காரும் களமும்

This entry is part 44 of 54 in the series 4 செப்டம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டைத் தமிழரின் இலக்கியங்களை மூன்று பெரும் பரிவுகளாகப் பகுப்பர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்குத் தோன்றிய காலத்தைச் சங்கம் மருவிய காலம் என மொழிவர். இவ்விலக்கியங்கள் நீதி இலக்கியங்கள், அற இலக்கியங்கள் என வாழங்கப்பெறுகின்றன. சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடு பொருளாக விளங்கியது. அதனை அடியொற்றி வந்த சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இத்தகைய […]

நிலா மற்றும்..

This entry is part 43 of 54 in the series 4 செப்டம்பர் 2011

___________ மழை சேமிப்பு திட்டம்.. மொட்டை மாடியில் பொழிந்த மழைக்கென.. நிலா சேமிப்பு உண்டா ? மொட்டை மாடியில் பொழிந்த நிலவுக்கென .. அவசரகதி தட்டுபடாத பிறிதோரு நேரங்களில் ஒன்று கூடி நாங்கள் நிலா சோறு உண்ண.. மின்-விளக்கு காய்ச்சலில் கழிகிறது எங்கள் முன்இரவுகளும் பகல்களும் அவரவர் அறைகளில்.. சேமிக்க தெரியவில்லை நிலா மற்றும் இன்ன பிற .. – சித்ரா (k_chithra@yahoo.com)

சில்ல‌ரை

This entry is part 42 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சில்ல‌ரை நாண‌ய‌மே நீங்க‌ளும் பெண்க‌ளோ ஒன்றாய் இருந்தால் க‌லக‌லப்புச் ச‌த்தந்தான் பெண்க‌ள்போல் வ‌ட்ட‌மான‌ அழ‌கிய‌ முக‌முட‌ய‌ உங்க‌ள் த‌லைக்குப் பின் தானே பூ இருக்கிற‌து ம‌ங்க‌ய‌ர்போல் ம‌க‌த்தான‌ ப‌க்திகொண்ட‌ உங்க‌ள் காணிக்கையால் கோவில் உண்டிய‌ல் நிரைகிறது மாதர்க‌ள்போல் இர‌க்க‌ குண‌முட‌ய‌ உங்க‌ளால்தான் பிச்சைக்காரர்க‌ள் வாழ்க்கையும் உருள்கிற‌து ஆனால் சிறுவிச‌ய‌த்துக்காக‌ பெரிதாக‌ ச‌ண்டையிட்டால் சில்ல‌ரைத்த‌ன‌ம் என்று சொல்லுவதேன்? இதுவும் பேதைய‌வ‌ர் குண‌ம்தானோ! பா. திருசெந்தில் நாதன்

மன்னிப்பதற்கான கனவு

This entry is part 41 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இப்படியாக தான் வாழ்வியல் கனவு அமைக்கப்படும் என்று போதிக்கப்பட்டது . இதில் இன்னும் நீ வந்திருக்கவில்லை . கலைந்து போன கனவை என்றேனும் சந்திக்க இருப்பாய் வன்மம் கொண்ட காலம் எச்சரித்து கொண்டிருக்கிறது அப்பொழுதும் நீ கண்டிப்பாக வந்திருக்கவில்லை . காத்திருக்கும் அடுத்த நொடி அனைத்துமாக நீயாக இருப்பதற்கு இன்னும் ஒரு வாரம் கடக்க வேண்டிருக்கிறது .. ஆதலால் நீ இன்னும் வந்திருக்கவில்லை . நம்மை காலம் இணைத்திருக்குமாயின் இதையே என் அன்பாக எற்றுகொள் இல்லையெனில் இருக்கவே […]

அந்த ஒரு விநாடி

This entry is part 40 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அந்த ஒரு விநாடியைத்தான் தேடுகிறேன்.. உன் நாட்குறிப்பிலும் என் நாட்குறிப்பிலும், நம் எழுதுகோல்கள் அழுதிருக்கவில்லை என் விழிகளைப் போல்.. ஏதோ ஒரு கடிகாரம் அந்த நொடியோடு நின்றிருக்கும் என்றெண்ணி கண்பதிக்கிறேன், எந்த கடிகாரமும் துடிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை, என் இதயத்தைப்போல்.. சிவந்த கண்களோடும் கனத்த இதயத்தோடும் தேடுகிறேன், பரஸ்பர நம்பிக்கையும் அன்பாலான நம் நட்பில் சந்தேக விஷத்துளி வீழ்ந்த அந்த நொடியை, நம் வாழ்வுகளிலிருந்து நிரந்தரமாக அழிக்க எண்ணி… -கயல்விழி(kayalkarthik91@gmail.com)

திரும்பிப் பார்க்க

This entry is part 39 of 54 in the series 4 செப்டம்பர் 2011

இரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் பற்றியும் ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத உன்னைப்பற்றியே நினைத்திருக்கும் எனக்குள் எப்போதும் உன் உலகம் சுழன்றபடியே இருக்கும் கால மாற்றத்தில் நான் பெரிய ஆல மரமாய் வளர்ந்து நின்ற போதும் பால்ய காலத்தில் எனக்குள் நட்பை விதைத்துச் சென்ற உன்னை தாலாட்டி மகிழ விழுதுகளை வளர்த்து காத்திருந்து தவித்துப் போனது உண்டு உன் பாராமுகத்தால் ஏமாற்றங்களை […]

மானும் கொம்பும்

This entry is part 38 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மண்ணுக்கு மேலே ஒரு மான் கொம்பு தெரிய மண்ணை தன் கூரியக் கொம்பால் தோண்டித் தோண்டி எறிந்தது இளமான். தோண்டித் தோண்டி மண்ணுள் புதைந்த மானைக் காப்பாற்றும் முயற்சியில் மானின் கொம்புகளே ஒடிந்து போக உள்ளே வாடி இலை உதிர்ந்த ஒரு சிறு மரத்தின் வேர்களேத் தெரிந்தன. தன் இழந்த கொம்புகளுக்காய் வருந்தாத மான் புதைந்த மானுக்காய் வருந்திச் சென்றது. சூர்யா நீலகண்டன்

ஜ்வெல்லோன்

This entry is part 37 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பச்சை ஒளிர்ந்தது. ஆன்லைன் சாட்டில் வந்திருக்கிறாள் அவரது தாய்நாட்டு சிநேகிதி.. “என்னம்மா எப்பிடி இருக்கிறே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா..?” “ஆமாம். நீங்க நலமா..” பேச்சு சுருக்கமாய் இருந்தது. எப்பவும் ஒரு ஸ்மைலி கூட வரும் . அதைக் காணோம். சீரியஸா இருக்கா போல என நினைத்தார். “அப்புறம் சாப்பிட்டியா., பசங்க., வீட்டுக்காரர் நலமா ..?” “ ம் அதுக்கென்ன கொறைச்சல்.. “ “ ஏதும் கோவமா இருக்கியோ..” “ஒண்ணுமில்லையே. சும்மாதான்” “சொல்றதுன்னா சொல்லு. பழைய உற்சாகத்தைக் […]

கருணையாய் ஒரு வாழ்வு

This entry is part 36 of 54 in the series 4 செப்டம்பர் 2011

கெம் மருத்துவமனையின் ஒரு செவிலிக்கும். அருணா சென்பக்கின் கதையை எழுத வந்த பிங்கி விராணிக்கும் இடையே நடந்த ஒரு ( கற்பனை) உரையாடல். கருணையாய் ஒரு வாழ்வு…:- ************************************** செவிலி :- அருணாவின் கதையை எழுத வந்தீர்களா.. முடிக்க வந்தீர்களா.?? பிங்கி :- கருணைக் கொலை என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்..? செவிலி :- கொலை என்று சொல்லும் போது அதில் கருணை எங்கே வந்தது.. இந்திய இறையாண்மைப்படியும் வாழும் உரிமைகள் குறித்தே சட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கு. கருணைக் கொலை […]

எங்கிருக்கிறேன் நான்?

This entry is part 35 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மேகங்கள் இருண்டும், மகிழ்ச்சியில்லை மனதில்! மழை கொட்டியும், ஈரமில்லை நினைவில்! இடி உறுமியும், கேட்கவில்லை காதில்! மின்னல் மின்னியும், வெளிச்சமில்லை கண்ணில்! கான்கிரீட் காட்டில் நான்! psatishkumar1970@gmail.com