.பாலமுருகன் 1 காட்டேரி பாதை – 1955 அம்மாச்சிக்கு மட்டும்தான் லாந்தர் விளக்கைக் கொளுத்தத் தெரியும். மண்ணெண்ணையை உள்ளே விட்டப் பிறகு நீளுருளையாக இருக்கும் ஏதோ ஒன்றை உள்ளே நுழைத்து நுழைத்து வெளியே எடுப்பார். விளக்கு அப்பொழுதுதான் பிறந்த சிறிய வெளிச்சத்துடன் மெல்ல பிரகாசித்துப் பெருகும். பெரட்டுக்குக் கிளம்பும் முன் அந்த விளக்கைக் கொளுத்திவிட்டுக் கையில் பிடித்துக் கொண்டுத்தான் அம்மாச்சி மேட்டுக் காட்டுக்குள் நுழைவார். அங்கிருந்து 500 மீட்டர் காட்டேரி ஒத்தையடி பாதை. இருவர் ஒன்றாகச் சேர்ந்து […]
0 மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை! அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று வாதம் செய்து, கருவை கலைக்க அப்சரா மறுப்பதால், விலகுகிறான் அவளது கணவன் அர்ஜுன். மீரா எனும் பெண் குழந்தையுடன், தனியே திரைப்படத் துறையில் போராடிக் கொண்டிருக்கிறாள் அப்சரா! 27 வருடங்களுக்கு முன் மாயவனம் காட்டில் கொலை செய்யப்படும் மாயா எனும் மனநோயாளி, தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைத் தேடி, […]
0 மேடலி தெரு வாசிகள் ஒரு வினோதக் கலவையானவர்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கம். கொஞ்சம் மேட்டுக்குடி, கொஞ்சம் வறுமைக்கோட்டுக்கு வெகு கீழே. அதனால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு சேட்டுக் கடைகள் இருந்தன. முன்னாலால் சேட் பன்னாலால் சேட் என்று பெயர் பலகைகள் சொல்லும். “ அரைச் சவரத்த வாங்கிக்கினு அம்பது ரூபா நீட்டறான் சேட்டு “ “ யாரு முன்னாலா பன்னாலாலா? “ “ எல்லாம் அந்த பன்னாடை லால்தான் “ வறுமை […]