கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)

This entry is part 34 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கருங்கல் நீ ! காலியாகப் போன மதுக் கிண்ணம் நான் ! நிகழ்வ தென்ன வென்று நீ அறிவாய் நாம் நெருங்கித் தொடும் போது ! சிரிக்கிறாய் நீ உதிக்கும் பரிதி யானது எரிந்து மங்கி மரிக்கும் விண்மீனை நோக்கிச் சிரிப்பது போல் ! +++++++++ காதல் எனது நெஞ்சின் கதவைத் திறக்கிறது ! சிந்தனை சிறைக்கு மீள்கிறது ! பொறுமையும் பகுத்தறிவும் […]

அவன் …அவள் ..அது ..

This entry is part 33 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அவன் ஏதோ ஓர் அடர்வண்ணம் நிரப்பியே அவன் எழுதுகிறான் பலசமயம் அவை புரிவதாயில்லை .. எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும் கையெழுத்து வேண்டாம் என மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில் பிரதி எடுக்கிறான் அப்போதும் அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய் அப்பிக்கொள்கின்றன அவள் .. எழுதிய வார்த்தைகளினூடே கூறா மொழிகளையும் சேர்த்தே படிக்கிறாள் .. விழிகளின் மொழிகளை இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள் ஒட்டிக்கொண்ட வார்த்தைகள் அழகாய் தனித்து தெரிந்தன அடர் நிறமாய் […]

காணாமல் போனவர்கள்

This entry is part 32 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மரத்தில் தன்னந்தனியாய் அழகான ஒரு பறவையைப் பார்த்தேன். முகமலர அதோடு ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த நிலவையும் பார்த்தேன். எதிர்பாராமல் ஒரு மின்னல் கிழித்த துணியாய் மேகத்தை கிழிக்க… பேரிடி முழங்கியது. பெருமழை பெய்தது. பேசிக் கொண்டிருந்த பறவையையும் காணவில்லை. நிலவையும் காணவில்லை. எங்கே போனதோ அவைகள்.

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

This entry is part 31 of 54 in the series 4 செப்டம்பர் 2011

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி செப்டம்பர் 4, ஞாயிறு மாலை சரியாக 4.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி 9444024947 Pareeksha Tamil Theatre group will perform Badal Sircar’s Muniyan directed by Gnani on September 4, Sunday sharp at 4.30 pm at spaces, 1, Eliots beach road, Besant Nagar. Muniyan […]

குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு

This entry is part 30 of 54 in the series 4 செப்டம்பர் 2011

    செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் ஸ்காபரோ விலேச் கொம்ய+னிட்டி சென்டர் 3600 கிங்ஸ்டன் ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்) சிறப்புரை: கல்வியும் சமூக நீதியும் பேராசிரியர் மா. சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்டவனின் குரல் எழுத்தாளர் சோபா சக்தியுடன்  ஒரு உரையாடல் தொடர்புகளுக்கு: 416-7311752– 416-7376351    

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

This entry is part 29 of 54 in the series 4 செப்டம்பர் 2011

முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)

This entry is part 28 of 54 in the series 4 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நினைவில் வைத்துக் கொள் இதை : ஆன்மீகச் சிந்தனை மனிதனின் இயல்பான சுய நினைப்பு ! தங்கக் கட்டிக்கு அதை விற்று விட முடியாது. இன்றைய உலகத்தின் மற்ற செல்வத்தைப் போல் அதைச் சேர்த்துக் குவிக்க இயலாது. செல்வந்தர் தமது ஆன்மீக உணர்வை உதறித் தள்ளி விட்டுத் தமது தங்கக் கட்டிகளை அணைத்துக் கொள்கிறார். அதே சமயத்தில் இளைஞரோ தமது ஆன்மீகச் சிந்தனையைப் […]

புவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )

This entry is part 27 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா       கண்ணுக்குப் புலப்படா கருந்துளை கதிரலை வீசிக் கருவி களுக்குத் தெரிகிறது ! காலவெளிக் கருங்கடலில் பிரபஞ்சங் களுக்குப் பாலம் கட்டுவது கருந்துளை ! பிண்டம் சக்தி ஆவதும் சக்தி பிண்ட மாவதும் இந்த மர்மக் குகையில்தான் ! பிரபஞ்சக் குயவனின் சுரங்கக் களிமண் ! புதிய பிரபஞ்சம் உருவாகும் எதிர்காலக் களஞ்சியம் ! விளைவுத் தொடுவானம் ஒளி உறிஞ்சும் உடும்பு ! விண்மீன் […]

பீமாதாயி

This entry is part 26 of 54 in the series 4 செப்டம்பர் 2011

என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல் ஆணா பெண்ணாவென தெரியவில்லை. என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும் தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும் மிகவும் தணிந்தகுரலில் சொல்லி அதை கொடுத்துதவ வேண்டியது. அந்த ஓலைச் சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த பீமாதாயிடமிருந்து தெரியவேண்டிய கதைகள் மிச்சமிருப்பதாகவும் என்னிடமிருந்து பீமாதாயை மீட்க உத்தேசித்தே இதை கேட்பதாகவும் சற்று சூடேறிய குரலில் திரும்பவும் சொன்னது அந்தகுரல். எனது பரண்களில் கேட்பாரற்று போட்டிருந்த அந்த ஓலைச் சுவடி கட்டுகளிலிருந்து அர்த்த ஜாமங்களில் […]

பிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்!

This entry is part 25 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று. பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள். ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே. இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் […]